For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தையின் தலை சரியான வடிவத்தில் இருக்க சில டிப்ஸ்....

By Maha
|

நிறைய பேருக்கு சுகப்பிரசவம் நடந்திருக்கும். ஆனால் அவ்வாறு சுகப்பிரவசம் நடக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே மாதியான வடிவில் தலை இருக்கும் என்று சொல்ல முடியாது. ஏனெனில் சில சமயங்களில் சிலருக்கு தலையானது வித்தியாசமான வடிவில், அதாவது நீளமாக, வட்டமாக, ஏன் சிலருக்கு சதுர வடிவில் கூட தலை இருக்கும். இவை அனைத்திற்கும் நிறைய காரணங்கள் இருக்கின்றன. அந்த காரணங்கள் என்னவென்று பார்ப்போமா!!!

ஃபோர்செப்ஸ் பிரசவம்: இந்த வகையான பிரசவத்தில் குழந்தையானது யோனிக் குழாயிலிருந்து வெளிவரும் போது, நடுவில் சிக்கிக் கொள்ளும். அப்போது குழந்தையின் உடல் வெளிவந்து, தலை வெளியே வராமல் இருக்கும். அந்த நேரம் ஃபோர்செப்ஸ் பயன்படுத்தி குழந்தையின் தலையை வெளியே இழுக்கும் போது, மென்மையாக இருக்கும் குழந்தையின் தலையானது வடிவம் மாறிவிடும்.

Remedies To Correct Shape Of Baby's Head

குழந்தை வெளிவரும் குழாய் குறுகியிருப்பது: இந்த வகையில் பிரசவம் நடக்கும் போது, குழந்தை வெளிவரும் குழாயானது குறுகியிருந்து, கருவில் உள்ள குழந்தை வெளிவரும் போது கஷ்டப்பட்டு வெளிவந்தால், அப்போது குழந்தையின் தலை வடிவமானது மாறும்.

குழந்தையை கையாளுதல்: பிறந்த குழந்தை ஒரு மென்மையான பஞ்சு போன்றது. எப்படி ஒரு பஞ்சை கையாள்கிறோமோ, அதேப் போன்று குழந்தையையும் கையாள வேண்டும். இல்லையெனில் குழந்தையின் தலை வடிவம் மாறிவிடும்.

இத்தகைய காரணங்களால் குழந்தையின் தலையின் வடிமானது மாறியிருந்தால், அத்தகைய வடிவத்தை சரிசெய்ய ஒரு சில இயற்கை வழிகள் உள்ளன. அவை என்னவென்று படித்து தெரிந்து கொண்டு, குழந்தையின் தலை வடிவத்தை சரிசெய்யுங்கள்.

* இது ஒரு பழமையான முறை. இந்த முறையில் குழந்தையின் தலை வடிவத்தை சரிசெய்ய, கடுகு விதையால் செய்யப்பட்ட தலையணையில் குழந்தையை படுக்க வைக்க வேண்டும். இதனால் அந்த மென்மையான கடுகு தலையணையானது சரியான அழுத்தத்தை தலைக்கு கொடுத்து, சரியான வடிவில் கொண்டு வர உதவும். இது ஒரு சிறந்த பாட்டி வைத்தியம்.

* குழந்தைகளை படுக்க வைக்கும் போது எப்போதும் ஒரே திசையில் படுக்க வைக்காமல், அவர்களை அவ்வப்போது திசை மாற்றி படுக்க வைக்க வேண்டும். இதனாலும், தலையை சரியான வடிவத்தில் கொண்டு வர முடியும்.

* குழந்தை ஒரே திசையைப் பார்த்துக் கொண்டே இருந்தால், தலையின் வடிவம் பாதிக்கப்படும். எனவே அவர்கள் ஒரே திசையை பார்த்துக் கொண்டிருக்காமல் இருக்க, அவர்களது கவனத்தை அவ்வப்போது திசை திருப்புவதற்கு ஒலி எழுப்பும் பொருளை அவ்வப்போது எழுப்பி, அவர்களை அனைத்து திசையிலும் சுற்றி முற்றி பார்க்க வைக்க வேண்டும்.

இவையே குழந்தையின் தலை வடிவத்தை ஒழுங்குபடுத்தும் செயல்கள். வேறு ஏதாவது வழி உங்களுக்கு தெரிந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

English summary

Remedies To Correct Shape Of Baby's Head | குழந்தையின் தலை சரியான வடிவத்தில் இருக்க சில டிப்ஸ்....

For those who have a normal baby, the headline might seem like an absurd question. But it is not. You baby's head can sometimes cause you a fair amount of concern. We all have heads that are shaped differently. You can use some home remedies to correct the shape of your baby's head.
Desktop Bottom Promotion