For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டோணியின் மறக்க முடியாத சிறந்த 11 ஃபினிஷிங் இன்னிங்க்ஸ்!

கேப்டன் கூல், ஃபினிஷிங் ஸ்பெஷலிஸ்ட் டோணியின் மறக்க முடியாத 11 சிறந்த ஃபினிஷிங் இன்னிங்க்ஸ் பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.

|

நேற்று டோணி கேப்டன் பதிவியில் இருந்து விலகியதை அறிவித்ததை அடுத்து, எங்கு திரும்பினால், யாரை பார்த்தாலும் டோணி மயம் தான். டோணி ஒரு இந்திய கேப்டன் என்பதை தாண்டி, தனது பாவனை, ஆட்டத்திறன், தோரணை என அனைத்திலும் ஒரு ஹீரோ போன்றே விளங்கினார்.

களத்தில் இறங்கி நடந்து வரும் போது சூப்பர்ஸ்டார்களுக்கு கிடைக்கும் அந்த ஆரவாரம் கிடைக்கும் வீரராக டோணி திகழ்ந்து வருகிறார். இனியொரு கேப்டன் கூல் இந்திய அணிக்கு கிடைப்பது மிகவும் கடினம். சிக்கலான தருணங்களில் கூட மிக கூலாக முடிவெடுக்கும் பக்குவம் டோணியிடம் மட்டுமே காணப்பட்ட ஒரு தனி திறன்.

டோணியை கேப்டனுக்கு முன், பின் என எளிதாக பிரித்து பார்க்க முடியும். ஓர் மூர்க்கத்தனமாக பேட்ஸ்மேன் டோணி. ஆனால், கேப்டன் ஆன பிறகு தனது பொறுப்பை உணர்ந்து மொத்த ஆட்டத் திறனையும் மாற்றி கொண்டார். டோணி என்றாலே ஃபினிஷிங் தான். இனி,டோணியின் மறக்க முடியாத சிறந்த 11 ஃபினிஷிங் இன்னிங்க்ஸ்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முதல் குறி!

முதல் குறி!

2005 ட்ரை சீரியஸ்-ல் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 67* ரன்கள்!

91 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகள் இழந்து இந்தியா தடுமாறிக் கொண்டிருந்த தருணத்தில். யுவராஜ்சிங்குடன் இணைந்து 251 ரன்கள் என்ற இலக்கை விரட்டினார் டோணி. 54 பந்துகளில் 67 ரன்கள் விளாசி சிக்ஸருடன் ஆட்டத்தை முடித்தார்.

எச்சரிக்கை!

எச்சரிக்கை!

2005 இலங்கைக்கு எதிரான போட்டியில் 183* ரன்கள்!

299 என்ற கடின இலக்கை எதிர்த்து களமிறங்கிய இந்தியாவிற்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. சச்சின் ஆட்டமிழந்தார். அணைத்து பந்துவீச்சாளர்களின் பந்துகளையும் எல்லா பக்கமும் சிக்ஸ், ஃபோராக தெறிக்கவிட்டு 183 ரன்கள் விளாசினார் டோணி.

முசாரப் பாராட்டு!

முசாரப் பாராட்டு!

2006 பாகிஸ்தான்-க்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டி - 72* ரன்கள்!

289 என்ற இலக்கை விரட்ட சச்சின் 95 ரன்கள் அடித்து நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தார். பிறகு 35வது ஓவரில் யுவராஜ் சிங்குடன் ஜோடி சேர்ந்த டோணி 46 பந்துகளில் 72 ரன்கள் குவித்து 14 பந்துகள் மிச்சம் இருக்கும் போதே வெறிபெற வைத்தார். அப்போது தான் முசாரப் டோணியின் சிகை அலங்காரம் நன்றாக இருக்கிறது. இதை மற்ற வேண்டாம் என கூறினார்.

நொறுக்கிய டோணி!

நொறுக்கிய டோணி!

2006, பாகிஸ்த்தான்-க்கு எதிரான 5வது ஒருநாள் போட்டி - 77* ரன்கள்!

