For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விதியா? சதியா? அண்ணன் தங்கை திருமணம் செய்து கொண்ட சோகம்!

குழந்தை பேறு சிகிச்சைக்கு சென்ற தம்பதி, மரபணு சோதனையில் அண்ணன், தங்கை என தெரியவர அதிர்ச்சியில் உறைந்தனர்!

|

இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் எங்கிலும் அண்ணன் - தங்கை திருமணம் செய்துக் கொள்ளும் வழக்கம் பெரிதாக இல்லை. இதை யாரும் ஆமோதிப்பதும் இல்லை. ஆனால், விபத்தாக இதுபோன்ற சம்பவம் நமது உலகில் நடந்துள்ளது.

ஆனால், அமெரிக்காவின் மிசிசிப்பி பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியினர் தாங்கள் இரட்டையர் என்ற விசயமே தெரியாமல் திருமணம் செய்து, மகபேறு மருத்துவரின் மரபணு பரிசோதனையில் செய்தி கண்டறிந்து அதிர்ச்சியல் உறைந்து போயுள்ளனர் என்ற போலி செய்தி ஒன்று காட்டுத்தீ போல பரவி வருகிறது. அந்த செய்தி பற்றி இங்கு காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மிசிசிப்பி மாநிலம்!

மிசிசிப்பி மாநிலம்!

அமெரிக்காவை சேர்ந்த ஒரு தம்பதியினர் ஜாக்சன் எனும் மகப்பேறு மருத்துவரிடம் குழந்தை பேறு சிகிச்சைக்காக சென்றனர். ஜாக்சனும் அவர்களுக்கு சிகிச்சை அளித்து, மரபணு பரிசோதனை மேற்கொண்டார்.

மரபணு சோதனை!

மரபணு சோதனை!

மரபணு சோதனையின் போது தான் ஒரு அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளியானது. அதாவது, பரிசோதனைக்கு வந்த கணவன் மனைவி ஒரே மரபணு கொண்ட இரட்டையர்கள் என்பது தான் அந்த அதிர்ச்சியான தகவல்.

கார் விபத்து!

கார் விபத்து!

1984-ல் நடந்த கார் விபத்தில் கணவன் - மனைவி உயிரிழந்துள்ளனர். அவர்களது இரட்டை குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அவர்களில் ஆண் குழந்தையை ஒருவரும், பெண் குழந்தையை ஒருவரும் எடுத்து வளர்த்தனர்.

கல்லூரி!

கல்லூரி!

இந்த இருவருக்கும் தாங்கள் யார் என்ற விவரம் தெரியாமல், ஒரே கல்லூரியில் பயின்றனர். பயின்ற போதே காதலும் கொண்டனர். பிறகு திருமணமும் செய்துக் கொண்டனர்.

கர்ப்பம் தரிக்கவில்லை...

கர்ப்பம் தரிக்கவில்லை...

திருமணமாகியும் அப்பெண் கர்ப்பம் தரிக்கவில்லை என தெரியவர இருவரும் மகபேறு மருத்துவரை கண்டு பரிசோதனை செய்துக் கொள்ள முடிவு செய்தனர். அப்படி தான் இவர்கள் இருவரும் ஜாக்சன் எனும் மருத்துவரை கண்டனர்.

மனைவி நம்பவில்லை...

மனைவி நம்பவில்லை...

மரபணு பரிசோதனையில் வந்த தகவலை முதலில் மனைவி நம்ப மறுத்தார். இந்த தருணத்தில் தான் மருத்துவர் ஜாக்சன் ஊடகங்களிடம் இந்த வினோத நிகழ்வை பற்றி கூறினார். இவர்களது நலன் கருதி இருவரின் பெயர் மற்றும் படத்தை பகிர மருத்துவர் மறுத்தார்.

தவிப்பு!

தவிப்பு!

இப்போது தொடர்ந்து சேர்ந்து வாழ்வதா? அல்ல பிரிவதா? என்ற பரிதவிப்பில் செய்வதறியாது திகைத்து போய் இருக்கின்றனர் அந்த தம்பதிகள்.

போலி செய்தி!

போலி செய்தி!

உலகெங்கிலும் காட்டுத்தீ போல பரவிய இந்த செய்தி போலி என டெயிலி மெயில் யூ.கே இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், இந்த போலி செய்தி, பல சர்வதேச ஊடகங்களிலும் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

DNA Test Revealed That Married Couple Were Twins!

DNA Test Revealed That Married Couple Were Twins!
Desktop Bottom Promotion