For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க தோள்பட்டை உங்கள பத்தி என்ன சொல்லுதுன்னு தெரிஞ்சுக்கணுமா?

இங்கு எந்த மாதிரியான தோள்பட்டையைக் கொண்டவர்கள் எம்மாதிரியான குணநலன்களைக் கொண்டிருப்பார்கள் என கொடுக்கப்பட்டுள்ளது.

|

ஒருவருடைய குணநலன்களை பல்வேறு வழிகளின் மூலம் அறியலாம். அதில் ஒன்று ஒருவரது தோள்பட்டையின் வடிவத்தைக் கொண்டே அறிவது. தோள்பட்டை உடலுக்கு உறுதியை வழங்கி, தண்டுவடம் மற்றும் உடலின் இதர உறுப்புக்களைத் தாங்குவதில் முக்கிய பங்கை வகிக்கிறது.

இந்த தோள்பட்டையைக் கொண்டே ஒருவரது வலிமை மற்றும் உண்மையில் அவர்கள் எப்பேற்பட்டவர்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும். சரி, இப்போது எந்த மாதிரியான தோள்பட்டையைக் கொண்டவர்கள் எம்மாதிரியான குணநலன்களைக் கொண்டிருப்பார்கள் எனக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
லேசாக வளைந்த தோள்பட்டை

லேசாக வளைந்த தோள்பட்டை

ஒருவரது தோள்பட்டை சற்று வளைந்திருந்தால், அவர்கள் வெளிப்படையாக எதையும் பேசமாட்டார்கள் மற்றும் சமூக வாழ்வில் இருந்து சற்று ஒதுங்கியே இருப்பர். மேலும் இவர்கள் உடலை விட மூளையைத் தான் அதிகம் பயன்படுத்துவார்கள். அதோடு இந்த வகையினர் 40 வயதை எட்டியதும் உடல் நல பிரச்சனைகளால் போராடுவார்கள். சிலர் மன இறுக்கம் மற்றும் உளவியல் சிக்கல்களால் அடிக்கடி அவஸ்தைப்படுவார்கள்.

நன்கு வளைந்த தோள்பட்டை

நன்கு வளைந்த தோள்பட்டை

இந்த மாதிரியான தோள்பட்டையைக் கொண்டவர்களின் ஆரோக்கியம் மோசமாக இருக்கும். இந்த வகையினர் எப்போதும் குனிந்த நிலையிலேயே இருப்பதால், உறவுகளைப் பராமரிப்பதில் பல சிக்கல்களை சந்திப்பர். மிகவும் நெருக்கமானவர்களை அருகில் வைத்துக் கொள்வதிலும் போராட்டங்களை சந்திப்பர். மிகவும் புத்திசாலியாக இருந்தாலும், தொழில் வாழ்க்கையில் போராட்டங்களை தொடர்ச்சியாக சந்திப்பார்கள்.

வளைந்த தோள்பட்டையுடன் கழுத்து பின்புறமாக தூக்கி இருப்பது

வளைந்த தோள்பட்டையுடன் கழுத்து பின்புறமாக தூக்கி இருப்பது

இம்மாதிரியான தோள்பட்டை அமைப்பைக் கொண்டவர்கள், நடக்கும் போது பாதங்களை தேய்த்தவாறு நடப்பார்கள். இது ஒரு மோசமான அடையாளம். இவர்கள் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் பல பிரச்சனைகளை சந்திப்பார்கள் மற்றும் இவர்களது பொறுமை எப்போதுமே சோதிக்கப்பட்டவாறு இருக்கும்.

தூக்கிய நிலையிலான தோள்பட்டை

தூக்கிய நிலையிலான தோள்பட்டை

இந்த வகையான தோள்பட்டையைக் கொண்டவர்கள் நடக்கும் போது நேராக நடப்பார்கள். இந்த வகையினருக்கு தாமதமாக திருமணம் நடக்கும் மற்றும் வேலை இல்லாமலும் திண்டாடுவார்கள். மேலும் இவர்கள் தங்களது ஈகோவைக் குறைத்துக் கொள்ள கற்றுக் கொள்ளாவிட்டால், வாழ்வில் இவர்களது போராட்டம் இன்னும் தீவிரமாக இருக்கும்.

தளர்ந்த தோள்பட்டை

தளர்ந்த தோள்பட்டை

இந்த வகை தோள்பட்டையைக் கொண்ட மக்கள் சமநிலையானவர்கள் மற்றும் வரிசைப்படுத்தப்பட்ட வாழ்க்கையை வாழ்வார்கள். மேலும் இவர்களுக்கு எப்போது மற்றும் எப்படி தங்களது உணர்வுகளை கட்டுப்படுத்துவது என்று தெரியும். தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை சீராக கொண்டு செல்ல எப்படி நடந்து கொள்ள வேண்டும் என நன்கு தெரிந்தவர்களாக இருப்பர். இவர்கள் தனது 36 வயதில் அனைத்திலும் வெற்றியையே காண்பார்கள்.

தளர்ந்த தோள்பட்டையுடன் முறுக்கப்பட்ட தசைகள்

தளர்ந்த தோள்பட்டையுடன் முறுக்கப்பட்ட தசைகள்

இந்த வடிவ தோள்பட்டையைக் கொண்டவர்கள், தண்டுவடம், இதயம் அல்லது இரத்தம் சம்பந்தமான பிரச்சனைகளால் அதிகம் அவஸ்தைப்படுவார்கள் மற்றும் இந்த பிரச்சனைகளே இவர்களது தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை கடுமையாக பாதிக்கும்.

தோள்பட்டை வெளிப்புறமாக விரிவடைந்து இருப்பது

தோள்பட்டை வெளிப்புறமாக விரிவடைந்து இருப்பது

இந்த வகையினர் அதிக உணர்ச்சிவசப்படுவதோடு, எதிலும் உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுப்பதால், சில நேரங்களில் அது மிகுந்த வருத்தத்தை அளிக்கும். மேலும் இவர்கள் தங்களது தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்வில் ஆழமாக ஈடுபடுவதைத் தவிர்ப்பார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Shoulder Shape Reveals A Lot About You

Did you know that the shape of your shoulder can reveal a lot about you? Yes it can. Check out what it reveals…
Story first published: Friday, May 19, 2017, 12:47 [IST]
Desktop Bottom Promotion