அக்ஷ்ய திருத்யை அன்று எந்த இராசிக் காரர்கள் எந்தெந்த மந்திரம் சொல்ல வேண்டும் ?

By: Divyalakshmi Soundarrajan
Subscribe to Boldsky

இந்துக்களின் பண்டிகைகளில் மிக முக்கிய மங்களகரமான நாட்களில் ஒன்று தான் அட்சயத் திருதியை. இந்த நாட்களில் பல திருமணங்களும் பல்வேறு சுப நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. இதற்குக் காரணம் இந்த நாளில் எந்த ஒரு விஷயம் ஆரம்பித்தாலும் அது நல்லபடியாக இருக்கும் என்பது ஐதீகம். எனவே, தொழில் தொடங்குவதற்கு இது மிகவும் ஏற்ற நாளாக உள்ளது.

இந்தக் குறிபிட்ட நாளில் ஒவ்வொரு இராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு மாதிரியான பலன்கள் இருக்கின்றன. அவை நல்லதாகவும் இருக்கலாம் இல்லை மாறுபட்ட பலன்களாகவும் இருக்கலாம். இந்த நாளில் எல்லோருக்கும் நல்லதே நடக்க வேண்டும் என்பதற்காகத் தான் ஒவ்வொரு இராசிக்காரர்களுக்கும் தனித் தனியே பலன்களை ஆராய்ந்து அதற்கேற்ற உகந்த மந்திரங்கள் இங்கே கூறப்பட்டுள்ளன.

அக்ஷ்ய திருத்யை அன்று மந்திரம் கூறுவதோடு மட்டுமல்லாமல் தானம் செய்வதன் மூலம் கூடுதல் பலன் கிடைக்கப் பெறும். எந்த இராசிக்காரர்கள் எந்தெந்தப் பொருட்களை தானமாக வழங்கினால் நல்லதென்றும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் கூற வேண்டிய மந்திரம்:

"ஓம் ஐங் க்ளிங் சாங்"

இந்த மந்திரத்தைக் கூறுவதால் செல்வாக்குக் கூடும்.

தானம் செய்ய வேண்டியப் பொருட்கள் : பருப்பு, கோதுமை, சிவப்பு நிறப் பூக்கள், சிவப்பு நிற ஆடைகள், செம்பு மற்றும் வெல்லப்பாகு.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் கூற வேண்டிய மந்திரங்கள்:

"ஓம் ஐங் க்ளிங் ஸ்ரீங்"

இந்த மந்திரத்தைக் கூறுவதால் வாழ்வில் சந்தோஷம் பெருகும்.

தானம் செய்ய வேண்டியப் பொருட்கள் : வெள்ளை நிறத்தில் உள்ள பசு மற்றும் கன்றுக் குட்டி, வைரம், குதிரை போன்றவை, அரிசி மற்றும் வாசனை திரவியங்கள்.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் கூற வேண்டிய மந்திரங்கள்:

"ஓம் க்ளிங் ஐங் சாங்"

இந்த மந்திரத்தைக் கூறுவதால் வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் பெருகும்.

தானம் செய்ய வேண்டியப் பொருட்கள் : பச்சை நிறத்தில் உள்ள பருப்பு, மரகதக் கற்கள், தங்கள் மற்றும் சிப்பி.

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்கள் கூற வேண்டிய மந்திரங்கள்:

"ஓம் ஐங் க்ளிங் ஸ்ரீய்ங்"

இந்த மந்திரத்தைக் கூறுவதால் செல்வம் பெருகும். பணப் பிரச்சனை உள்ளவர்கள் இந்த மந்திரத்தைக் கூறுவதால் சரியாகும்.

