For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைகள் ஏன் சில நேரங்களில் பால் அருந்த மறுக்கின்றனர்...?

By Nithya Devi Muthuraman
|

குழந்தை பால் குடிக்கவில்லையென்றால் அது தாய்மார்களுக்கு பெரும் கவலையை உண்டாக்கும். ஏன் உங்கள் குழந்தை பால் அருந்தவில்லை என்பதற்கு ஏராளமான காரணங்களை பட்டியலிடலாம். உங்கள் குழந்தை ஏன் பால் அருந்த மறுக்கிறது என்பதற்கான காரணங்களை அறிந்து கொள்ள மேலே படியுங்கள். உங்கள் குழந்தைக்கு பால் மட்டுமே ஆகாரமாக இருந்து, அதனை குழந்தை குடிக்க மறுத்தால் நீங்கள் குழந்தை நல மருத்துவரை உடனே அணுகுதல் மிகவும் முக்கியம்.

கைக்குழந்தை பால் குடிக்க மறுக்கும் சூழல் பெற்றோருக்கு பிரச்சனை அளிப்பதாகவும், மிகுந்த சவாலாகவும் இருக்கும். இத்தகைய சூழல் திடீரென உருவாகி இருக்குமானால், ஏதேனும் பிரச்சனை என்றோ, உங்கள் குழந்தை ஏதோ அசௌகரியமாக உணர்ந்துள்ளது என்றோ அர்த்தம். அதனாலேயே அது பால் அருந்த மறுத்திருக்கலாம். ஆனால் இத்தகைய சூழல் பிறப்பிலிருந்தே நிலவி வருமானால், குழந்தைக்கு தாயின் மார்பிலிருந்து பால் அருந்துவதில் ஏதோ அசௌகரியம் இருப்பதாகவே அர்த்தம். இதற்கான காரணம் மர்மமாகவே உள்ளது.

சுவாரஸ்யமான ஒன்று: தாய்ப்பால் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

சில வேளைகளில் பிறந்தவுடன் தாயின் முளைக்காம்பைப் பற்றி பால் அருந்தும் செயலைத் தொடங்குவது குழந்தைக்கு சிரமமாக இருக்கும். சில சமயங்களில் முதல் சில தடவைகளில் சாதாரணமாக பால் அருந்திய குழந்தை போகப் போக அது பால் அருந்த கற்றுக்கொள்ளும் சமயத்தில் சில நேரம் பால் அருந்த மறுக்கலாம்.

குழந்தை பிறப்பில் இருந்து பால் புகட்டுவதில் எவ்வித பிரச்சனைகளும் இன்றி பல நாட்கள் கழிந்த பின்னரும் கூட இப்பிரச்சனை எழலாம். இதற்குப் பின்னணியில் இருக்கக்கூடிய காரணங்கள் நிறைய உள்ளன. உங்களின் குழந்தை பால் அருந்த மறுப்பதற்கு இவற்றுள் எது காரணமாக உள்ளது என்பதைக் கண்டறிந்தால் தான் அதனை நீங்கள் சரிப்படுத்த முடியும்.

கைக்குழந்தை ஏன் பால் அருந்த மறுக்கிறது என்பதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா? இங்கு குழந்தை ஏன் பால் குடிக்கவில்லை என்பதற்கான சில காரணங்கள் பின்வருமாறு பட்டியலிடப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிறப்பிலேயே உண்டான காயம்

பிறப்பிலேயே உண்டான காயம்

பிறப்பிலேயே உண்டான காயம் என்பது கடினமான பேறுகாலத்துடன் குறைமாத காலத்தில் பிறந்த குழந்தைகளிடையே சர்வ சாதாரணமாகக் காணப்படக்கூடியதாகும். குழந்தையை தூக்கியவுடனேயே அது அழுகிறதா அல்லது பால் கொடுக்க முயற்சிக்கும் போது மட்டும் தான் அழுகிறதா என்பதை முதலில் கண்டறிய வேண்டும்.

சுவாசப் பிரச்சனை

சுவாசப் பிரச்சனை

சில சமயங்களில் கைக்குழந்தைகள் பால் புகட்டும் போது மூச்சு விடுவதற்கு சிரமப்படுவார்கள். பாலை உறிஞ்சிக் குடித்து முழுங்குவதற்கு மிகவும் சிரமமாக இருப்பதனால் பால் அருந்த மறுப்பார்கள்.

வாய் ஒவ்வாமை

வாய் ஒவ்வாமை

சில குழந்தைகள் தங்கள் வாய்க்கு ஒவ்வாத காரணத்தினால் எதையுமே வாய் மூலம் உட்கொள்ள விரும்பாமல் பால் அருந்த மறுப்பர்.

