திடீர் அரசியல் திருப்பங்களால் தமிழக முதல்வர் அரியணை ஏறியவர்கள்!

இங்கு திடீர் அரசியல் மாற்றங்களால் தமிழக முதல்வர்கள் ஆனவர்கள் பற்றி கூறப்பட்டுள்ளது.

Posted By:
Subscribe to Boldsky

இவருக்கு பிறகு இவர் தான் தமிழக முதல்வர் ஆவார் என சிலரின் பெயர் அடிப்படும். ஆனால், சில இடங்களில் குடும்ப அரசியல் காரணத்தால் வாரிசுகள் முதல்வர் பதவிக்கு வருவார்கள்.

ஆனால், தமிழக அரசியல் வரலாற்றில் சில நேரங்களில் முதல்வர் ஆகவேண்டும் என்ற எண்ணமே இல்லாதவர்களும் கூட சூழ்நிலை சந்தர்ப்பத்தால் முதல்வர் பதவி வகித்துள்ளனர்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வி.ஆர்.நெடுஞ்செழியன்

வி.ஆர்.நெடுஞ்செழியன்

தி.மு.க-வில் இருந்த போது அறிஞர் அண்ணாவின் இறப்பின் போதும், அ.தி.மு.க-வில் இருந்த போது எம்.ஜி.ஆர்-ன் எதிர்பாராத இறப்பின் போதும் அவசர நிலை முதல்வராக அரியணை ஏறியவர் வி.ஆர். நெடுஞ்செழியன்.

எம்.ஜி.ஆர்!

எம்.ஜி.ஆர்!

தி.மு.க-வில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, தனது சக்தியை நிரூபிக்க அ.தி.மு.க புரட்சியின் பலனாய் தொடர்ந்து முதல்வர் அரியணையை பத்து வருடங்கள் அலங்கரித்தவர் எம்.ஜி.ஆர்.

ஜானகி ராமச்சந்திரன்!

ஜானகி ராமச்சந்திரன்!

எம்.ஜி.ஆர். அரசியலில் முழுவீச்சில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்த போது, அந்த நிழல் கூட தன மீது படாமல் இருந்தவர் ஜானகி. 1984-ல் எம்.ஜி.ஆர் உடல்நல கோளாறுகளால் அவதிப்பட்டு வந்ததால், அவருடன் பொது நிகழ்சிகளுக்கு சென்று வந்தார். எம்.ஜி.ஆர்-ன் மறைவுக்கு பிறகு கட்சி ஜானகி முதல்வராக அரியணை ஏறினார். ஆனால், சட்டப்பேரவையில் இவர் மீது நம்பிக்கை தீர்மானம் தோல்வி அடைந்ததால் பதவி இழந்தார்.

ஜெயலலிதா!

ஜெயலலிதா!

எம்.ஜி.ஆர் இறப்பிற்கு பிறகு அ.தி.மு.க ஜானகி அணி, ஜெயலலிதா அணி என பிளவுப்பட்டு போனது. அப்போது சட்டசபையில் ஜெயலலிதாவை சேலையை பிடித்து இழுத்து, முடியை இழுத்து அடித்து கொடுமைப்படுத்தினர். பிறகு இனி முதல்வராக தான் இங்கு வருவேன் என சபதம் ஏற்று 1991-ல் முதல்வராக அரியணை ஏறினார் ஜெயலலிதா.

ஓ. பன்னீர்செல்வம்!

ஓ. பன்னீர்செல்வம்!

டான்சி வழக்கு காரணத்தால் சுப்ரீம் கோர்ட் ஜெயலலிதா முதல்வர் பதிவியில் நீடிக்க முடியாத சூழல் நிலவியதால், செப்டம்பர் 2001-ல் திடீர் முதல்வராக அரியணை ஏறினார் ஓ. பன்னீர்செல்வம்!

எடப்பாடி பழனிசாமி!

எடப்பாடி பழனிசாமி!

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பன்னீர் செல்வம் முதல்வராக பதவி ஏற்றார். பிறகு சசிகலா முதல்வராக நினைத்த போது அவர் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றதால், எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகம் தேர்வு செய்ததால் திடீரென முதல்வர் அரியணை ஏறினார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Chief Minister's of Tamil Nadu Who Suddenly Raised Because Of Unexpected Changes Happened!

Chief Minister's of Tamil Nadu Who Suddenly Raised Because Of Unexpected Changes Happened!
Please Wait while comments are loading...
Subscribe Newsletter