For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைகள் அதிகம் பெற்றால், பெண்களின் இளமை நீடிக்கும்! புதிய ஆய்வு :

By Hemalatha
|

கனடாவிலுள்ள சைமன் ஃப்ராசர் என்ற பல்கலைக் கழகம் கௌட்டி மாலாவில் ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டது.

ஆராய்ச்சியாளர்கள் நடத்திய பதிமூன்று வருட ஆய்வில் நிறைய குழந்தைகள் பெற்ற தாய்மார்களுக்கு முதுமை எளிதில் அடவதில்லை எனவும், அவர்கள் இளமையாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கிறார்கள் என தெரிய வந்துள்ளது.

Slow down aging process for mother of many children

இந்த ஆய்வில் சுமார் எழுபத்தைந்து தாய்மார்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் கன்னத்தின் உட்புறத்திலிருந்து சிறிய சதைப் பகுதியையும், எச்சிலையும் எடுத்து ஆய்வு மேற்கொண்டனர். பதிமூன்று வருடங்களில் இரண்டு முறை ஆய்வினை மேற்கொண்டனர்.

டெலோமியர் என்றால் என்ன?

டெலோமியர் என்ற பகுதி, டி. என்.ஏ வின் உறை போல் அமைந்திருக்கும். நமது குரோமோசோம் அமைப்பின் இறுதியில் இந்த டெலோமியர் காணப்படும். அது குரோமோசோமினை வெளிப்புற பாதிப்பிலிருந்து காக்கும் கவசம் போல் செயல்படுகிறது.

இந்த டெலோமியரின் நீளத்தை கணக்கிட்டு ஆய்வினை மேற்கொண்டனர். டெலோமியரின் நீளம் குறையாமல் இருந்தால், செல் இறப்பு விகிதம் குறைகிறது. இதனால் இளமையாக இருக்க முடியும்.
ஆனால் டெமோலியரின் நீளம் குறையும் போது, செல்களின் இறப்பும் அதிகமாகிறது. இதனால் சீக்கிரம் வயதாகிவிடுகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்த ஆய்வில் டெலோமியர் நீளம் குறையாமல் இருப்பவர்களின் இளமை நீடிப்பதாகவும், அதன் நீளம் சுருங்கி, அளவு குறைந்து காணப்படுபவர்களுக்கு சீக்கிரம் வயதாகிவிடுவதும் தெரிய வந்துள்ளது

அது மட்டுமல்லாமல், குழந்தை பொறக்கும் போது ஈஸ்ட்ரோஜன் அளவும் அதிகமாகிறது. அது செல் இறப்பு விகிதத்தை குறைக்கிறது. அதனாலேயும் இளமையாக இருக்கிறார்கள் என்று கூறுகின்றனர்.

அதேபோல் குழந்தைகள் அதிகமாக பெற்றிருக்கும் தாய்மார்களை சுற்றி சமூகமும், உறவினர்கள், நண்பர்கள், அவர்களின் ஆதரவும் இணைந்து அவர்களுக்கு பலத்தை தருகிறது. அவர்களின் ஆதரவும் ஒரு வகையில் அவர்களை இளமையாக வைத்திருக்கிறது என்கிறார்கள்.

இது அந்தகாலத்தில் பொருந்தும். அந்த காலத்தில் பெரும்பாலான தாய்மார்கள் இளமையாக இருந்ததாக கேள்விப்படுவதுண்டு. இதற்கு காரணம் ஆராய்ச்சியாளர்கள் சொல்வது போலவும் இருக்கலாம்.

ஆகவே தாய்மார்களின் டெலோமோமியர் அளவினை கணக்கிட்டும், ஹார்மோன் மாற்றங்களைக் கொண்டும், சமூக அமைப்பில் உண்டாகும் இணைப்பும் சேர்ந்துதான், அதிக குழந்தைகள் பெற்ற தாய்மார்கள் இளமையாக இருப்பதற்கான காரணம் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த ஆராய்ச்சியை இன்னும் மேற்கொண்டு வருகிறார்கள். எனவே மேலும் பல புதிய விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

English summary

Slow down aging process for mother of many children

Slow down aging process for mother of many children
Desktop Bottom Promotion