யார் இந்த கல்பனா பேல்ஸ்? இவரை பற்றிய முழுவிபரங்கள்!

Subscribe to Boldsky

கபாலியின் நெருப்புடா தீம் பாடல் பல ரசிகர்களால் பாடப்பட்டு, பல நட்சத்திரங்களின் காணொளி கொண்டு எடிட் செய்யப்பட்டு வைரலாகி வந்த அந்த சமயத்தில் தான் அந்த பேரிடி தாக்கியது.

ரஜினி ரசிகர்கள் எரிமலையாய் வெடித்தனர், மற்றும் சிலர் வயிறு குலுங்க சிரிக்கவும், சிலர் அய்யோ, அம்மா என ஓடவும் செய்தனர். இதற்கு காரணமானவர் கல்பனா பேல்ஸ் எனும் பெண்மணி.

யார் இவர், ஏன் இவர் இப்படி பாடி வெளியிட்டார்? இவரது பின்புலம் என்ன? என பல கேள்விகள் எழும், அதே சமயத்தில் கல்பனா ஒரு மன நோயாளி என்றும் சில முகநூல் பதிவுகள் பரவ ஆரம்பித்தன. ஆனால், அவை அனைத்தும் உண்மையற்றவை.

இதையும் படிங்க: பிரபல நடிகர், நடிகைகளின் சில முகம் சுளிக்கவைக்கும் பழக்கவழக்கங்கள்!

உண்மையில் யார் இந்த கல்பனா பேல்ஸ்? இவரது இந்த இசை பயணம் எப்படி துவங்கியது என தெரிந்துக் கொள்ளலாம் வாருங்கள்...

Source: SBC

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

பிறப்பு:

கல்பனா பேல்ஸ் பிறந்தது யாழ்பாணத்தில். மேற்படிப்பை இந்தியாவில் தான் பயின்றுள்ளார் கல்பனா. பிறகு ஆஸ்திரேலியா சென்ற இவர் மெல்பேர்ன் பகுதியில் வசித்து வருகிறார்.

இவரது முழுப்பெயர் கல்பனா பாலேஸ்வரன். பாலேஸ்வரன் என்பது இவரது கணவர் பெயர் என அறியப்படுகிறது.

 

திட்டமிட்ட செயலா?

முகநூலில் இவரது வினோதமான பாணியில் பாடி பதிவேற்றம் செய்யப்படும் பாடல்களுக்கு ஆதரவும், எதிர்ப்பும் சரிபாதியாக வந்தவண்ணம் இருக்கின்றன. ஆனால், இது திட்டமிட்ட செயலல்ல.

ஒருநாள், வேலை முடிந்து வீடு திரும்பிய போது, மிகவும் சோர்வாக உணர்ந்ததாகவும். சோர்வை போக்கிக்கொள்ள சாதாரணமாக பாடி பதிவு செய்த காணொளியை முகநூலில் பதிந்த போது அது விரலாகி விட்டது என்றும் கல்பனா பேல்ஸ் கூறியுள்ளார்.

முதல் பாடல்...

சங்கீதம் கற்காதவர் தான் கல்பனா பேல்ஸ். இவர் முதன்முதலில் பாடி பதிவு செய்த பாடல், சிந்து பைரவி படத்தில் இடம்பெற்ற "நானொரு சிந்து காவடிச்சிந்து..." என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது முகநூல் முகவரியில் மட்டும் பதிவேற்றம் செய்யப்பட்ட அந்த பதிவு, முகநூல் முழுதும் பரவி இவரை ஸ்டார் ஆக்கியது.

எதிர்ப்பு:

முதல் முறை பதிவு செய்த அந்த காணொளி 2.5 லட்சம் பேருக்கும் மேல் பார்வையிட்டுயிருந்தனர். மேலும், இப்படி ஒரு விஷயம் நடக்கும் என நான் எப்போதும் நினைத்தது இல்லை.

அது ஓர் கனவு போல நிகழ்ந்தது. மேலும், என் பெயரில் ஃபேன் பேஜ் நிறைய இருக்கின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

குடும்பத்தின் ஆதரவு:

"நான் பாடும் இந்த முறைக்கு என் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.

அவர்கள் இது மகிழ்ச்சியளிக்கிறது என ஊக்கவிக்கின்றனர். அதனால் தான் நான் தொடர்ந்து பாடி வருகிறேன்" என கல்பனா கூறுயுள்ளார்.

வருத்தும் ஏதேனும்?

என்னை விரும்புபவர்கள் அதிகம் இருக்கும் போது, என்னை வெறுக்கும் நபர்கள் மற்றும் அவர்கள் இடும் கமெண்ட்ஸ்களில் நான் ஏன் கவனம் செலுத்த வேண்டும்?

என்னை வெறுப்பவர்கள் தான் என்னை பிரபலம் அடைய செய்கிறார்கள், அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் கல்பனா தெரிவித்துள்ளார்.

பாடல்கள் பாட காரணம் என்ன?

"நானொரு சிந்து.." பாடலுடன் நிறுத்திக் கொள்ள தான் நினைத்தேன். ஆனால், வெறுப்பவர்கள் கமெண்ட்ஸ் செய்வதால் தான் நான் மென்மேலும் பாடல்கள் பாட துவங்கினேன்.

மேலும், நான் எனது முகநூலில் மட்டும் தான் பகிர்கிறேன். அதை தானாக முன்வந்து லைக், ஷேர் செய்துவிட்டு அவர்களாக என்னை பாட வேண்டாம் என கூற எந்த உரிமையும் இல்லை.

 

பாடல்கள் பாட காரணம் என்ன?

மேலும், அவர்கள் அதிகமாக ஷேர் செய்வதால் தான் நாம் மென்மேலும் பிரபலமடைந்து வருகிறேன் என்றும் கல்பனா கூறியுள்ளார்.

நான் பாடுவதை பிடிக்கவில்லை என்றால் அதை நீங்கள் ஷேர் அல்லது லைக் செய்ய அவசியமே இல்லையே? என்றும் வினாவியுள்ளார்.

மற்ற பாடகர்களின் கருத்து?

"மெல்பேர்ன் வரும் பாடகர்கள், மெல்பேர்னில் இருந்தவாறே உலக தமிழர்களை மகிழ்வித்து வருவது வியப்பையும், ஆச்சரியத்தையும் அளிக்கிறது.

நீங்கள் இதை எதற்காகவும் நிறுத்திவிட வேண்டாம்." என உற்சாகம் அளித்தார்கள் என கல்பனா கூறியுள்ளார்.

பாடகி சித்திரா அவர்களது கருத்து:

கல்பனா ஒருமுறை பாடகி சித்திரா அவர்களை சந்தித்த போது, பலர் சிரிக்க உங்களுக்கே தெரியாமல் நீங்கள் காரணமாக இருக்கிறீர்கள். இதை தொடருங்கள் என பாராட்டினார் என்றும் கல்பனா தெரிவித்துள்ளார்.

முகநூல் பக்கங்கள்?

என் சொந்த முகநூல் பக்கம் ஒன்று தான் இருக்கிறது. மற்ற அனைத்து பக்கங்களும் எனக்கு ஆதரவு அளிக்கும் ரசிகர்கள் ஆரம்பித்தவை தான்.

மேலும், நான் அளித்தது போன்ற பேட்டிகள் சில வெளியாகின. அவை அனைத்தும் போலியானவை என கூறியுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Who Is Kalpana Bales?

Who Is Kalpana Bales? are you eagerly waiting to know about her? read here in tamil.
Story first published: Wednesday, July 13, 2016, 14:24 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter