For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தாய்ப்பால் அதிகம் சுரக்க வைக்க அம்மாக்கள் என்ன சாப்பிடலாம் !!

|

தாய்ப்பால் வாரமாக உலகமுழுவதும் சுமார் 120 நாடுகள் ஆகஸ்ட்- 1- 7 வரை கொண்டாடுகின்றன. தாய்ப்பால் பிறந்த சிசுவிற்கு எவ்வளவு முக்கியம் என்பதை சொல்வதற்காகத்தான் இந்த வாரம் இப்படி கொண்டாடப்படுகிறது.

குழந்தை பிறந்ததும் அதன் எல்லா உறுப்புகளும் முழுமையாக வளர்ச்சியடைந்திருக்கும் என்று அர்த்தமில்லை. முழுமையாக வளர்ச்சியடைய தாய்ப்பாலிலுள்ள சத்துக்களால் மட்டுமே இது சாத்தியபடுகிறது.

Foods to be consumed for lactating mother

முக்கியமாக கல்லீரல் முழு வளர்ச்சியடைய கட்டாயமாக தாய்ப்பால் தேவை. நோயெதிர்ப்பு மண்டலம் சரியாக உருவாகியிருக்காது. பிறந்த குழந்தைக்கு அவசியமான ஆன்டிபாடி அதன் தாயிடம் சுரக்கும் தாய்ப்பாலில்தான் கிடைக்கும். இதனால் எந்தவித அலர்ஜி இல்லாமல் நோயெதிர்ப்பு செல்களை பெற்று பலப்படுத்தி ஒரு ஆரோக்கியமன குழந்தை வளர்கிறது.

அத்தகைய அருமையான தாய்ப்பாலை சுரக்க வைக்கும் பொறுப்பு தாய்க்கும் அவரை சுற்றியுள்ளவர்களுக்கும் உண்டு. தாய்ப்பால் கொடுக்கும் தாய் நல்ல மன நிலையில் இருந்தால் நேர்மறை எண்ணங்கள் தூண்டப்பட்டு, குழந்தை ஆரோக்கியமாக வளரும்.

குறைந்தது 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே குழந்தைக்கு தரப்பட வேண்டும். எனவே தாய்ப்பால் தர தாய்மார்கள் நிறைய ஆரோக்கியமான உணவுகள் சாப்பிட வேண்டும். அப்படி தாய்ப்பாலை சுரக்க வைக்கும் உணவுகள் எவையென பார்க்கலாம்.


கார்போஹைட்ரேட் :

கோதுமை, அரிசி, ராகி , பிரெட் ஆகியவை பாலை சுரக்க வைக்கும். பாலில் லாக்டிக் அமிலம் சுரக்க கார்போஹைட்ரேட் தேவை. ஆகவே இந்த சத்து நிறைந்த உணவுகளை அதிக அளவு சாப்பிட வேண்டும். மாலை வேளைகளில் பிரட்டை நெய்யில் டோஸ்ட் செய்து சாப்பிட்டு வாருங்கள். தாய்ப்பால் அதிகம் சுரக்கும். ஓட்ஸ் கஞ்சி சாப்பிடுவதும் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கச் செய்யும்.

புரோட்டின் :

பருப்பு வகைகள், தானியங்கள், முளைகட்டிய தானியங்கள் தாய்ப்பால் சுரப்பை தூண்டும். மீன் சாப்பிடுவது மிக மிக நல்லது. முந்திரி, உலர் திராட்சை மற்றும் நட்ஸ் வகைகளை தினமும் ஸ்நேக்ஸ் போல் சாப்பிட்டு வாருங்கள்.

பழச் சாறுகள் :

பழச் சாறுகளிலுள்ள நார்சத்து ப்ரோலாக்டின் ஹார்மோன் சுரக்க செய்கின்றன. இது தாய்ப்பாலின் அளவை அதிகரிக்கின்றன. இள நீர், எலுமிச்சை சாறு, தயிர்,லஸ்ஸி ஆகியவை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். அதேபோல் நிறைய பழங்கள், யோகார்ட் ஆகியவை எடுத்துக் கொள்ள வேண்டும். கேரட் தினமும் பச்சையாகவே எடுத்துக் கொள்ளுங்கள். இதிலுள்ள பீட்டா கரோட்டின் தாய்ப்பாலை அதிகரிக்கச் செய்யும்.

பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் :

தாய்க்கு நிறைய கால்சியம் தேவைப்படுகிறது. இதனால் நிறைய பால், வெண்ணெய், சீஸ், ஆகியவ்ற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். பேரிச்சம் பழத்தை பாலில் போட்டு கொதிக்க வைத்து, அதனை பருகி வந்தால் ரத்த உற்பத்தின் தாய்க்கு அதிகரிக்கும்.

பூண்டு :

பூண்டிலுள்ள ஃபைடோகெமிக்கல் மூலக்கூறுகள் தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்தும். தினமும் நிறைய பூண்டினை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

English summary

Foods to be consumed for lactating mother

Foods to be consumed for lactating mother
Story first published: Thursday, August 4, 2016, 16:39 [IST]
Desktop Bottom Promotion