287 என்ற இலக்கை விரட்டியது இந்தியா. 31 வது ஓவரில் 146 ரன்கள் தேவை என்ற நிலையில் களம் இறங்கினார் டோணி. 77 ரன்கள் குவித்து இந்தியாவை வெற்றிபெற செய்தார்.

மீட்சி!

மீட்சி!

2007, பங்களாதேஷ்க்கு எதிராக டாக்காவில் முதல் ஒருநாள் போட்டி - 91* ரன்கள்!

251ரன்களை சேஸ் செய்ய இந்தியா களம் இறங்கியது. 144 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் என்ற நிலையில் இந்தியா இருந்தது. மூன்றாவதாக களம் இறங்கியிருந்த டோணி அன்று 91 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

புதிய ரோல்!

புதிய ரோல்!

2008, ஆஸ்திரேலியாவில் இலங்கைக்கு எதிரான ட்ரை சீரியஸ் போட்டி - 50* ரன்கள்!

கேப்டனாகும் முன்பு வரை அதிரடி காட்டிய டோணி. கேப்டன் ஆன பிறகு நிதானமான ஆட்டத்தை காண்பிக்க துவங்கினார். ஆஸ்திரேலியாவில் இலங்கைக்கு எதிரானட்ரை சீரியஸில் 50 ரன்கள் எடுத்தார், இதில் ஒரு பவுண்டரி கூட அவர் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசி ஓவரில் 6!

கடைசி ஓவரில் 6!

2009, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக - 46* ரன்கள்!

மழை காரணமாக 22 ஓவர்களில் 159 ரன்கள் சேஸ் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. மூன்றாவதாக இறங்கிய டோணி, கடைசி ஓவர்களில் 11 ரன்கள் வேண்டும் என்ற பதட்டமான தருணத்தை எதிர்கொண்டு இந்தியாவிற்கு வெற்றி தேடி தந்தார்.

உலக கோப்பை!

உலக கோப்பை!

2011, உலக கோப்பை இறுதி போட்டி - 91* ரன்கள்!

யாராலும் மறக்க முடியாத இரவு அது. 28 வருடங்களுக்கு பிறகு இந்தியா உலக கோப்பை வெல்ல, சச்சினின் கனவு மெய்ப்பிக்க காரணமாக இருந்த ஆட்டம். ஆரம்பத்தில் காம்பீர் நல்ல அடித்தளம் ஏற்படுத்தி கொடுக்க, கடைசியில் யுவராஜ் - டோணி இருவரும் சேர்ந்து இந்தியாவின் நீண்ட நாள் கனவை மெய்பிக்க செய்தனர்.

ட்ரை சீரியஸ்!

ட்ரை சீரியஸ்!

2012, ட்ரை சீரியஸ் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக - 44* ரன்கள்!

270 ரன்களை விரட்டிய இந்தியா 178 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் இழந்தது. கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவை என்ற நிலையில் இரண்டு சிக்ஸர்கள் அடித்து வெற்றிபெற செய்தார் டோணி.

அதிர வைத்த டோணி!

அதிர வைத்த டோணி!

2013, ட்ரை சீரியஸ் இலங்கைக்கு எதிராக - 45* ரன்கள்!

ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்து கொண்டிருக்க 6-வதாக இறங்கிய டோணி நிதானமாக ஆடிக் கொண்டிருந்தார். கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. முதல் பந்தை தவறவிட்ட டோணி, அடுத்த மூன்று பந்துகளில் 6,4 மாக அடித்து வெற்றிபெற செய்தார்.

இந்தியாவை காத்த டோணி!

இந்தியாவை காத்த டோணி!

2015, உலக கோப்பை போட்டி ஜிம்பாப்வே எதிராக - 85* ரன்கள்!

ஜிம்பாப்வே 287 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்திருந்தது. சற்றே பதட்டம் நிலவிய இந்த போட்டியில் டோணி, ரெய்னா சிறப்பாக ஆடினார். எப்போதும் போல சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்தார் டோணி!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

MS Dhoni’s 11 unforgettable finishes in ODIs

MS Dhoni’s 11 unforgettable finishes in ODIs
Story first published: Thursday, January 5, 2017, 13:05 [IST]
Desktop Bottom Promotion