For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க செல்ல குழந்தைக்கு காது குத்தப் போறீங்களா? இதெல்லாம் ஞாபகம் வெச்சுக்கோங்க...

By Maha
|

உங்கள் குழந்தைக்கு காது குத்தலாம் என்று நினைக்கிறீர்களா? அப்படியானால் ஒருசில விஷயங்களை பெற்றோர்கள் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் குழந்தைகளுக்கு காது குத்தும் போது, அவர்களுக்கு நிறைய நோய்த்தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மேலும் நிபுணர்கள் பலர், குழந்தைகளுக்கு காது குத்தினால், அவர்களின் ஆரோக்கியத்திற்கு பிரச்சனை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக இந்நேரத்தில் காய்ச்சல் தான் ஏற்படும். ஆகவே பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

அதுமட்டுமல்லாமல், குழந்தைக்கு காது குத்துவதாக முடிவெடுத்திருந்தால், அவர்கள் பிறந்து ஆறு மாதம் கழித்து தான் காது குத்த வேண்டும். இதுப்போன்று பல உள்ளன. ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை, குழந்தைகளின் நலனுக்காக, குழந்தைக்கு காது குத்துவதாக இருந்தால், பெற்றோர்கள் என்னவெல்லாம் மனதில் கொள்ள வேண்டும் என்று ஒருசிலவற்றைப் பட்டியலிட்டுள்ளது.

First Ear Piercing Tips: Daughters

அதைப் படித்து தெரிந்து கொண்டு, அதன் படி நடந்தால் உங்கள் குழந்தைக்கு ஏற்படும் அதிகப்படியான வலியைக் குறைக்கலாம்.

* குழந்தைக்கு காது குத்தலாம் என்று முடிவெடுக்கும் முன், குழந்தைக்கு போட வேண்டிய அனைத்து தடுப்பூசிகளும் முடிந்துவிட்டதா என்று பார்க்க வேண்டும். இப்படி அனைத்து தடுப்பூசிகளும் முடிந்த பின், காது குத்தினால், குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்த்தொற்றுகள் மற்றும் காய்ச்சல் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

* குழந்தைக்கு காது குத்தும் முன் அவர்களுக்கு சிறிது வலி நிவாரணியைக் கொடுத்தால், அவர்களுக்கு அதிகப்படியான வலி ஏற்படுவதைத் தடுக்கலாம்.

* குறிப்பாக பெற்றோர்கள் மனதில் கொள்ள வேண்டியது என்னவென்றால், குழந்தைக்கு காது குத்தி முடித்தப் பின்னர், அந்த இடத்தில் சிறிது ஹைட்ரஜன் பெராக்ஸைடு அல்லது ஆல்கஹாலை பஞ்சில் நனைத்து வைக்கும் போது சிறிது எரிச்சலாக இருந்தாலும், நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்கும்.

* உங்கள் செல்ல குழந்தைக்கு காது குத்தியப் பின்னர், ஒரு நாளைக்கு இரண்டு முறை கம்மலை சுற்றி விட வேண்டும். இதுவும் இந்த செயலை குறைந்தது ஆறு மாதத்திற்கு செய்ய வேண்டும்.

* முக்கியமாக குழந்தைக்கு காது குத்தியப் பின்பு, அவர்களது காதுகளில் உள்ள கம்மலை ஒரு வருடத்திற்கு கழற்றக்கூடாது. மேலும் தினமும் சிறிது தேங்காய் எண்ணெய் வைத்து வர வேண்டும்.

English summary

First Ear Piercing Tips: Daughters

Today, Boldsky shares with you some of the thing you need to keep in mind when you pierce your daughter's ears. Pay heed to these tips so that your little baby girl will not experience too much of pain. Take a look at these first ear piercing tips for your little daughter.
Story first published: Tuesday, December 24, 2013, 17:48 [IST]
Desktop Bottom Promotion