For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைகளுக்கு பல் முளைக்கும் போது அவர்களின் உடல் எடை குறையுமா?

By Ashok CR
|

பொதுவாக குழந்தைகளுக்கு சீக்கிரமாகவே பல் முளைக்க தொடங்கி விடும். கிட்டத்தட்ட நான்காம் மாதத்தில் இருந்தே இது ஆரம்பித்துவிடும். ஆனால் ஒவ்வொரு குழந்தைக்கும் பல் முளைக்கும் செயல்முறை ஒரே மாதிரியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. குழந்தைகள் எடுத்துக் கொள்ளும் கால்சியத்தின் அளவு போன்ற பல காரணிகளின் அடிப்படையில் தான் இது அமையும். ஒவ்வொரு பல் முளைக்கும் போதும் உங்கள் குழந்தை பல்வேறு அறிகுறிகளை சந்திக்கும். அதில் முக்கியமான ஒரு அறிகுறி பசியின்மை.

பல் முளைக்கும் போது குழந்தைகளின் உடல் எடை குறையுமா? இந்த கேள்வி தான் பல பெற்றோர்களுக்கு பெரிய பிரச்சனையாக உள்ளது. இது ஒரு இயல்பான வழக்கமே. ஏற்கனவே சொன்னதை போல் ஒவ்வொரு பல் முளைக்கும் போதும் குழந்தைக்கு பசியின்மை ஏற்படும். இதனால் உடல் எடை குறைப்பு ஏற்படும். பசியின்மை ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது பல் முளைக்கும் போது குழந்தைக்கு ஏற்படும் அசௌகரியம் அல்லது வலியே.

பல் முளைக்கும் போது ஈறுகளில் ஏற்படும் அழற்சி மற்றும் அதனால் உண்டாகும் வலி ஆகிய காரணத்தினால் குழந்தைக்கு அசௌகரியம் ஏற்படும். ஈறுகளுக்கு எதிராக பற்கள் தள்ளிக்கொண்டே வெளியே வரும் போது ஏற்படும் அழுத்தத்தினால் குழந்தைகளுக்கு பசியின்மை ஏற்படும். பல் வெளிவருவதற்கு 4 நாட்களுக்கு முன்பே இந்த வலியும் அசௌகரியமும் ஏற்படும். மேலும் இது 3 நாட்களுக்கு நீடிக்கும்.

சரி அப்படியானால் பல் முளைக்கும் போது குழந்தைகளின் உடல் எடை குறையுமா? பல் முளைக்கும் போது உங்கள் குழந்தைகளின் உடல் எடை குறைகிறதா என்பதை கீழ் கூறிய வழிகள் மூலமாக தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நீரேற்றம்

நீரேற்றம்

பல் முளைக்கும் போது, குழந்தைகளுக்கு எரிச்சல் ஏற்படுவது இயல்பே. வலியினால் அவர்களால் சாப்பிடவோ, குடிக்கவோ முடியாது. இதனால் நீர்ப்போக்கு ஏற்படும். அதனால் முடிந்த வரையிலான நீர் பானங்களை கொடுங்கள். இதனால் அவர்கள் நீரேற்றத்துடன் இருப்பார்கள்.

எலக்ட்ரோலைட்

எலக்ட்ரோலைட்

நீர்ப்போக்கு ஏற்படும் போது அதற்கான சிறந்த தீர்வாக விளங்குவது பீடியாட்ரிக் எலக்ட்ரோலைட் தீர்வுகள். இதனால் சோடியம் அளவு அதிகரிப்பதால், குழந்தைகளுக்கு நீர்ச்சத்து அதிகரிக்கும்.

வலி நிவாரணிகள்

வலி நிவாரணிகள்

அசெட்டபினோஃபென் போன்ற வாய்வழி வலி நிவாரணிகள் வலியைக் கட்டுப்படுத்த உதவும். குழந்தைகளுக்கு ஏற்படும் பல் வலியை தீர்க்க இதுவும் ஒரு சிறந்த வழியாகும். மருத்துவரை கலந்தாலோசித்த பிறகு தான் அதனை எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும்.

அதிக கலோரிகளை கொண்ட பானங்கள்

அதிக கலோரிகளை கொண்ட பானங்கள்

பல் முளைக்கும் போது உண்ண மறுக்கும் குழந்தைகளை கையாள்வதற்கு உள்ள சிறந்த வழிகளில் ஒன்று தான் இது. உங்கள் குழந்தைக்கு அதன் பிரச்சனையை எடுத்துக் கூற முடியாது. அதனால் பிணியால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தையை கவனிக்க உங்களுக்கு கூடுதல் பொறுமை வேண்டும். உங்கள் குழந்தை சற்று நலமான பிறகு, சில அதிக கலோரிகளை கொண்ட பானங்களை அவர்களுக்கு குறைந்த அளவில் கொடுக்கலாம். இதனால் குழந்தைக்கு பசி ஏற்படாமல் இருக்கும்.

குளிர்ச்சியான உணவுகள்

குளிர்ச்சியான உணவுகள்

பல் முளைப்பதால் ஏற்படும் அசௌகரியத்தில் இருந்து உதவ குளிர்ந்த தயிர் அல்லது பழங்களை பயன்படுத்துங்கள். குழந்தைக்கு கொடுக்கும் முன் உணவுகளை குளிர்சாதன பெட்டியில் வைத்து, அதன் பின் கொடுக்கவும். இதமாக இருக்கும் குளிர்ந்த உணவை குழந்தைகள் விரும்புவார்கள்.

மென்மையான உணவுகள்

மென்மையான உணவுகள்

அந்த சின்ன ஈறுகளை மனதில் கொண்டு, அவர்கள் சுலபமாக மெல்லக்கூடிய மென்மையான உணவுகளை கொடுங்கள். உணவை கொடுப்பதற்கு முன் குழந்தைகளுக்கு ரப்பர் டீத்திங் அல்லது துவைத்த துணியை கொடுத்து கடிக்க வையுங்கள். இதனால் வலி மற்றும் அசௌகரியத்தில் இருந்து அவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.

உங்கள் குழந்தைகளுக்கு பல் முளைக்கும் போது உடல் எடை குறைகிறது என நீங்கள் வருத்தப்பட்டால் மேற்கூறிய ஐடியாக்களை முயற்சி செய்து பாருங்களேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Do Babies Lose Weight When Teething?

Do babies lose weight while teething? The following are a few ways to know if your baby is losing weight while teething.
Desktop Bottom Promotion