உலகின் ஆணிவேரை அடைகாத்து வரும் இரும்பு குடோன்!

ஸ்வல்பார்ட் குளோபல் சீட் வால்ட் எனப்படும் உலக விதை வங்கி பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியவை.

Subscribe to Boldsky

பணத்தை சேமிக்கும், வங்கி, இரத்தத்தை சேமிக்கும் வங்கி, ஸ்டெம்செல் சேமிக்கும் வங்கி, ஏன் விந்து சேமிக்கும் வங்கிகள் கூட நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், நம்மில் வெகு சிலர் மட்டுமே உலக விதை வங்கி பற்றி தெரிந்திருப்போம்.

http://studytub.com/a-place-at-arctic-that-might-someday-save-humankind-doomsday-seed-vault-svalbard/

Image Courtesy

இவ்வுலகில் வாழும் அனைத்து உயிரினத்தின் ஆணிவேரும் இயற்கை தான். அந்த இயற்கையின் ஆணிவேர் இவ்வுலகில் நாம் சுவாசிக்க காரணியாக இருக்கும் செடி, கொடி, தாவரங்களின் விதைகள். இந்த விதைகளை சேமித்து வைத்திருக்கும் வங்கி தான் ஸ்வல்பார்ட் குளோபல் சீட் வால்ட்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

ஸ்வல்பார்ட் குளோபல் சீட் வால்ட்!

நார்வேவும், குளோபல் கிராப் டைவர்சிட்டி டிரஸ்ட்-ம் இணைந்து அமைத்துள்ள ஒரு சேமிப்பு கிடங்கு தான் இந்த ஸ்வல்பார்ட் குளோபல் சீட் வால்ட் எனும் உலக விதை வங்கி.

அடித்தளம்!

ஸ்வல்பார்ட் குளோபல் சீட் வால்ட் அடித்தளமிடப்பட்டது ஜூன் 19, 2006, திறக்கப்பட்ட நாள் பிப்ரவரி 26, 2008. இதன் மதிப்பு ஏறத்தாழ ஒன்பது மில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்த உலக வங்கி வடக்கு நார்வே ஆர்டிக் கடல் அருகே அமைந்திருக்கும் ஸ்பிட்ஸ்பெர்கன் எனும் இடத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இயற்கை சீற்றங்கள்...

உலகில் இயற்கை சீற்றங்கள், போர் காலம் போன்ற நேரங்களில் அழிவு காரணத்தால் உணவு பற்றாக்குறை, வேளாண்மை சீரழிவு உண்டாகிவிட்டால், இங்கு சேமித்து வைத்திருக்கும் விதைகள் மூலம், அதை சீர் செய்துவிடலாம் என்ற குறிக்கோளில் இந்த வங்கி இயங்கி வருகிறது.

உலக நாடுகள்!

உலக நாடுகள் எல்லாம் இந்த உலக விதை வங்கியில் தங்கள் நாட்டின் விதைகளை சேமித்து வைத்திருக்கின்றனர். சிரியாவில் போர் நடந்த போது, இந்த வங்கியில் சேமித்து வைத்திருந்த தங்கள் நாட்டு விதைகளை எடுத்து பயன்படுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

உலகே அழிந்தாலும், அழியாது!

ஏதேனும் பேரழிவு ஏற்பட்டு உலகே அழிய நேர்ந்தாலும் கூட இந்த உலக விதை வங்கி அழியாத வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆர்டிக் பனிமலையில் கடல் மட்டத்தில் இருந்து 130 அடி உயரத்தில் அமைந்திருக்கும் இந்த விதை வங்கி வெள்ளம், புயல் போன்ற எந்த பேரழிவு காரணத்தாலும் அழியாத வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.

8,40,000 விதைகள்!

ஏறத்தாழ உலகின் நூற்றுக்கணக்கான நாடுகளில் இருந்து 8,40,000 வகையான விதைகள் சேமிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வகையிலும் 400 - 500 மாதிரிகள் சேமிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things To Know About World Seed Bank, Svalbard Global Seed Vault!

Things To Know About World Seed Bank, Svalbard Global Seed Vault!
Story first published: Friday, February 17, 2017, 10:56 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter