For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தை ஏப்பம் விடலன்னு பயப்படுறீங்களா? முதல்ல இத படிங்க...

By Maha
|

புதிய அம்மாவாக இருப்பவர்களுக்கு குழந்தைகளின் ஒவ்வொரு செயலையும் ரசிக்கத் தான் தோன்றும். மேலும் குழந்தைகளுக்கு எந்த வலியும் வராதவாறு பார்த்துக் கொள்வார்கள். குறிப்பாக குழந்தைகள் ஏப்பம் விடுவது மிகவும் அழகாக இருக்கும். ஆனால் அந்த ஏப்பம் சில குழந்தைகளுக்கு வர வேண்டிய நேரங்களில் சரியாக வராமல் இருக்கும். அவ்வாறு ஏப்பம் வராமல் இருந்தால், அது அவர்களுக்கு பிரச்சனை என்று நினைத்து பலர் புலம்புவார்கள்.

சொல்லப்போனால், குழந்தைகளுக்கு ஏப்பமானது, உடலில் அதிகப்படியான வாயு நிறைந்திருப்பதால், வருவதாகும். இத்தகைய வாயுவானது தானாகவே சரியாக வெளியேறிவிடும். சிலசமயங்களில் மட்டுமே அது சரியான வெளியேறாமல், குழந்தைகளது வயிற்றை எப்போதும் உப்புசத்துடன் வைத்துக் கொள்ளும். இந்த பிரச்சனை இருந்தால், குழந்தைகள் அழத் தொடங்குவார்கள். அதுமட்டுமின்றி, இத்தகைய வாயுவானது குழந்தைகள் வயிற்றில் பால் குடிக்கும் போது தான் செல்லும்.

ஏனெனில் ஆரம்பத்தில் குழந்தைகளுக்கு சரியாக பால் குடிக்கத் தெரியாது. அந்த நேரத்தில் அவர்கள் பாலுடன் அளவுக்கு அதிகமான காற்றையும் உட்கொள்ள நேரிடும். எனவே அவர்கள் வயிறானது பாலை விட, காற்றால் அதிகம் நிறைந்திருக்கும். எனவே இந்த நேரத்தில் உள்ளே செல்லும் வாயுவானது வெளியேறிவிட வேண்டும். ஆனால், குழந்தைகளது ஏப்பத்தைப் பற்றிய உண்மைகளை அனைத்து புதிய அம்மாக்களும் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும். அது பின்வருமாறு:

Baby care
* தாய்ப்பால் குடிக்கும் போது வரும் ஏப்பத்தை விட, பாட்டில் பால் குடிக்கும் போது வரும் ஏப்பம் மிகவும் குறைவு. ஏனெனில் இந்த நேரத்தில் குழந்தைகள் அதிகப்படியான காற்றை உட்கொள்வதில்லை. எனவே பாட்டில் பால் குடித்தப் பின்னர் குழந்தைகள் ஏப்பம் விடவில்லை என்று நினைத்து கவலைப்பட்டு, அவர்களுக்கு ஏப்பம் விடுவதற்கான உடற்பயிற்சியைத் தர வேண்டாம். இந்த நேரம் குழந்தைகள் எந்த ஒரு தொந்தரவுமின்றி, நிம்மதியாக தூங்கினால், அவர்களது வயிற்றில் வாயு இல்லை என்று அர்த்தம்.

* குறிப்பாக, 6-8 மாதம் ஆனப் பின்பு குழந்தைகள் நிச்சயம் ஏப்பம் விட வேண்டிய அவசியம் இல்லை. இநத் வயதில் அவர்களுக்கு தானாகவே ஏப்பமானது வந்துவிடும். இத்தகைய பிரச்சனை பிறந்த குழந்தைகளுக்கு மட்டுமே இருக்கும். அதுவும் ஒருசில குழந்தைகளுக்கு மட்டுமே. ஏனெனில் அவர்களுக்கு தாய்ப்பாலை சரியாக குடிக்கத் தெரியாதது தான் காரணம்.

* பிறந்த குழந்தைகள் தாய்ப்பால் குடிக்கும் போது இடையில் அழத் தொடங்கினால், அப்போது சற்று இடைவேளை விட வேண்டும். ஏனெனில் புதிய அம்மாக்களுக்கு சரியான நிலையில் பால் கொடுக்காமல் இருந்தால், குழந்தைகளது வயிற்றில் வாயுவானது அதிகப்படியாக வந்துவிடும். இந்த நிலையில் சில குழந்தைகளுக்கு ஏப்பம் வராமல் தொந்தரவாக இருக்கும்.

குழந்தைகளுக்கு எப்படி ஏப்பம் வர வைப்பது?

ஒருவேளை குழந்தைகளுக்கு ஏப்பம் வராமல், பெரும் தொந்தரவைக் கொடுத்தால், அப்போது அவர்களுக்கு ஒரு சில செயல்களை செய்வதன் மூலம் வரவழைக்கலாம். ஆனால் இந்த முறை அனைத்து குழந்தைகளுக்கும் இல்லை. ஏனென்றால், சில பிறந்த குழந்தைகளுக்கு ஏப்பம் தானாக வந்துவிடும். ஆனால் சில குழந்தைகளுக்கு வராமல் இருக்கும். எனவே அத்தகைய குழந்தைகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

* தாய் குழந்தையை தன் மார்பகத்தில் படுக்க வைத்து, குழந்தையின் முதுகில் மெதுவாக தட்டிக் கொடுக்க வேண்டும்.

* குழந்தையை மடியில் படுக்க வைத்து, அவர்களது வயிற்றை மெதுவாக அழுத்த வேண்டும். இதனாலும் வாயுவானது வெளியேறிவிடும்.

பொதுவாக குழந்தைகளுக்கு ஏப்பமானது இயற்கையாகவே வந்துவிடும். எனவே கவலைப்பட வேண்டாம். என்ன தோழிகளே! நீங்கள் உங்கள் குழந்தையிடம் இந்த விஷயத்தில் பயந்ததுண்டா?

English summary

Why Your Baby Must Burp? | குழந்தை ஏப்பம் விடலன்னு பயப்படுறீங்களா? முதல்ல இத படிங்க...

When you breastfeed your baby, the baby tends to swallow a lot of gas along with the milk. This makes the baby's tummy very gassy. Burping your baby can actually hep you get rid of this extra gas. However, you need not to make the baby burp every time after you breastfeed. Here are some facts that all new moms should know.
Story first published: Tuesday, February 12, 2013, 14:42 [IST]
Desktop Bottom Promotion