For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் முதல் தங்கத்திலான பொது கழிவறை!

இத்தாலிய கலைஞர் கைவண்ணத்தில் உருவான தங்க கழிவறை, இப்போது பொது மக்கள் உபயோகத்திற்கு வந்துள்ளது.

|

தங்கத்தை எதற்கு தான் பயன்படுத்த வேண்டும் என்றில்லாமல் ஆகிவிட்டது. செல்வம், வசதி இருந்தால் விலை உயர்ந்த பொருளை எப்படி வேண்டுமானாலும், எதற்காக வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என செல்வந்தர்கள், பிரபலங்கள் மத்தியில் ஒரு எண்ணம் பிறந்துவிடுகிறது.

தங்கத்தில் கழிவறை என்பது இந்த உலகிற்கு புதியதல்ல. ஏற்கனவே தன் மகளுக்கு திருமண சீதனமாக ஒருவர் தங்க குளியலறை, கழிவறை பரிசளித்தார். ஆனால், இப்போது அதுக்கும் மேல் என்ற வகையில் இத்தாலிய கலைஞர் உருவாக்கிய தங்கத்திலான கழிவறை பொது கழிவறையாக உபயோகத்திற்கு வரவுள்ளது....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இத்தாலிய கலைஞர்!

இத்தாலிய கலைஞர்!

இத்தாலிய கலைஞர் மௌரிஸோ கெட்டலன் திடமான தங்கத்தில் கோஹ்லெர் டிசைன்டு தங்க கழிவறை இப்போது நியூயார்க்கின் கக்கென்ஹீம் மியூசியத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. கலை பொருளாக அல்ல, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக.

கலைஞர் கருத்து!

கலைஞர் கருத்து!

இந்த தங்க கழிவறையை உருவாக்கிய இத்தாலிய கலைஞர். பொதுமக்கள் பயன்பாட்டில் தான் இது முழுமை அடைய போகிறது என கருத்து தெரிவித்துள்ளார். சிலர் இதை ஜோக்காக எடுத்துக் கொள்ளலாம். ஆனால், இது ஜோக் அல்ல என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

மியூசியத்தின் அதிகாரிகள்!

மியூசியத்தின் அதிகாரிகள்!

கக்கென்ஹீம் மியூசியத்தின் அதிகாரிகள் ஐந்தாம் மாடியில் நிறுவப்பட்டுள்ள இந்த தங்க கழிவறையை பயன்படுத்த மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிகழ்வு ஏற்படலாம் என எதிர்பார்க்கிறார்கள்.

அதே போல இது திருடு போகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

என்ன தங்கம்?

என்ன தங்கம்?

இந்த தங்க கழிவறை 18 காரட் தங்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இது திடமாக இருக்க வேண்டும் என்பதற்காக 18 காரட் தங்கத்தை தேர்வு செய்துள்ளனர்.

பத்திரிக்கை செய்தி!

பத்திரிக்கை செய்தி!

அமெரிக்காவின் முன்னணி நாளேடு நியூயார்க் டைம்ஸ்-ல் செய்தியாக இது வந்துள்ளது. இதை படித்த பிறகு, பலதரப்பட்ட மக்களும், இது அருவருப்பான செயல். செல்வம் இருக்கிறது எனில் அதை எதற்காக வேண்டுமானாலும் பயனப்படுத்துவதா? என கேள்விகள் எழுப்புகின்றனர்.

ஆயினும், இதை பயன்படுத்தி பார்க்கவும் பலர் ஆர்வமாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

World’s First Solid Gold Public Toilet

Take a look on world’s first solid-gold public toilet
Story first published: Friday, November 18, 2016, 14:33 [IST]
Desktop Bottom Promotion