இதர விருப்பங்கள்

இதர விருப்பங்கள்

குழந்தைகள் குறிப்பிட்ட வகை மற்றும் முறையில் பால் புகட்டுதலை விரும்புவார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. இம்முறையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அவர்கள் பால் அருந்த மறுப்பர். பொதுவாக புட்டி மூலம் பால் புகட்டப்படும் குழந்தைக்கு, அதன் தாயல்லாது வேறொருவர் பால் புகட்ட முற்படும் போதே இத்தகைய பிரச்சனை ஏற்படுகிறது.

வலி

வலி

நோய்தொற்றினால் காதில் ஏற்படக்கூடிய வலி அல்லது வேறு ஏதேனும் அசௌகரியம் காரணமாக குழந்தை அவதிப்பட்டுக் கொண்டிருக்கலாம். குழந்தைகள் தங்களின் அவஸ்தையை அழுகையின் மூலமும், பால் அருந்த மறுப்பதன் மூலமுமே பெரும்பாலும் வெளிப்படுத்துவர்.

வயிற்றுப் பிடிப்பு

வயிற்றுப் பிடிப்பு

வயிற்றுப் பிடிப்பினால் உண்டாகும் வலியினால் அவதிப்படும் பெரும்பாலான குழந்தைகள் அழுவார்கள். அவர்களை சமாதானப்படுத்துவது மிகவும் கடினமாக இருக்கும். இது பொதுவாக அஜீரணக் கோளாறு, உணவு வகைகளுக்கு கூரிய உணர்வுத் திறனுடன் இருத்தல் அல்லது வேறு ஏதேனும் காரணத்தினாலேயே ஏற்படுகிறது.

ஒவ்வாமைகள்

ஒவ்வாமைகள்

உங்கள் குழந்தை பால் அருந்த மறுத்து, அதற்கான காரணத்தை கண்டறிய இயலவில்லை என்றால், உங்கள் குழந்தைக்கு பாலின் மீது ஒவ்வாமை உள்ளதா இல்லையா என்பதை சோதியுங்கள். சில வேளைகளில் உங்கள் குழந்தைக்கு பாலின் மீது ஒவ்வாமை இருக்கக்கூடும்; அதனாலேயே கூட உங்கள் குழந்தையினால் பால் அருந்த இயலாமல் போகலாம்.

புலன்கள் சார்ந்த பிரச்சனைகள்

புலன்கள் சார்ந்த பிரச்சனைகள்

அதிக அளவிலான வெளிச்சம் அல்லது சத்தம் அல்லது உங்கள் குழந்தையை அசௌகரியப்படுத்தும் ஏதோ ஒன்று பால் அருந்தும் செயலை நிம்மதியாக செய்யவிடாமல் அதனை தடுக்கக்கூடும்.

உடல்நலக்குறைவு

உடல்நலக்குறைவு

சில நேரங்களில் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கலாம். அதனால் கூட பால் அருந்த மறுக்கலாம். உண்மையில் உடல்நலக் குறைபாட்டின் முதல் அறிகுறியே பால் குடிக்க முரண்டு பிடிப்பது அல்லது உட்கொள்ளும் பாலின் அளவு குறைதல் போன்றவையேயாகும்.

பாலின் வரத்து

பாலின் வரத்து

சில வேளைகளில் பாலின் வரத்து அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருப்பதை தாய் அறிவதில்லை. அதனால் கூட குழந்தை பால் அருந்த மறுக்கலாம்.

குழந்தை பால் அருந்த விரும்பாத பட்சத்தில், அதற்கான காரணத்தை கண்டறிவது மிகவும் முக்கியம். மேலும், இந்த பிரச்சனை குறிப்பிட்ட காலத்திற்குள் சரியாகாவிட்டால், குழந்தை நல மருத்துவரை உடனடியாக அணுகி இப்பிரச்சனைக்கு தீர்வு காண்பது அவசியம். குழந்தை பிறந்து சில மாதங்களே ஆன நிலையில், குழந்தை பாலை மட்டுமே உட்கொள்ளும் பட்சத்தில் இத்தகைய சூழல் உருவாகுமானால் கூடிய விரைவில் மருத்துவரை அணுகுவது மிக மிக முக்கியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Baby Does Not Drink Milk

Finding that the infant does not drink milk is very problematic and challenging situation for parents. If this situation has arisen all of a sudden, there might be some problem or your child is having some discomfort and so he refuses to drink milk. Here are few reasons why your baby must not be drinking milk.
Desktop Bottom Promotion