புதைகுழியில் சிக்கினால் அதிலிருந்து எப்படி தப்பிப்பது?

இங்கு புதை குழி அல்லது புதை மணலில் சிக்கினா, அதிலிருந்து எப்படி தப்பித்து வரலாம், என்னெவெல்லாம் செய்ய கூடாது என்பது குறித்து கூறப்பட்டுள்ளது.

Posted By:
Subscribe to Boldsky

எத்தனை பேர் புதைகுழி / புதை மணலை நேரில் கண்டிருப்பீர்கள் என தெரியாது. பெரும்பாலும் இதை நாம் சினிமாக்களில் தான் பார்த்திருப்போம். சினிமாக்களில் நாம் கண்ட புதை குழிகள் மட்டுமல்ல, அதனால் ஏற்படும் விளைவுகள் என அவர்கள் காண்பிப்பதும் கூட போலி தான்.

உண்மையில் புதை குழியில் விழுந்தால் உயிரிழக்காமல் வெளிவந்துவிட முடியும். அதற்கான வழிகள் பலவன இருக்கின்றன. அவற்றை பற்றி தான் நாம் இந்த கட்டுரையில் தெரிந்துக் கொள்ள போகிறோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அச்சம் கூடாது!

அச்சம் கூடாது!

புதை மணலில் / குழியில் சிக்கிக் கொண்டால் முதலில் பயப்பட கூடாது. புதை குழியில் இருந்து எந்தவிதமான காயமோ, சிக்கலோ இன்றி தப்பித்து வர முடியும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில், இது தான் உண்மை. அச்சத்தை அப்புறப்படுத்திவிட்டாலே பாதி பிரச்சனைகளுக்கு தீர்வுக் கிடைத்துவிடும்.

மூழ்க மாட்டீர்கள்!

மூழ்க மாட்டீர்கள்!

புதை மணலில் யாரும் மூழ்க மாட்டார்கள். அதில் மிதக்கதான் செய்வோம். தண்ணீரும், கெட்டி மணலும் சேர்ந்த கலவையாக தான் புதை மணல் இருக்கும். மேலும், இது மனிதர்களின் இடுப்பு வரை மட்டுமே மூழ்க செய்யும்.

அடர்த்தி!

அடர்த்தி!

புதை மணலில் விழுந்தால் அதன் அடியே இருக்கும் நல்ல மணலானது, களிமண் மற்றும் உப்புத்தண்ணீர் உடன் சேர்ந்து கெட்டியாக மாறும். இதனால் அடர்த்தி அதிகமாகி இறுக்கமான நிலைக்கு மாறும். இந்நிலையில் இருந்து வெளிவர சாத்தியம் இல்லை.

பாகுத்தன்மை!

பாகுத்தன்மை!

Viscosity என கூறப்பட்டும் பாகுத்தன்மை தான் புதை குழியில் பெரிய ஆபத்து ஆகும்.நீங்கள் எந்த அசைவும் ஏற்படுத்தாமல் இருக்கும் தருணத்தை விட, அச்சத்தில் அதிக அழுத்தம் கொடுக்கும் போது மணலின் பாகுத்தன்மை அதிகரித்து புதை குழியில் விழுந்த நபர் அசைய முடியாத நிலை உருவாகலாம்.

கைப்பிடித்து தூக்க கூடாது!

கைப்பிடித்து தூக்க கூடாது!

அதே போல புதை மணலில் விழுந்த நபரை கைகொடுத்து தூக்க முயல்வது தவறு. இதனால் காயம் தான் உண்டாகும். இதற்கு பதிலாக சிக்கிக் கொண்ட நபரே கால்களை சைக்கிள் ஓட்டுவது போல அசைத்து செயற்பட வேண்டும்.

நீச்சல் முறை!

நீச்சல் முறை!

கால்களை இப்படி அசைப்பதால் சுற்றியிருக்கும் கெட்டியான மணல் இறுக்க நிலை இழக்கும். இதன் பிறகு கைகளை Bakcstroke எனப்படும் கைகளை பின்னோக்கி அசைத்து நீச்சல் அடிக்கும் முறையில் அசைக்க வேண்டும். இதனால் புதை மணலில் சிக்கிய நபர் இறுக்கமான நிலையில் இருந்து வெளிப்புறம் நோக்கி நகர முடியும்.

உயிரிழப்பு!

உயிரிழப்பு!

பொதுவாக புதை மணலில் சிக்கி உயிரிழப்பு ஏற்படாது. புதை மணலில் சிக்கிய போது பெரிய அலைகள் அல்லது வெள்ளம் ஏற்பட்டு மரணம் அடைந்தவர்கள் தான் இருக்கின்றன. மற்றபடி புதை மணலில் மூழ்கி இறப்பது போன்றவை சினிமாக்களில் மட்டுமே நடக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How To Escape Yourself From Quicksand?

How To Escape Yourself From Quicksand?
Please Wait while comments are loading...
Subscribe Newsletter