For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்டில் பணப்பிரச்சனை அதிகமா இருக்கா? அப்ப உடனே இத செய்யுங்க...

இங்கு வீட்டில் உள்ள பணப்பிரச்சனையைப் போக்க அவசியம் செய்ய வேண்டியவைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

By Staff
|

யாருக்கு தான் சௌகரியமான மற்றும் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ ஆசை இருக்காது? இதற்காக தானே ஒவ்வொருவரும் கஷ்டப்பட்டு உழைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் கஷ்டப்பட்டு உழைத்து என்ன பயன். எவ்வளவு தான் கடினமாக உழைத்தாலும், வீட்டில் பணப்பிரச்சனை எப்போதும் இருந்தவாறே உள்ளதா?

அப்படியெனில் உங்கள் வீட்டில் வாஸ்து தோஷம் உள்ளது என்று அர்த்தம். இந்த தோஷத்தைப் போக்க, வீட்டில் ஒருசில மாற்றங்களை உடனே செய்ய வேண்டியது அவசியம். இக்கட்டுரையில், வீட்டில் உள்ள பணப்பிரச்சனையைப் போக்க அவசியம் செய்ய வேண்டியவைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து செய்து, நன்மைப் பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
படுக்கை அறை சுவர்கள்

படுக்கை அறை சுவர்கள்

வாஸ்துவின் படி, வீட்டிலேயே படுக்கை அறையில் தான் அதிர்ஷ்டமும், செல்வமும் அதிகரிக்கும். எனவே படுக்கை அறையின் சுவர்களில் விரிசல் அல்லது பெயிண்ட் உரிந்து வந்தாலோ அல்லது பூஞ்சணம்/கரையானால் பாதிக்கப்பட்டிருந்தாலோ, சற்றும் தாமதிக்காமல் உடனே சரிசெய்யுங்கள்.

MOST READ: கிட்னியில் கற்கள் உருவாக முதல் காரணியாக இருக்கும் உணவுகள் இவைதான் தெரியுமா...?

சங்கு/கிளிஞ்சல்கள்

சங்கு/கிளிஞ்சல்கள்

வீட்டில் பணப்பிரச்சனை அதிகம் இருந்தால், பூஜை அறையில் சங்கு/கிளிஞ்சல்களை வையுங்கள். கடலில் இருந்து கிடைக்கும் சங்கு லஷ்மி தேவியுடன் தொடர்புடையதால், இதனை வீட்டினுள் வைத்திருப்பதால், செல்வம் அதிகரிக்குமாம்.

உடைந்த மரப் பொருட்கள்

உடைந்த மரப் பொருட்கள்

வீட்டில் கட்டிலின் கால்கள் உடைந்திருந்தாலோ, அலமாரிகள் மற்றும் இதர மரப் பொருட்கள் சேதமடைந்திருந்தாலோ, அது வீட்டில் எதிர்மறை ஆற்றலை ஈர்த்து, பணக் கஷ்டத்தை அதிகரிக்கும். எனவே இம்மாதிரியான பொருட்களை உடனே தூக்கி எறிந்துவிடுங்கள்.

ஒழுகும் குழாய்

ஒழுகும் குழாய்

வீட்டில் உள்ள குழாய்களில் எப்போதும் தண்ணீர் வடிந்தவாறு இருந்தால் அதை உடனே சரிசெய்யுங்கள். இல்லாவிட்டால் நீர் வீணாவது போன்றே, பணமும் நிலைக்காமல் வீணாய் செலவாகும்.

சரியான திசை

சரியான திசை

பணத்தை சேமித்து வைக்கும் அலமாரி, பீரோ போன்றவற்றை வீட்டின் தெற்கு திசையில் வைத்து, அதன் முகம் வடக்கு திசையை நோக்கியவாறு வையுங்கள். இது வீட்டில் பணத்தை நிலைத்திருக்கச் செய்யும்.

MOST READ: வாய்ப்புண், வயிற்றுப்புண் சரியாக வீட்டிலேயே எதாவது சிம்பிள் மருந்து இருக்கா?

பூஜை அறை

பூஜை அறை

வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒவ்வொரு வீட்டிலும் பூஜை அறையானது வடகிழக்கு திசையில் இருக்க வேண்டும். மேலும் பூஜை அறையில் மஞ்சள் மற்றும் வெள்ளை நிற பல்ப்பைப் பயன்படுத்த வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

To Remove Financial Crunch At Home,Try These 6 Remedies And Notice The Change

Today, we bring you some simple tips that you can do, and items that you can keep in your house to help increase the flow of money in your life.
Desktop Bottom Promotion