தானம் செய்ய வேண்டியப் பொருட்கள் : நெய், சர்க்கரை, பால், தயிர், வெள்ளி, வாசனை திரவியங்கள், வெள்ளை நிற ஆடைகள், அரிசி, முத்துக்கள் மற்றும் மூங்கில் கூடைகள்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் கூற வேண்டிய மந்திரங்கள்:

"ஓம் ஹ்ரிங் ஸ்ரீய்ங் ஸ்ராங்"

இந்த மந்திரம் கூறுவதால் வெற்றி கிடைக்கும்.

தானம் செய்ய வேண்டியப் பொருட்கள் : பசு, சிவப்பு நிற பூக்கள், சிவப்பு நிற ஆடைகள், செம்பு, வெல்லப்பாகு, தங்கம் மற்றும் கோதுமை.

 கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் கூற வேண்டிய மந்திரங்கள்:

"ஓம் ஸ்ரீங் ஐங் ஸ்ராங்"

கன்னி ராசிக்காரர்கள் இந்த மந்நிதரத்தைக் கூறுவது மிக நல்லது.

தானம் செய்ய வேண்டியப் பொருட்கள் : பச்சை நிற வளையல்கள், ஆடைகள் மற்றும் பெருஞ்சீரகம்.

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் கூற வேண்டிய மந்திரங்கள்:

"ஓம் ஸ்ரீங் ஐங் ஷாங்"

இந்த மந்திரம் துலாம் ராசிக்காரர்களுக்கு மிக நல்லது.

தானம் செய்ய வேண்டியப் பொருட்கள் : வெள்ளை நிற ஆடைகள், சந்தனப் பவுடர், வாசனைத் திரவியம் மற்றும சர்க்கரை.

விருச்சகம்

விருச்சகம்

விருச்சக ராசிக்காரர்கள் கூற வேண்டிய மந்திரங்கள்:

"ஓம் ஐங் க்ளிங் ஸ்ரீய்ங்"

செல்வம் மற்றும் குடும்பத்தில் மகிழ்ச்சிப் பெருகும்.

தானம் செய்ய வேண்டியப் பொருட்கள் : சந்தனப் பவுடர், பவளம் மற்றும் குங்குமப்பூ.

 தனுசு

தனுசு

தனுச ராசிக்காரர்கள் கூற வேண்டிய மந்திரங்கள்:

"ஓம் ஹ்ரீங் க்ளிங் ஷாங்"

இந்த மந்திரம் வாழ்க்கையில் அமைதியை தரும்.

தானம் செய்ய வேண்டியப் பொருட்கள் : மஞ்சள் நிற தானியங்கள், மஞ்சள் நிற ஆடைகள், புஷ்ப ராகம்.

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்கள் கூற வேண்டிய மந்திரங்கள்:

"ஓம் ஹ்ரீங் க்ளீங் ஷாங்"

தானம் செய்ய வேண்டியப் பொருட்கள் : காலணிகள், எள், எண்ணெய், பருப்பு வகைகள் மற்றும் பசு.

 கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் கூற வேண்டிய மந்திரங்கள்:

"ஓம் ஹ்ரீங் க்ளிங் ஸ்ரீய்ங்"

லட்சுமியின் ஆசியைப் பெற்று தர இது மிகவும் உதவும்.

தானம் செய்ய வேண்டியப் பொருட்கள் : வெள்ளி, இரும்பு, நீல மாணிக்கம், கருப்பு நிற ஆடைகள், போர்வைகள் மற்றும் குடைகள்.

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்கள் கூற வேண்டிய மந்திரங்கள்:

"ஓம் ஹ்ரீங் க்ளிங் ஷாங்"

லட்சுமி தேவியின் முழு ஆசியை இந்த மந்திரம் பெற்றுத் தரும்.

தானம் செய்ய வேண்டியப் பொருட்கள் : தங்கம், மஞ்சள், குங்குமப்பூ, சர்க்கரை, வெள்ளி, உப்பு, தேன் மற்றும் குதிரை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Mantras to chant on akshaya tritiya based on zodiac sign

Mantras to chant on akshaya tritiya based on zodiac sign
Story first published: Thursday, April 20, 2017, 18:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter