2016-ல் இல்லறத்தில் இணைந்த செம கியூட் ஸ்டார் தம்பதிகள்!

Posted By:
Subscribe to Boldsky

சென்ற 2016-ல் பல இளம் கதாநாயகர்கள், சின்னத்திரை நட்சத்திரங்கள், நடிகைகள் இல்லறத்தில் இணைந்தனர். பலரது திருமணம் காதல் திருமணமாகவும், சிலரது திருமணம் அப்பா - அம்மாவின் தேர்வாகவும் இருந்தது. "கண்ணுப்பட போகுதய்யா.." எனும் அளவிற்கு இவர்கள் அனைவரும் மிக கியூட் தம்பதிகளாக திகழ்ந்தனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அசின் - ராகுல் சர்மா!

அசின் - ராகுல் சர்மா!

மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் ஷர்மாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் அசின். இவர்களது திருமணம் கிருஸ்துவ முறை, இந்து முறை என இரண்டு முறை நடந்தது. இந்து முறைப்படி ஜனவரி 19, 2016-ல் திருமணம் நடந்தது.

நகுல் - ஸ்ருதி பாஸ்கர்!

நகுல் - ஸ்ருதி பாஸ்கர்!

சார்மிங் நடிகர் நகுல் குறுகிய கால காதலர்கள். இவர்கள் இருவரம் பிப்ரவரி 28 அன்று திருமணம் செய்துக் கொண்டார்கள். குடும்பத்தார் மட்டும் அழைத்து சிம்பிளாக திருமணம் நடந்தது.

சந்திரன் - அஞ்சனா!

சந்திரன் - அஞ்சனா!

நடிகர் சந்திரன் மற்றும் சன் டிவி தொகுப்பாளர் அஞ்சனாவிற்கு கும்பகோணத்தில் மார்ச் 10-ல் திருமணம் நடந்தது. இவர்கள் இருவரும் பல வருடங்கள் காதலித்து வந்தவர்கள். இருவீட்டார் ஒப்புக்கொள்ளவே திருமணம் சிறப்பாக நடைப்பெற்றது.

பாபி சிம்ஹா - ரேஷ்மி மேனன்!

பாபி சிம்ஹா - ரேஷ்மி மேனன்!

உறுமீன் படத்தின் படப்பிடிப்பு காலத்தில் தான் பாபி சிம்ஹா மற்றும் ரேஷ்மா இருவர் மத்தியில் காதல் மலர்ந்தது. உடனடியாக வீட்டில் சம்மதம் வங்கி இருவரும் திருப்பதியில் ஏப்ரல் 22 அன்று திருமணம் செய்து கொண்டனர்.

அமித் பார்கவ் - ஸ்ரீரஞ்சனி!

அமித் பார்கவ் - ஸ்ரீரஞ்சனி!

சின்னத்திரை நடிகர் அமித் மற்றும் ரேடியோ தொகுப்பாளர் ஸ்ரீரஞ்சனி இருவரும் ஒரு வர்க்ஷாப்பில் கலந்துகொண்ட போது காதலில் விழுந்தனர். பெற்றோரை சம்மதிக்க வைத்து கடந்த ஜூன் 16-ல் திருமணம் செய்துக் கொண்டனர்.

பூஜா உமாசங்கர் - ப்ரஷன் டேவிட் வித்தகன்!

பூஜா உமாசங்கர் - ப்ரஷன் டேவிட் வித்தகன்!

இலங்கை நடிகையான "நான் கடவுள்" பூஜா தொழிலதிபர் ப்ரஷன் டேவிட்டை டிசம்பர் 19-ல் திருமணம் செய்துக் கொண்டார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Tamil Celebrities Who Have Married In 2016

Tamil Celebrities Who Have Married In 2016
Please Wait while comments are loading...
Subscribe Newsletter