For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இப்படி ஒரு ஜெயில் இருந்தா, 4 கொலை, 5 கொள்ளை-னு சாதாரணமா செஞ்சுட்டு போவாயிங்க!

நார்வே பாஸ்டாய் சிறைசாலை, உலகின் முதல் சுற்றுசூழலியல் சிறை

|

இப்படி ஒரு ஜெயில் இருந்தா, யார் வேண்டுமானாலும் நாலு கொலை, ஐந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட விரும்புவார்கள். ஓரிரு ஆண்டுகள் தண்டனை பெற்று உல்லாச வாழ்க்கை வாழ வேண்டும் என்றால் நார்வே பாஸ்டாய் சிறைக்கு தான் சென்று வர வ்நெடும்.

ஆம், ஒரு காலத்தில் கொடூரமான சிறைசாலை என பெயர்பெற்று, கிளர்ச்சி உண்டாகி மூடப்பட்ட சிறைசாலை. இப்போது உலகின் உல்லாச, தாராளவாத சிறையாக மாறியுள்ளது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிறைசாலை வரலாறு!

சிறைசாலை வரலாறு!

இந்த சிறைசாலை ஒரு காலத்தில் மிகவும் கொடூரமானதாக திகழ்ந்து வந்தது. பாலியல் வன்கொடுமை போன்ற குற்ற வழக்கில் சிக்கியவர்களுக்கு இந்த சிறையில் தான் தண்டனை வழங்கப்படும்.

1915-ல்

1915-ல்

1915-ல் ஒரு குழுவை சேர்ந்த ஆண்கள் சிறைசாலை கொடுமைகளை எதிர்த்து கிளர்ச்சி உண்டாக்கினர். அவர்கள் இந்த இடத்தை விட்டு தப்பிக்க முயற்சித்தனர்.

இந்நிலையை கட்டுக்குள் கொண்டுவர இந்த தீவிற்கு இராணுவம் அனுப்பப்பட்டது. பிறகு 1953-ல் இது முழுமையாக மூடப்பட்டது. அதன்பின் 1970-ல் அரசே இந்த இடத்தை கையகப்படுத்தி கொண்டது.

1982ல்!

பிறகு 115 கைதிகள் கொள்ளளவுடன் இந்த சிறை மீண்டும் 1982ல் புதிதாக்கப்பட்டு திறக்கப்பட்டது. மேலும், உலகிலேயே தாராளவாத நிலை கொண்ட சிறை என்ற பெயரும் பெற்றது.

தனித்தன்மை!

தனித்தன்மை!

இந்த சிறைக்கென நிறைய தனித்தன்மை இருக்கின்றன. டிவி, சமையலறை, படுக்கையறை தினமும் காலை எழுந்தால் 8.30 முதல் மாலை 3.30 வரை வேலை.

விளையாட்டுகள்!

விளையாட்டுகள்!

இங்கே சிறைசாலையில் அடைப்பட்டு இருக்கும் கைதிகள் பொழுதை கழிக்க, குதிரை ஏற்றம், மீன் பிடித்தல், டென்னிஸ், ரன்னிங், நீச்சல், ப்ரைவேட் பீச் என பல வசதிகள் இருக்கின்றன.

பாதுகாவலர்கள்!

பாதுகாவலர்கள்!

இந்த சிறையை பாதுகாக்க வெறும் ஐந்தே பாதுகாவலர்கள் தான் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், இங்கே கைதிகளுக்கு யூனிபார்ம் கிடையாது.

சிறையை சுற்றி தடுப்பு சுவர் இல்லை. இந்த தீவில் அவர்கள் எங்கே வேண்டுமானாலும் சென்று வரலாம். இந்த சிறையில் 69 வேலையாட்கள் இருக்கின்றனர்.

ஒரே ஒரு முறை தான்!

இவ்வளவு சலுகைகள் கொடுத்தும் மீண்டும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் இருக்கின்றனர். ஆனால் ஐரோப்பிய சிறைகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைந்த சதவிதத்தில்.

மேலும், கடந்த 33 வருடங்களாக இயங்கி வரும் இந்த சிறையில் ஒரே ஒரு முறை தான் கைதி தப்பிக்க முயன்ற சம்பவம் நடந்துள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Prisoners Of This Prison Go On Horse Riding In The World’s First Ecological Prison!

what if the prison becomes a place which is better than a 5-star hotel? Though this might confuse you, this is actual done to bring down the crime rate by playing with the minds of the inmates, in Norway.
Desktop Bottom Promotion