For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முதல் முறையா அப்பா ஆகுறீங்களா? இதோ சில முக்கியமான டிப்ஸ்...

By Boopathi Lakshmanan
|

ஒவ்வொரு ஆணின் வாழ்க்கையிலும் தந்தையாக மாறுவது ஒரு முக்கியமான விஷயமாகும். இது அவருக்கு ஒரு உற்சாகமான ப்ரோமோஷன் தான். ஓரிரு கிலோ எடையுள்ள அந்த குழந்தையுடன் அளவற்ற மகிழ்ச்சியும், அதே அளவு சவால்களும் தந்தைக்கு வந்து சேரும். ஒரு குழந்தையின் ஆரம்ப நாட்கள் அதன் தந்தைக்கு, அவரின் வாழ்நாளில் முதன்முதலில் எதிர்கொள்ளும் மிகவும் சவாலான நாட்களாக இருக்கும். அதில் எண்ணற்ற தூக்கமில்லா இரவுகளும், குழந்தைகயின் மீது தொடர்ந்த கவனமும் கொண்டிருக்கும் நாட்களும் இருக்கும்.

குழந்தையை பார்த்துக் கொள்ள எவ்வளவு தான் தயாராக இருந்தாலும் அல்லது டிப்ஸ்கள் படித்தாலும் அவையெல்லாம் நடைமுறையில் முழுமையான பலன் தருவதை உறுதி செய்ய முடியாது. உங்கள் குழந்தையை நீங்கள் பொறுமையாகவும், அமைதியாகவும் மற்றும் அன்புடனும் அணுக வேண்டும். ஒரு நல்ல தந்தையாக இருக்க விரும்பினால் நீங்கள் அளவற்ற கவனம் செலுத்தவும், தியாகங்கள் செய்யவும் வேண்டியிருக்கும்.

புதிதாக குழந்தைகள் பெற்ற தந்தைகள் குழந்தையைப் கவனித்துக் கொள்வதற்கான பல்வேறு குறிப்புகள் உள்ளன. அவற்றில் மிகவும் அடிப்படையான மற்றும் முதன்மையான குறிப்பு குழந்தையின் டையாபரை எப்படி மாற்றுவது என்பது! எல்லாம் இங்கிருந்து தான் தொடங்குகிறது. குழந்தையின் மீது நீங்கள் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறீர்கள் என்றும், நீங்கள் எவ்வளவு நல்ல தந்தை என்றும் அதுதான் காட்டும். பின்னர், குழந்தைக்கு பாலூட்டுவது, குழந்தையுடன் விளையாடுவது, குழந்தையை தூங்க வைப்பது போன்ற பல விஷயங்கள் பின் தொடர்ந்து வரும். குழந்தை வளர வளர, ஒரு தந்தையாக உங்களுடைய பொறுப்பும் வளரத் துவங்கும். நீங்கள் சிறந்த தந்தையாக இருக்க உதவும் சில குறிப்புகளை இங்கே கொடுத்துள்ளோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டையப்பர்

டையப்பர்

எந்தவொரு தந்தையும் தெரிந்து கொள்ள வேண்டிய மிகவும் முக்கியமான குறிப்பு இதுதான். எப்பொழுது மற்றும் எப்படி டையப்பரை மாற்ற வேண்டும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். தங்களுடைய டையப்பர் ஈரமாக இருப்பதை எந்த ஒரு குழந்தையும் அசௌகரியமாகவே கருதும்.

பாலூட்டுதல்

பாலூட்டுதல்

எந்தவொரு பெற்றோர்களுக்கும் மிகவும் பிரயத்தனம் எடுக்கும் செயலாக இருப்பது குழந்தைக்கு பாலூட்டுவது தான். குழந்தைக்கு போதூன அளவு பாலூட்ட வேண்டும் என்றால் அவளுக்கு கதைகள் சொல்லவும், பேசவும் மற்றும் தூக்கிக் கொண்டு சுற்றவும் வேண்டியிருக்கும்.

பொறுமை

பொறுமை

மிகவும் முக்கியமான குறிப்பு நீங்கள் எதையும் தீவிரமாக எடுததுக் கொள்ளக் கூடாது என்பது தான். இவ்வாறாக இருந்து ஒரு நல்ல தந்தையாக மாற, அளவற்ற பொறுமையும், அமைதியும் தேவைப்படும். அந்த பயமறியா, அப்பழுக்கற்ற பாலகனின் பொறுமையிழந்து, உங்கள் வெறுப்பைக் காட்டினால் இழப்பு உங்களுக்கு மட்டுமே!

விளையாட்டு

விளையாட்டு

குழந்தைகள் எந்த விளையாட்டை அல்லது எந்த பொம்மையை விரும்புகிறார்கள் என்று கண்டறிவது மிகவும் கடினம். உங்கள் குழந்தையுடன் நீங்கள் விளையாடுவது, ஆரோக்கியமான உறவை உங்களிடை உருவாக்கும். பழைய விளையாட்டான கண்ணை மூடி 'பே' என்று காட்டுதல் அல்லது மறைந்திருப்பவரை கண்டு பிடித்தல் போன்றவற்றை உங்களுடைய 3-4 வயது பாப்பாவிடம் விளையாடி மகிழுங்கள்.

பரிவும், அன்பும்

பரிவும், அன்பும்

ஒரு சிறந்த தந்தையாக இருக்க தேவையான முதன்மையான பண்புகள் குழந்தையிடம் பரிவுடனும், அன்படனும் இருப்பது தான். குழந்தை விரும்பும் போது அவளுக்கு அருகில் இருப்பதும், அவளுடைய தேவைகளை ஒரு தந்தையாக இருந்து கவனித்துக் கொள்வதும் இதில் அடங்கும்.

அறிவுரையும், பேச்சும்

அறிவுரையும், பேச்சும்

ஒரு தந்தையாக உங்கள் குழந்தையுடன் பேசுவதும், சில அறிவுரைகளை அவளுக்கு வழங்குவதும் உங்களிடையே உறவை நல்ல நிலையில் உருவாக்கவும், அவர்களை நல்ல மனிதர்களாக உருவாக்கவும் செய்யும். இளம் சிறார்கள் தங்களுக்கான அறிவுரைகளை முதலில் பெற விரும்பவது தங்களுடைய பெற்றோர்களிடம் தான்.

முன்மாதிரி அப்பா!

முன்மாதிரி அப்பா!

குழந்தைகள் அவர்களுடைய பெற்றோர்களையே பிரதிபலிப்பார்கள். எனவே, அவர்களுக்கு நீங்கள் ஒரு நல்ல முன்மாதிரியாக நடந்து கொள்ள வேண்டியது அவசியம். குறிப்பாக, தங்களுடைய தந்தையின் பாதச்சுவடுகளைப் பின்பற்றியே நடந்து பழகுவார்கள். ஒரு தந்தையாக நீங்கள் அவர்களுக்கு நல்ல வழியையே காட்ட வேண்டும்.

ஆதரவு தெரிவித்தல்

ஆதரவு தெரிவித்தல்

உங்கள் குழந்தைக்கு அவள் தேர்ந்தெடுக்கும் எந்த விஷயத்திற்கும் ஒரு தந்தையாக நீங்கள் எப்பொழுதும் ஆதரவு தெரிவிக்க வேண்டும். உங்களுடைய விருப்பங்களை அவரின் திணிக்காமல், அவர்களின் குரலையும் சற்றே ஒலிக்கச் செய்து, அவர்களுடைய கருத்தையும் கேட்க வேண்டும். ஒரு தந்தையிடமிருந்து குழந்தைக்கு கிடைக்கும் ஆதரவை விட பெரிய ஆதரவு வேறெதுவும் இல்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Parenting Tips For New Dads

Becoming a dad is a major turn of event in any man's life. It will be a whole new life, an exciting one too. It comes with a lot of challenges and joy bundled into a single package that weighs just a few kilos. Initial stages of a baby's life are the most challenging for any dad who is taking on the mantle for the first time in his life. Here are few parenting tips for a new dad's out there.
Desktop Bottom Promotion