For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செவ்வாய் கிழமைகளில் ஏன் அனுமனுக்கு இந்த பொருட்களைப் படைக்க வேண்டுமென தெரியுமா?

இங்கு செவ்வாய்க் கிழமைகளில் அனுமனுக்கு எந்த பொருட்களைப் படைத்து வணங்கினால், அவரது முழு ஆசீர்வாதமும் கிடைக்கும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

|

அனுமன் கலியுக மக்களைக் காப்பவராக கருதப்படுகிறார். இவரை மனதார நம்பிக்கையுடன் வணங்கினால், அனைத்து விதமான பிரச்சனைகளில் இருந்தும் அனுமன் காப்பார் என்றும் சொல்லப்படுகிறது. இவர் பொதுவாக குங்குமப்பூ நிறத்தில் சித்தரிக்கப்படுவார். ஏன் என்று தெரியுமா?

Things That You Should Offer To Lord Hanuman Today For Quick Benefits

இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று இந்த சிந்தூர் ஆற்றல் மற்றும் உயிராற்றலின் நிறம். மற்றொன்று, ஒரு நாள் சீதை தன் நெற்றி உச்சியில் சிந்தூரைத் தடவினார். அதைக் கண்ட அனுமன் சீதையிடம் ஏன் என்று கேட்டார். அதற்கு சீதை, இது ராம பிரான் நீண்ட காலம் செழிப்பாக இருக்க அவரை ஆசீவதிக்கும் வகையில் செய்யும் ஓர் செயல் என்று கூறினார். இதைக் கேட்ட அனுமன் உடனே தன் உடல் முழுவதும் இந்த சிந்தூரைத் தடவிக் கொண்டார்.

இப்போது செவ்வாய்க் கிழமைகளில் அனுமனுக்கு எந்த பொருட்களைப் படைத்து வணங்கினால், அவரது முழு ஆசீர்வாதமும் கிடைக்கும் என்று காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
துளசி

துளசி

செவ்வாய் கிழமைகளில் அனுமனுக்கு துளசி மாலையை அணிவித்து வணங்குவது நல்லது. பின் அந்த துளசி இலைகளை சாப்பிடலாம்.

சிவப்பு கொடி

சிவப்பு கொடி

முக்கோண வடிவமுள்ள சிவப்பு கொடியில் 'ராம்' என்று எழுதி, அனுமனுக்கு படைத்து வணங்கி, அந்த கொடியை வாகனங்களின் முன் மாட்டிக் கொண்டால், விபத்துக்களில் இருந்து விலகி இருக்கலாம். அதுவே வீட்டில் வைத்திருந்தால், வீட்டில் பணம் கொழிக்கும்.

சிந்தூர்

சிந்தூர்

அனுமனுக்கு ஆரஞ்சு நிற சிந்தூர் வைக்க வேண்டும். இப்படி தொடர்ச்சியாக செய்து வருவதன் மூலம், மாங்கல்ய தோஷம் நீங்குவதோடு, இதர தோஷங்களும் அகலும்.

மல்லிகை எண்ணெய்

மல்லிகை எண்ணெய்

மல்லிகை எண்ணெயை மனநிலையை மேம்படுத்த உதவும். அதிலும் சிந்தூர் பொடியை மல்லிகை எண்ணெயுடன் சேர்த்து கலந்து, அனுமனுக்கு திலகமிடுவது, இன்னும் நல்லது.

இனிப்புகள்

இனிப்புகள்

செவ்வாய் கிழமைகளில் அனுமனுக்கு லட்டு, சுண்டல், வெல்லம், கொய்யாப்பழம் போன்றவற்றை படைத்து வணங்கினால், அனுமனின் முழு ஆசீர்வாதமும் கிட்டுமாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things That You Should Offer To Lord Hanuman Today For Quick Benefits

Here are 5 simple things that devotees can offer to Lord Hanuman for blessings. These things are dear to the God, and would bless you with quick benefit...
Desktop Bottom Promotion