For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதனால் ஏற்படும் உடல்நல நன்மைகள்!!!

By Ashok CR
|

உங்கள் அரவணைப்பில் இருந்தால் உங்கள் குழந்தை பேரின்பம் அடையும். அதற்கே அப்படி என்றால் அதன் உடல் முழுவதும் மசாஜ் செய்தால் இன்னும் எப்படி சந்தோஷப்படும். குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதனால் அவர்கள் பல விட உடல்நல பயன்களை பெறுகின்றனர் என்று பல ஆய்வுகள் கூறுகிறது. அது குழந்தைகளுக்கு சொகுசை ஏற்படுத்தி அமைதியாக தூங்க வைக்கும். மேலும் மலச்சிக்கல் மற்றும் வாய்வு பிரச்சனைகளுக்கு நல்ல நிவாரணியாக விளங்கும்.

அன்பு கலந்த உங்களின் ஸ்பரிசம் குழந்தைகளுக்கு பல நன்மைகளை உண்டாக்கும். உடல்நல பயன்களை தவிர மன ரீதியாக உங்கள் மீதுள்ள பிணைப்பை அதிகரிக்கவும் உதவுகிறது இந்த மசாஜ். தினமும் ஒரே நேரத்தில் மசாஜ் கொடுக்க பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் மசாஜ் கொடுக்க சிறந்த நேரம் என்றெல்லாம் எதுவும் இல்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அன்பாக நீங்கள் நீவி விடும் இந்த மசாஜை எந்நேரம் வேண்டுமானாலும் செய்யலாம்.

குழந்தைகளுக்கு தினமும் சிறிது நேரம் மசாஜ் செய்தாலே போதுமானது. அதனால் அவர்களுக்கு கிடைக்க போகும் உடல்நல பயன்கள் பல உள்ளது. குழந்தைகளுக்கு மசாஜ் செய்யும் டிப்ஸ் சிலவற்றை நீங்கள் அறிந்து வைத்திருந்தால் மசாஜை ஆனந்தமாகவும் வெற்றிகரமாகவும் செய்து முடிக்கலாம். இதோ, உங்களுக்காக சில மசாஜ் டிப்ஸ்களை நாங்கள் கூற போகிறோம். அவைகளை பின்பற்றி உங்கள் குழந்தைகளுக்கு உடல்நல பயன்களை அளித்திடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிணைப்பு

பிணைப்பு

குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதனால் கிடைக்கும் பெரிய பயன் உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் ஏற்படும் பாச பிணைப்பே. ஸ்பரிசம் என்பது உங்கள் குழந்தைக்கு ஆயிரக்கணக்கான வார்த்தைகளை வெளிப்படுத்த ஒரு சிறந்த வழிவகையாகும். நீங்கள் அன்பாக தடவி கொடுப்பதால் உங்கள் குழந்தை பாதுகாப்பாக உணரும். இதனால் நீங்கள் அவர்கள் அருகில் இருக்கும் வேளையில் அவர்கள் சந்தோஷமாக இருப்பார்கள்.

நல்ல தூக்கம்

நல்ல தூக்கம்

குழந்தைகளை அன்பாக வருடும் போது அவர்கள் அமைதி அடைவார்கள். உங்கள் தூக்கத்துக்கு நல்ல இசை வழி வகுப்பதை போல் உங்கள் விரல்களால் நீங்கள் வருடும் போது உங்கள் குழந்தைகளுக்கும் நல்ல தூக்கம் வரும். இதனால் அவர்கள் தூங்க நல்ல சொகுசான சூழல் உருவாகும்.

இரத்த ஓட்டம் மேம்படும்

இரத்த ஓட்டம் மேம்படும்

மசாஜ் செய்வதனால் உடலில் உள்ள இரத்த ஓட்டம் மேம்படும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இது குழந்தைகளுக்கும் பொருந்தும். நன்றாக மசாஜ் செய்யும் போது அவர்களின் இரத்த ஓட்டம் மேம்படும். இதனால் ஏற்படும் அனைத்து உடல்நல பயன்களும் அவர்களை வந்தடையும்.

வாய்வை வெளியேற்றும்

வாய்வை வெளியேற்றும்

குழந்தையின் வயிற்றுப் பகுதியை சுற்றி மசாஜ் செய்தால் வாய்வினால் ஏற்பட்டுள்ள வயிற்று வழியை அது நீக்கும். மசாஜ் செய்யும் போது முட்டியையும் பாதங்களையும் ஒன்றாக பிடித்துக் கொண்டு, முட்டியை வயிற்றை நோக்கி மெதுவாக அமுக்குங்கள். இது குழந்தைக்கு ஏற்பட்டுள்ள வாய்வுகளை வெளியற்ற உதவும் முக்கியமான டிப்ஸ்களில் ஒன்று.

மலச்சிக்கலை தவிர்க்கும்

மலச்சிக்கலை தவிர்க்கும்

மலச்சிக்கல் என்பது குழந்தைகளுக்கு ஏற்பாடும் ஒரு பொதுவான பிரச்சனையே. குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதால் அது மலச்சிக்கலை தவிர்த்து அவர்களுக்கு பெரிய பயனை அளிக்கும். வயிற்றுப் பகுதியை சுற்றி மசாஜ் செய்தால் மழம் கழித்தல் மேம்பட்டு, மலச்சிக்கலை தவிர்க்கும்.

அமைதி

அமைதி

குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதன் முக்கிய நோக்கமே அவர்களுக்கு அமைதியான ஓய்வை ஏற்படுத்துவதே. அழும் குழந்தையை சமாதானப்படுத்த அவர்களுக்கு மென்மையாக மசாஜ் செய்தாலே போதுமானது. குழந்தைகளின் வளர்ச்சிக்கு முக்கியமாக தேவைப்படுவது அமைதியான ஓய்வு. அதனை பெற அவர்களுக்கு மசாஜ் தேவைப்படுகிறது.

அறிவாற்றல் வளர்ச்சி

அறிவாற்றல் வளர்ச்சி

மசாஜ் செய்யும் போது உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் ஒன்றாக செலவிட நேரம் கிடைக்கும். இந்த நேரத்தை உங்கள் குழந்தையின் அறிவாற்றலை வளர்க்க நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்நேரத்தில் உங்கள் குழந்தையுடன் பேசுங்கள் அல்லது பாடுங்கள்.

பிறப்புக்குப்பின் ஏற்படும் மன அழுத்தத்திற்கு சிகிச்சை

பிறப்புக்குப்பின் ஏற்படும் மன அழுத்தத்திற்கு சிகிச்சை

குழந்தைகளுக்கு செய்யும் மசாஜால் ஏற்படும் பயன்கள் குழந்தைக்கு மட்டும் தான் என்று கூறி விட முடியாது. ஒரு தாய்க்கு பிரசவத்திற்கு பின் ஏற்படும் மன உளைச்சலை போக்கிடவும் இந்த மசாக் பெரிதும் உதவி செய்கிறது. மசாஜ் செய்வதால் உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் இடையே உள்ள பிணைப்பு அதிகரிப்பதால் இந்த மன உளைச்சல் நீங்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits Of Baby Massage

Here are some effective baby massage tips that will help you reap the health benefits of baby massage.
Desktop Bottom Promotion