For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ராமரின் மரணத்திற்கு பிறகு அயோத்தியை ஆண்டவர்கள் யார் என்று தெரியுமா?

ராமரின் மரணத்திற்கு பிறகு அயோத்தியை ஆண்டவர்கள் யார் என்று தெரியுமா?

By Staff
|

Recommended Video

ராமரின் ரகு வம்சத்தின் கடைசி இவர்கள் தான்..வீடியோ

நமது சிறுவயதில் இருந்தே நாம் அதிகம் கேட்ட, பார்த்த கதைகளில் ஒன்று இராமாயணம். இந்தியாவின் இரு காவியங்களில் மகாபாரதத்துடன் மற்றொரு இடத்தைப் பகிர்ந்துக் கொண்டிருப்பதும் இராமாயணமே. இந்து மத கடவுளான மகாவிஷ்ணுவின் ஏழாவது அவதாரமாக இராமயணத்தில் இடம்பெற்றுள்ளார் ராமர்.

நல்ல மகன், சிறந்த அண்ணன், அக்கறையான கணவன் மற்றும் மிக முக்கியமாக குறிப்பிடத்தக்க மற்றும் பாராட்டுதலுக்குரிய அரசன் என்று ஒரு மனிதன் எப்படியாக இருக்க வேண்டும் என்று வடிக்கப்பட்ட கதாபாத்திரமாக உருவம் பெற்றிருக்கும் ராமரது குணாதிசயங்கள்.

இவர் 14 ஆண்டுகள் வனவாசம் சென்று மீண்டும் வந்து அயோத்தியின் மன்னராக பதிவேற்றார். இந்த வருகையை தான் வடமாநிலத்தவர்கள் தீபாவளியாக கொண்டாடுகிறார்கள். இராமர் சீதையை மணமுடித்தது, வனவாசம் சென்றது, ராவணனுடன் போரிட்டது என்று பல தகவல்கள் நாம் அறிவோம்.

ஆனால், ராமர் இறப்புக்கு பிறகு அயோத்தி என்ன ஆனது, அந்த நாட்டை ஆண்டது யார் என்று உங்களுக்கு தெயரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
லவ, குசா

லவ, குசா

ஸ்ரீ ராமருக்கும், சீதா தேவிக்கும் பிறந்தவர்கள் மகன்கள் தான் இரட்டையர்களான லவ மற்றும் குசா. ராமரின் மறைவுக்கு பிறகு, ஸ்ரீ ராமரின் மூத்த மகனான குசா மன்னர் பதவி ஏற்றார் என்று நம்பப்படுகிறது. ஆனால், தசரதன் மாதிரியோ, ராமர் மாதிரியோ குசா ஒரு சிறந்த மன்னராக திகழவில்லை.

Image Source

நாகர்கள்!

நாகர்கள்!

ஸ்ரீ ராமர் குசாவிற்கு பரிசாக கொடுத்த விலைமதிப்பற்ற கற்களை நாகர்கள் திருடி சென்ற காரணத்தால், குசா அவர்களை கொலை செய்ய முயற்சித்தார். அந்த கற்கள் ஸ்ரீ ராமருக்கு அகஸ்தியர் முனிவர் கொடுத்தாகும்.

Image Source

மரணம்!

மரணம்!

தனது மதாதையர்கள் போல குசா சிறந்த வீரனாகவும் இருக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், துர்ஜயா எனும் அரக்கனுடன் போரிடும் போது குசா இறந்தார். துர்ஜயா சொர்க்கத்தில் சண்டை இட்டு தாக்குதல் நடத்தியவன் என்றும், இந்திரபுரியில் சண்டையிட்ட போது மரணமுற்றான் என்றும் அறியப்படுகிறது.

Image Source

அடுத்தது யார்?

அடுத்தது யார்?

குசாவின் மரணத்திற்கு பிறகு, குசா மற்றும் கும்தவதி என்பவருக்கும் பிறந்த அதிதி மன்னராக பதிவு ஏற்றுள்ளார். அதிதி தனது முன்னோர்கள் போல சிறந்த மன்னராகவும், தலைசிறந்த போர் வீரனாகவும் திகழ்ந்துள்ளார். அதிதி வசிஸ்டர் முனிவரின் அறிவுரை மற்றும் வழிகாட்டுதலின் படி வாழ்ந்ததாக அறியப்படுகிறது.

Image Source

நிஷதா

நிஷதா

அதிதியின் மரணத்திற்கு பிறகு அவரது மகன் நிஷதா மன்னர் பதவி வகித்தார். தனது தந்தை அதிதியை போலவே நிஷத்தும் சிறந்த போர் வீரராக திகழ்ந்தார். இவருக்கு பிறகு நலா எனும் மிகச்சிறந்த போர்வீரன் மன்னர் பதவி வகித்தார். இவர் முனிவர்களுடன் காடுகளில் சென்று வாழ திட்டமிட்டு, தனது மகன் நபாவை அரசராக்கி செல்கிறார். நபா கோசல தேசத்தை ஆண்டு வந்தார். இவரை எதிர்த்து புந்தரிகா போரிட்டார்.

Image Source

புந்தரிகா!

புந்தரிகா!

இதன் பிறகு புந்தரிகாவின் மகன் க்ஷீமா எனும் போர் வீரன் பதிவியேற்றான். இவர் தேவா எனும் படைக்கு தலைவனாக இருந்த காரனத்தால் தேவநீகன் என்றும் அழைக்கப்பட்டார். இவரது மகன் அகிநாகு என்பவர் உலகியே ஆண்டதாகவும் புகழ் பாடப்பட்டுள்ளது. இவரை எதிரிகளும் கூட விரும்பினார்கள் என்றும் வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Image Source

ப்ரியாத்ரா!

ப்ரியாத்ரா!

அகிநாகுவுக்கு பிறகு அவரது மகன் ப்ரியாத்ரா மன்னர் பதவி ஏற்றார். பிறகு இவரது மகன் சில் அரசரானார் இவர் மிகவும் அமைதியானவர், பொறுமையானவர் என்று கூறப்பட்டுள்ளது. இவரது ஆட்சி காலத்திக்கு பிறகு நபி எனும் இவரது மகன் அரசராகியுள்ளார்.

Image Source

 பின் அரசரானவர்கள்...

பின் அரசரானவர்கள்...

பிறகு நபியின் மகன் வஜ்ரானபா. வஜ்ரானபாவின் மகன் சங்கத். சங்கத்திற்கு பிறகு ஹரிதஷ்வா. இவர்களை பின்தொடர்ந்து விஷ்வா சஹா, ஹிரண்ய நபா , கௌசல்யா, பிரமிஷ்தா, புத்ரா, புஷ்யா, துர்வ சந்திசுதர்ஷனா மற்றும் அக்னி வர்ணா போன்றவர்கள் அரசராக திகழ்ந்துள்ளனர்.

இவர்களுடன் ரகுவம்சம் முடிவுற்றதாக அறியப்படுகிறது.

Image Source

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ever Wondered Who Took Over The Throne After Lord Rama's Death?

Ever Wondered Who Took Over The Throne After Lord Rama's Death?
Desktop Bottom Promotion