For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜல்லிக்கட்டு மக்கள் போராட்டத்தின் போது காட்டுத்தீ போல பரவிய டாப் 10 மெகா புரளிகள்!

இங்கு மக்கள் நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது காட்டுத்தீ போல பரவிய மெகா புரளிகள் பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.

|

இன்டர்நெட்டில் வைரல் என்ற ஒரு வார்த்தை இருக்கிறது. எந்த ஒரு செய்தி, பதிவு அதிகமாக பேசப்படுகிறதோ அது வைரல் என்பார்கள். டிரென்ட் என்றும் கூறுவார். சென்ற வாரம் ஜல்லிகட்டுக்கு ஆதரவாக மக்கள் நடத்திய பெரும் போராட்டத்தின் போது பல செய்திகள் முகநூல், வாட்சப்பில் பரவின. அதில் பலவன போலி தான்.

இதன் காரணமாக பதட்டமான சூழல்கள் உண்டாகின. படித்தாலே போலி என தெரியும். தெரிந்தும் பரப்புகிறார்கள். அதில் சில இங்கே...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
துணை இராணுவம்!

துணை இராணுவம்!

துணை இராணுவம் சென்னை வந்துவிட்டனர். அரசு போராட்டத்தை நிறுத்த பீரங்கிகளை கொண்டுவந்துள்ளது என கிலோமீட்டர் நீளத்திற்கு செய்திகள் பரவின.

மேனகா காந்தி மனு!

மேனகா காந்தி மனு!

அரசு ஜல்லிக்கட்டுக்கு ஒப்புக்கொண்ட பிறகு, மேனகா காந்தி இதை எதிர்த்து ஜல்லிக்கட்டை தடை செய்ய மனு கொடுத்துள்ளார் என ஒரு செய்தி பரவியது. பிறகு ஒருசில மணி நேரத்தில் அது போலி என தெரியவந்தது.

போலீஸ்காரர் பணிநீக்கம்!

போலீஸ்காரர் பணிநீக்கம்!

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஒரு போலீஸ்காரர் தனது கருத்தை ஆவேசமாக பதிவு செய்தார். அவரை பணிநீக்கம் செய்துவிட்டனர் என ஒரு கூட்டம் கூறியது. ஆனால், அதுப்பற்றி எந்த ஒரு உண்மை தகவலும் வெளியாகவில்லை.

மோடிக்கு கால் செய்த ட்ரம்ப்!

மோடிக்கு கால் செய்த ட்ரம்ப்!

போராட்டத்தை கண்டும், மக்கள் பீட்டா, கோக், பெப்சியை எதிர்ப்பதை கண்டும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், மோடி அவர்களுக்கு கால் செய்து எச்சரிக்கை விடுத்தார் என ஒரு செய்தி பரவியது.

அமெரிக்காவில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி!

அமெரிக்காவில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி!

ட்ரம்ப் ஜல்லிக்கட்டை பற்றி அறிந்து, அமெரிக்காவில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்துள்ளார் என்ற ட்விட்டர் ஃபேக் படம் வைரலாக பரவியது.

முழக்கமிட்ட பெண் அந்த கட்சி!

முழக்கமிட்ட பெண் அந்த கட்சி!

போராட்டத்தில் முழக்கமிட்ட திமுகவை சேர்ந்தவர் என ஒரு கூட்டம் புரளியை கிளப்பியது. பிறகு அந்த பெண்ணே ஒரு வீடியோ எடுத்து சமூக தளத்தில் பதிவு செய்தார்.

வீர தமிழச்சி கொலை!

வீர தமிழச்சி கொலை!

முழக்கமிட்ட பெண்ணை கொலை செய்துவிட்டனர். ஒரு கட்சியின் தலைவர் அவரை தண்டவாளத்தில் தள்ளி கொடூரமான முறையில் கொன்றுவிட்டார் கொலை செய்து விட்டனர் என செய்திகள் பரவின.

மன்டே பெட்ரோல் போடாதீங்க!

மன்டே பெட்ரோல் போடாதீங்க!

திங்கள் கிழமை பெட்ரோல் போடுவதை தவிர்த்தால் அமெரிக்க பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துவிடும். இதனால் அவர்கள் பயந்து விடுவார்கள் என சில செய்திகள் கிளப்பிவிடப்பட்டன.

தேசிய கீதம் பாடுங்க...

தேசிய கீதம் பாடுங்க...

போலீஸ் தடியடி நடத்தி, கூட்டத்தை கலைக்க வந்தால் தேசிய கீதம் பாடுங்கள். அவர்கள் அடிக்க மாட்டார்கள். அதை மீறி செயல்பட போலீஸுக்கு உரிமை இல்லை என்றும் கூட பல செய்திகள் வந்தன.

சில கூவல்கள்!

சில கூவல்கள்!

இதெல்லாம் போக கட்சி சேர்ந்த நியூஸ் சேனல்கள், அவரவர் கட்சி தலைவர்கள் தான் இந்த போராட்டம் வெற்றிபெற காரணம் என கதைக்கட்டி விட்டனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Fake News's Spreaded During Jallikattu People Movement Protest

Fake News's Spreaded During Jallikattu People Movement Protest
Story first published: Tuesday, January 24, 2017, 15:17 [IST]
Desktop Bottom Promotion