For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகில் உள்ள விசித்திரமான சில மூடநம்பிக்கைகள்!

இங்கு உலகில் உள்ள விசித்திரமான சில மூடநம்பிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

|

இந்தியாவில் மட்டுமின்றி, உலகின் பல பகுதிகளிலும் மூடநம்பிக்கைகள் ஏராளமாக உள்ளது. உலகில் பல தலைமுறைகளாக கண்மூடித்தனமாக சில பழக்கங்கள் மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. ஏன் என்று காரணம் கேட்டால், அதற்கு சரியான காரணமும் தெரியாது.

இக்கட்டுரையில் உலக மக்களால் பின்பற்றப்பட்டு வரும் சில விசித்திரமான மூடநம்பிக்கைக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிரட் நம்பிக்கை

பிரட் நம்பிக்கை

பிரெஞ்சு மக்களின் நம்பிக்கையின் படி, பிரட் பாக்கெட்டை தலைகீழாக மேஜையில் வைத்தால், அதைக் கொடுப்போருக்கும், பெற்றுக் கொண்டோருக்கும் பசி அதிகமாக எடுப்பதோடு, துரதிர்ஷ்டத்தையும் வரவழைக்குமாம்.

மேஜை நம்பிக்கை

மேஜை நம்பிக்கை

ரஷ்யாவில் உள்ள ஓர் மூடநம்பிக்கை, திருமணமாகாதவர்கள் மேஜையின் முனைகளில் அமரக்கூடாது. அப்படி அமர்ந்தால், வாழ்க்கைத் துணை அமைவது அல்லது அவர்களுக்கு திருமணமாவதே கஷ்டமாக இருக்குமாம்.

கூரை நம்பிக்கை

கூரை நம்பிக்கை

ஜெர்மனியில் உள்ள ஒரு முட்டாள்தனமான நம்பிக்கை என்னவெனில், ஒரு வீட்டில் மரணிக்க முடியாமல் யாரேனும் ஒருவர் இழுத்துக் கொண்டிருக்கும் போது, வீட்டுக் கூரையில் இருந்து மூன்று ஓடுகளை எடுப்பதன் மூலம், எளிதில் சொர்க்கத்திற்கு செல்வார்களாம்.

வெள்ளை நிற நம்பிக்கை

வெள்ளை நிற நம்பிக்கை

சீனாவில், வெள்ளை நிறமானது துக்கம்/மரணத்துடன் தொடர்புடையதாக நம்பப்படுகிறது. எனவே இங்கு நல்ல நிகழ்ச்சியின் போது, வெள்ளை நிறத்தில் பூக்களோ அல்லது வேறு ஏதேனும் அழைப்பிதழ்களோ அனுப்பமாட்டார்கள்.

நெருப்பு நம்பிக்கை

நெருப்பு நம்பிக்கை

ரஷ்யாவில் நோய்வாய்ப்பட்ட மிருகங்களை முந்தைய நாள் நெருப்பால் எரிந்த இடத்தில் ஓட வைக்க வேண்டுமென்ற நம்பிக்கை ஒன்று உள்ளது.

சூயிங் கம் நம்பிக்கை

சூயிங் கம் நம்பிக்கை

துருக்கியில், சூயிங் கம்மை இரவு நேரத்தில் சாப்பிடுவதற்கு முன் இருமுறை யோசித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இங்கு இரவில் சூயிங் கம்மை சாப்பிடுவது என்பது, இறந்த சடலத்தின் தசையை வாயில் போட்டு மெல்லுவதற்கு சமம் என மக்களால் நம்பப்படுகிறது.

திராட்சை நம்பிக்கை

திராட்சை நம்பிக்கை

ஸ்பெயினில் புத்தாண்டின் போது, இரவு 12 மணிக்கு 12 திராட்சைகளை சாப்பிட்டால், அந்த வருடத்தின் 12 மாதங்களும் நல்ல அதிர்ஷ்டமிக்கதாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது.

பறவை நம்பிக்கை

பறவை நம்பிக்கை

ரஷ்யாவில் உள்ள மற்றொரு மூட நம்பிக்கை, ஒரு பறவை ஒருவர் மீதோ, காரின் மீதோ அல்லது சொத்துக்களின் மீதோ மலங்கழித்தால், அவர்கள் நல்ல செல்வ செழிப்புடன் பணக்காரர் ஆவார்களாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Weird Superstitions Of The World

These are some of the most bizarre superstitions that people believe around the world. Check them out…
Desktop Bottom Promotion