நாய் குட்டி என நினைத்து ஓநாயை வளர்த்த ஆண், சில மாதங்களுக்கு பின் நடந்தது என்ன?

ஓநாயை குட்டியை, நாய் குட்டி என வளர்த்த நபர். அதற்கு அவர் வாழ்வில் நடந்த சம்பவங்கள் பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.

Posted By:
Subscribe to Boldsky

செல்ல பிராணிகள் வளர்ப்பது என்பது ஒரு விதமான காதல். குழந்தைகள் மீது அன்பு செலுத்துவது போல பிராணிகளை வளர்தால். அவை உங்களை பெற்றோர் போல பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளும்.

பெரும்பாலும் நாம் நாய்களை வளர்க்க தான் ஆசைப்படுவோம். ஏனெனில், செல்ல பிராணி என்பதை தாண்டி நல்ல நண்பனாக, காவலனாக இருக்க கூடிய பிராணி நாய்கள்.

Young man adopts a ‘cute puppy,’ realizes he’s actually a wolf months later

Image Courtesy

அதிலும் நாய் குட்டிகள் கொள்ளை அழகுடன் இருக்கும். அவற்றை தூக்கி கொஞ்சுவது பலருக்கும் பிடிக்கும். அவை செய்யும் சேட்டைகள் எக்கச்சக்கமாக இருக்கும்.

இதே போல அரிசோனாவை சேர்ந்த ஒரு இளைஞரும் நாய் குட்டி வளர்க்க ஆசைப்பட்டு ஓநாய் வாங்கிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

அதன் பிறகு அவரது வாழ்வில் நடந்தவை...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அரிசோனா!

அரிசோனா!

அரிசோனாவை சேர்ந்த ஒரு இளைஞர் ஒரு வீட்டில் "இலவச பிராணிகள்" என்ற அறிவிப்பு பலகையை கண்டவுடன் ஆர்வத்தில் உடனே உள்ளே சென்று பார்க்க கியூட்டாக இருந்த குட்டியை எடுத்து வந்துவிட்டார். இது தன் வாழ்வில் நடந்த சதியா, விதியா என அவருக்கு அப்போது தெரியவில்லை.

நியோ!

நியோ!

தான் இலவசமாக ஆர்வத்தில் ஆசையாக எடுத்து வந்த அந்த செல்ல குட்டிக்கு நியோ என்று பெயர் வைத்து வளர்க்க ஆரம்பித்தார். நியோவை வளர்ப்பது ஆரம்பத்தில் மிகவும் கடினமாக இருந்துள்ளது.

மிக ஆக்டிவாக, எனர்ஜியுடன் அது இயங்கி வந்துள்ளது. நியோ மீது எப்போதும் ஒரு கண் வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அந்த அளவிற்கு அது ஆக்டிவ்.

மனிதர்களை விரும்பாத நியோ!

மனிதர்களை விரும்பாத நியோ!

நியோ தனது உரிமையாளரை விட மற்ற எந்த மனிதர்களுடனும் ஒட்டாது. ஆனால், நாய்களுடன் மிக நெருக்கமாக பழகி வந்துள்ளது. நியோவின் உரிமையாளருக்கு ஒரு சந்தேகம், நியோ மிக எளிதாக பள்ளம் தோண்டுவது, தடுப்புகளை எளிதாக தாண்டி குதிப்பது என இருந்துள்ளது.

நாய்கள் போலவே அல்ல!

நாய்கள் போலவே அல்ல!

நியோ பார்க்க நாய் போல இருப்பினும், அது நாய்கள் போல அன்பு காட்ட முன்வரவில்லை. எப்போதுமே ஆக்ரோஷமாக தான் இருக்கும்.
வீட்டில் இருக்காது, எப்போதுமே தப்பி சென்று தெரு நாய்களுடன் சேர்ந்து விடும். உண்மையில் இது நாய்களுடன் விளையாடவில்லை, ஓநாய் கூட்டத்தை தேடியுள்ளது.

அக்கம் பக்கத்தில் சந்தேகம்...

அக்கம் பக்கத்தில் சந்தேகம்...

நியோவின் உரிமையாளர் வீட்டு அருகே வசிக்கும் மக்களுக்கு இது சரியாக படவில்லை. இதனால், நியோவின் உரிமையாளர் இதை அரிசோனா மனித சமூக மையத்திற்கு அழைத்து சென்று ஒரு தீர்வு காண முயன்றார்.

கலிபோர்னியா ஏற்றது!

கலிபோர்னியா ஏற்றது!

அரிசோனா மக்கள் அமைப்பு, இந்த ஓநாய் நாயை வளர்க்க தடை விதித்தது. ஆனால், கலிபோர்னியா ஓநாய் காப்பகம் இதை ஏற்று கொள்வதாக அறிவித்தது. அங்கு ஓநாய்களுடன் இணைந்த நியோ இயல்பாக வாழ ஆரம்பித்தது.

நாய் - ஓநாய்!

நாய் - ஓநாய்!

காது, வயிறு, கண்கள் போன்றவற்றை வைத்து நாயா - ஓநாயா என அறிய முடியும். ஆனால், இது சற்று கடினம் தான். குட்டியாக இருக்கும் போது நாய் குட்டி, ஓநாய் குட்டி மத்தியில் வேற்றுமை கண்டறிவது சிரமம். அதிலும், பொது மக்கள் வேற்றுமையை கண்டறிவது மிகவும் சிரமம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Young man adopts a ‘cute puppy,’ realizes he’s actually a wolf months later

Young man adopts a ‘cute puppy,’ realizes he’s actually a wolf months later
Please Wait while comments are loading...
Subscribe Newsletter