ஏன் வீட்டில் இந்த தெய்வங்களை வைத்திருக்கக்கூடாது எனத் தெரியுமா?

உங்களுக்கு வீட்டில் எந்த மாதிரியான தெய்வ சிலைகள் அல்லது படங்களை வைத்திருக்கக்கூடாது என்று தெரியாதா? அப்படியெனில் இக்கட்டுரை உங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.

Subscribe to Boldsky

ஒவ்வொருவரது வீட்டிலும் தெய்வ சிலைகளும், படங்களும் இருக்கும். ஆனால் வீட்டில் தெய்வ சிலைகள் மற்றும் படங்களை வைக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் சில வகையான சிலைகள் அல்லது படங்களை வீட்டில் வைத்திருக்கக்கூடாது என்று கூறுவார்கள்.

உங்களுக்கு வீட்டில் எந்த மாதிரியான தெய்வ சிலைகள் அல்லது படங்களை வைத்திருக்கக்கூடாது என்று தெரியாதா? அப்படியெனில் இக்கட்டுரை உங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

ருத்ர வடிவம்

வீட்டில் ருத்ர தாண்டவம் ஆடுவது போன்ற தெய்வ சிலைகள் அல்லது படங்களை வைத்திருக்கக்கூடாது. இல்லாவிட்டால், வீட்டில் அச்ச உணர்வு அதிகரிப்பதோடு, எதிர்மறை ஆற்றல்களும் வீட்டைச் சூழ்ந்திருக்கும்.

ஆக்கிரோஷமான தெய்வ படங்கள்

எதிரியை அழிப்பது போன்று ஆக்கிரோஷமாக இருக்கும் தெய்வ படங்களை வீட்டில் வைத்து பூஜிக்கக்கூடாது. இதுவும் ஒரு வகையான ருத்ர நிலை தான். இம்மாதிரியான படங்களை வீட்டில் வைத்திருந்தால், வீட்டில் நெருக்கடி அதிகரிக்கும்.

ஒரே மாதிரியான கடவுள்

பூஜை அறையில் ஒரே மாதிரியான தெய்வ சிலைகள் அல்லது படங்களை வைத்து பூஜிக்கக்கூடாது. குறிப்பாக அவைகளை அருகருகிலோ அல்லது எதிரெதிரிலோ வைக்கவே கூடாது. வாஸ்து சாஸ்திரத்தின் படி, இவ்வாறு செய்தால், வீட்டில் சண்டை சச்சரவுகள் அதிகமாக இருக்கும்.

உடைந்த கடவுள் சிலைகள்

வீட்டு பூஜை அறையில் உடைந்த தெய்வ சிலைகள் அல்லது கிழிந்த படங்களை வைத்திருக்கவே கூடாது. இது வாஸ்து மற்றும் ஜோதிடத்தின் படி அபசகுணமாக கருதப்படுகிறது. மேலும் இம்மாதிரி வைத்திருந்தால், வீட்டில் செல்வம் நிலைக்காது.

கிழிந்த நாள்காட்டி

வீட்டு சுவற்றில் கிழிந்து இருக்கும் தெய்வ படங்கள் கொண்ட நாள்காட்டியை வைத்திருந்தாலும், அது வீட்டில் வறுமையை அதிகரிக்குமாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

These Are 5 Such Gods' Idols And Images That One Should Never Bring Into The House

There are certain kinds of idols that we should not keep in homes. Today, we’ll be telling you about such pictures and statues.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter