For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பற்றி பலரும் அறியாத உண்மைகள்!

முதல்வன் அர்ஜூனை தொக்கி சாப்பிட்ட, உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பற்றிய உண்மைகள்!

|

ஆரம்பத்தில் இவரை பலரும் எதிர்த்தனர். அதற்கான காரணம் இவர் ஒரு சாமியார், இவர் தனி மத சார்புடையவர் போன்றவை கூறப்பட்டன. ஆனால், நாளுக்கு, நாள் இவர் வெளியிடும் அறிக்கைகள் மற்றும் கொண்டுவரும் திட்டங்கள் பல வியக்கும் வகையிலும், புரட்சிக்கரமாகவும் இருக்கின்றன.

விவசாய கடன் தள்ளுப்படி, ஏற்றத்தாழ்வு இன்றி, படிப்பிற்கும், அறிவிற்கும் மட்டுமே முன்னுரிமை என இவரது அதிரடி திட்டங்கள் பலவன நீள்கின்றன. இன்று அதிரடி வியாழனாய் திகழும் யோகி ஆதித்யநாத், நேற்றைய 'காவி'ய புதனில் எப்படி இருந்தார், அவர் பற்றிய சில உண்மைகள் குறித்து இங்கு காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

யோகி ஆதித்யநாத் 1998-ல் இருந்து கோரக்பூர் தொகுதியில் தொடர்ந்து தேர்தலில் வெற்றிப்பெற்று வந்தவர் ஆவார். 12வது லோக்சபா தேர்தலின் போது இவர் இளம் வயதில் தேர்வான நபராக திகழ்ந்தார்.

#2

#2

யோகி ஆதித்யநாத்-ன் இயற்பெயர் அஜய் மோகன் பிஷ்த். இவர் பிறந்தது ஜூன்,5,1972. சன்யாசி ஆனபிறகு தனது பெயரை யோகி ஆதித்யநாத் என மாற்றிக் கொண்டார்.

#3

#3

யோகி ஆதித்யநாத் எச்.என்.பி கர்வால் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி படித்தவர். இவர் நல்ல பேச்சுத்திறன் கொண்டவர் ஆவார். இந்துத்துவா தவிர்த்து பார்க்கையில், இவர் பார்லிமென்ட்டில் பல பிரச்சனைகளை பற்றி எடுத்து பேசியுள்ளார்.

#4

#4

பி.ஜே.பி-ன் முக்கிய பிரமுகரான நபர் என்ற போதிலும். இவருக்கும், கட்சிக்கும் இடையேயான உறவு கடந்த பத்து வருடங்களாக அவ்வளவு பெரிதாக இல்லை என கூறுகின்றனர்.

#5

#5

யோகி ஆதித்யநாத் மீது 11 கிரிமினர் குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. இவற்றில் கொலை முயற்சி, மதம் சார்ந்த பகை, கொலை மிரட்டல், அபாயமான ஆயுதங்கள் ஏந்தியிருந்தது போன்றவையும் அடங்கும்.

#6

#6

இவர் ஹிந்து யுவா வாகினி என்ற தலித் இந்துக்கள் அடங்கிய அமைப்பை நிறுவினார். இதன் மூலமாக இவர் உ.பி-யில் அதிக பெயர் பெற்றதாக கூறப்படுகிறது.

#7

#7

2014-ல் இவர் கோரகநாத் கோவிலின் தலைமை மதகுருவாக ஆனார்.

#8

#8

2005-ல் யோகி ஆதித்யநாத் ஒரு தூய்மை பயணத்தை நடத்தினார். அதில் கிறிஸ்துவர்களை இந்துக்களாக மாற்றும் குறிக்கோள் கொண்டதாக அமைந்திருந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Facts About India's Redefined Chief Minister Yogi Adityanath!

Facts About India's Redefined Chief Minister Yogi Adityanath!
Desktop Bottom Promotion