நம்ம ஊர் அரசியல்வாதிகளிடம் 24 டைம் மெஷின் மாட்டினால் எங்க போவாங்க? என்ன செய்வாங்க?

Subscribe to Boldsky

டைம் மெஷின் இன்றுவரை வெறும் கற்பனையில் மட்டுமே கண்டு வியந்துக் கொண்டிருக்கும் ஓர் அறிவியல் அபூர்வம். ஒவ்வொருவரும் இந்த மெஷின் கையில் கிடைத்தால் அவர்கள் செய்த தவறுகளை மாற்றிக் கொள்ளவும், வாழ்க்கையில் கண்டிராத இன்பங்களை அனுபவிக்கவும் தான் எண்ணுவார்கள்.

உலகை அதிரவைத்த 10 பெரும் அரசியல் படுகொலைகள்!

அந்த வகையில் இந்த டைம் மெஷின் நமது அரசியல்வாதிகள் கைக்கு சென்றால், அவர்கள் எந்த காலக்கட்டத்திற்கு செல்ல விரும்புவர்கள். என்ன மாற்றங்கள் ஏற்படுத்திக் கொள்வார்கள் என்ற ஒரு சிறு கற்பனை தான் இந்த கட்டுரை....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

கருணாநிதி

நெருங்கிய நட்பின் காரணமாக எம்.ஜி.ஆர் கட்சிக்குள் வளர ஒருவிதத்தில் காரணமாக இருந்தவர், அவருக்கு நிறைய உறுதுணையாக இருந்தவர் கருணாநிதி அவர்கள் தான். ஆனால், ஒருக்கட்டதில் கட்சியில் தன்னை மீறி எம்.ஜி.ஆர் வளர்கிறார் என்று அறிந்த போது அவரை கட்சியை விட்டும் நீக்கினார்.

கருணாநிதி

ஒருவேளை கருணாநிதி பின்னோக்கி சென்று ஒரு விஷயத்தை மாற்ற நினைத்தால், எம்.ஜி.ஆரை கட்சியில் இணைய விடாமல், நட்பை மட்டுமே பலபடுத்தி இருக்கலாம். இப்படி நடந்தால் அ.தி.மு.க என்ற கட்சியே பிறந்திருக்காது. தி.மு.க மட்டுமே தமிழகத்தை ஆட்சி செய்திருக்கும்.

எம்.ஜி.ஆர்

தனது உடல்நலன் மீது இன்னும் சற்று அக்கறை கொண்டு இவர் ஆரோக்கியமாக இருந்திருந்தால். 1990-களிலும் இவர் முதலமைச்சராக இருந்திருந்தால், தமிழகத்தில் இன்று தெருவிற்கு தெரு இருக்கும் கட்சிகள் எல்லாம் இல்லாமல் போயிருக்கும். ஏன், தி.மு.க-வே ஆட்டம் கண்டிருக்கும்.

ஜெயலலிதா

தன் தத்துப்பிள்ளைக்கு ஆடம்பரமாக செய்த திருமணம், தமிழகத்தையே திகைக்க வைத்த அந்த திருமணத்தில் ஆடம்பரத்தை ஜெயலலிதா அவர்கள் குறைத்திருக்கலாம்.

ஜெயலலிதா

முதல் முறை முதலமைச்சரான அந்த காலக்கட்டத்தில் தான் ஜெயலலிதா சொத்து குவித்தார் என்ற வழக்கு சுப்ரமணிய சுவாமி அவர்களால் வழக்கு தொடரப்பட்டது. ஒருவேளை ஜெயலலிதா டைம் மெஷின் மூலமாக பின்னோக்கி செல்ல நினைத்தால். இந்த வழக்கு தொடுக்காமல் அல்லது சொத்து குவிப்பு பிரச்சனை எழாமல் தடுத்திருக்கலாம்.

ராசா

ஊர் அறிந்த விஷயம் தான் டைம் மெஷின் மூலமாக ராசா பின்னோக்கி சென்றால், 2G பிரச்சனை நடக்காமல் தடுத்திருப்பார்.

விஜயகாந்த்

விஜயகாந்த் மீது மக்களுக்கு ஆரம்பத்தில் நல்ல மதிப்பு இருந்தது. ஊடகம், மக்கள் இருவரும் இவரை கேலி, கிண்டல் செய்ய ஆரம்பித்ததே நாக்கை துருத்தி பேசியதில் இருந்து தான். ஒருவேளை கேப்டன் பின்நோக்கி சென்றால், நாக்கை துருத்தியது, காரித்துப்பியது, ஓங்கி அடுச்சுருவேன் போன்ற சம்பவங்கள் ஏற்படாமல் செய்திருக்கலாம்.

விஜயகாந்த்

மேலும், விஜயகாந்த் கூட்டணி மாற்றி வைத்திருக்க யோசித்திருக்கலாம். கட்சி உடைந்திருக்காது. இப்போதுள்ள இழுபறி நிலை ஏற்பட்டிருக்காது.

நாஞ்சில் சம்பத்

நாஞ்சில் சம்பத் இப்போது இருக்கும் நிலைக்கு காரணம் அவரளித்த அந்த இரண்டு பேட்டி தான். எனவே, அந்த இரண்டு பேட்டியில் அவர் அந்த குறிப்பிட்ட வாக்கியங்கள் இடம் பெறாமல் அல்லது அந்த பேட்டிக்கே போகாமல் இருந்திருக்கலாம்.

ஸ்டாலின்

நமக்கு நாமே சுற்று பயணம் மேற்கொண்ட போது நடைபெற்ற புகைப்பட தவறுகளை தவிர்த்திருப்பார். அதாங்க, ஸ்டாலின் வருவதற்கு முன்பே கேமராவுடன் ஒருவர் உள்ளே அமர்ந்து புகைப்படம் எடுத்தது போன்ற தவறுகளை திருத்தி இருக்கலாம்.

ராகுல்காந்தி

ராகுல்காந்தி இன்னும் கொஞ்சம் அரசியல் பாடம் படித்துவிட்டு அரசியலுக்கு வந்திருக்கலாம். ஏனெனில், இவரை தான் மிகவும் குழந்தை போல பாவித்து பல நாளேடுகள் கலாய்த்து வருகின்றனர்.

நரேந்திர மோடி

ஒபாமாவை பார்க்க சென்ற போது வாங்கிய அந்த ஆடம்பர உடையை தவிர்த்திருக்கலாம். அப்போது மோடி அணிந்த ஆடையை வைத்தே பல நாளேடுகளில் முக்கிய கட்டுரைகள் வந்தன. இது மோடியின் மீது மக்கள் எதிர்மறை எண்ணம் கொள்ள காரணியாக இருந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Will Our Politicians Do If Become Athreya And Gets To Travel Back In Time?

What Will Our Politicians Do If Become Athreya And Gets To Travel Back In Time? take a look. Its Just for fun.
Story first published: Monday, May 9, 2016, 13:01 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter