For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆப்பிரிக்க பழங்குடியினரின் சில விசித்திரமான பாரம்பரிய பழக்கவழக்கங்கள்!

உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு மாதிரியான மரபுகள் மற்றும் பாரம்பரிய பழக்கவழக்கங்கள் இருக்கும். அதில் ஆப்பிரிக்காவில் இன்றும் வாழ்ந்து வரும் சில பழங்குடியினரின் பாரம்பரிய பழக்கவழக்கங்களைக் கண்டா

|

உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு மாதிரியான மரபுகள் மற்றும் பாரம்பரிய பழக்கவழக்கங்கள் இருக்கும். அதில் ஆப்பிரிக்காவில் இன்றும் வாழ்ந்து வரும் சில பழங்குடியினரின் பாரம்பரிய பழக்கவழக்கங்களைக் கண்டால், ஆச்சரியப்படுவீர்கள்.

MOST READ: உலகில் உள்ள விநோதமான மற்றும் கொடுமையான சில கலாச்சாரங்கள்!!!

அதிலும் இன்னும் படங்களில் காட்டும்படியான பழக்கவழக்கங்களை ஆப்பிரிக்காவில் உள்ள சில பழங்குடியினர் பின்பற்றி தான் வருகின்றனர்.

MOST READ: உலகில் உள்ள மிகவும் வினோதமான திருமண வழக்கங்கள்!

இங்கு அப்படி ஆப்பிரிக்காவில் உள்ள பழங்குடியினர் பின்பற்றும் விசித்திரமான பாரம்பரிய பழக்கவழக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மாசாய் பழங்குடியினர்

மாசாய் பழங்குடியினர்

கென்யா மற்றும் தன்சானியா பகுதியில் வாழ்ந்து வரும் மாசாய் பழங்குடியினரின் வாழ்த்தும் முறை வித்தியாசமாக இருக்கும். அவர்கள் முதன்முதலாக யாரை சந்தித்தாலும் எச்சிலைத் துப்பி வரவேற்பார்கள். அதேப்போல் பிறந்த குழந்தையை வாழ்த்துவதற்கு அந்த குழந்தையை முகத்தில் துப்புவார்கள்.

மாசாய் பழங்குடியினர்

மாசாய் பழங்குடியினர்

மேலும் மாசாய் வீரர்கள், முதியவர்களுக்கு கைக் கொடுக்கும் முன், தங்கள் கையில் எச்சிலைத் துப்பி பின்பே கையைக் குலுக்குவார்கள். அதுமட்டுமல்லாமல், மாசாய் பழங்குடியினர் விலங்குகளில் இரத்தத்தைக் குடிப்பதில் பிரபலமானவர்கள்.

Image Courtesy

ஹாமர் பழங்குடியினர்

ஹாமர் பழங்குடியினர்

எத்தியோப்பியாவின் ஹாமர் பழங்குடியினரைச் சேர்ந்த ஆண்கள், தங்களது ஆண்மையை நிரூபிக்க, காளைகளை வரிசையாக நிற்க வைத்து, அதன் மீது ஏறி ஆடையின்றி ஓடி, குதிக்கும் பழக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது.

Image Courtesy

பன்யன்கோல் பழங்குடியினர்

பன்யன்கோல் பழங்குடியினர்

உகாண்டாவில் இருக்கும் பன்யன்கோல் பழங்குடியினரின் பாரம்பரிய திருமண பழக்கவழக்கத்தைக் கேட்டால், சற்று ஆச்சரியமாகத் தான் இருக்கும். அது என்னவெனில், திருமணத்திற்கு முன், மணப்பெண்ணின் தாயார் மணமகனுடன் உடலுறவு கொள்ள வேண்டுமாம். இதை அவர்கள் ஆணின் வலிமையை சோதிக்கும் முறையாக கருதுகின்றனர்.

Image Courtesy

சுர்மா பழங்குடியினர்

சுர்மா பழங்குடியினர்

தென் சூடான் மற்றும் தென்மேற்கு எத்தியோப்பிய பகுதியில் வாழ்ந்து வரும் சுர்மா பழங்குயின பெண்களின் தோற்றம் சற்று வித்தியாசமாக இருக்கும். ஏனெனில் இந்த பழங்குடியின பெண்கள் பூப்படையும் போது, கீழ் உதட்டில் மூலிகைப்பொருட்கள் மற்றும் களிமண்ணால் செய்யப்படும் தகடு ஒன்றை பொருத்தப்படும். இது நமக்கு பயங்கரமாக காணப்பட்டாலும், அப்பெண்கள் அதை அழகாக கருதுகின்றனர்.

உடாப் பழங்குடியினர்

உடாப் பழங்குடியினர்

நைஜீரியாவின் வடக்குப் பகுதியில் வாழ்ந்து வரும் உடாப் பழங்குடியினர், இரவில் கிரிவோல் என்னும் நடனத் திருவிழாவைக் கொண்டாடுவார்கள். இதில் எந்த ஒரு விசித்திரமும் இல்லாவிட்டாலும், இந்த நடன திருவிழாவின் போது, இந்த பழங்குடியின ஆண் திருமணமான பெண்ணாகவே இருந்தாலும், அப்பெண்ணைக் களவாடி சேர்ந்துக் கொள்ளலாமாம்.

Image Courtesy

ச்சீவா பழங்குடியினர்

ச்சீவா பழங்குடியினர்

மலாவி பகுதியில் வாழ்ந்து வரும் சீவா பழங்குடியினரின் ஓர் விசித்திரமான பழக்கம் என்னவெனில், அந்த பழங்குடியின மக்களுள் யாரேனும் ஒருவர் இறந்து விட்டால், அந்த சடலத்தை ஒரு புனிதமான இடத்திற்கு கொண்டு சென்று, கழுத்தை வெட்டி, பின் நீரால் அந்த சடலத்தின் உட்பகுதியை கழுவுவார்கள். இதில் ஓர் பெரிய ஆச்சரியம் என்னவெனில், சடலத்தைக் கழுவிய அந்த நீரைப் பயன்படுத்தி, அந்த பழங்குடியினர் சமைத்து உண்பார்களாம்.

Image Courtesy

ஃபுலானி பழங்குடியினர்

ஃபுலானி பழங்குடியினர்

நைஜீரியாவைச் சேர்ந்த ஃபுலானி பழங்குடியினரின் ஓர் வித்தியாசமான திருமண சடங்கு என்னவெனில், மணமகன் திருமணத்திற்கு முன் தன் ஆண்மைத்தன்மையை வெளிப்படுத்தி, மனைவியைப் பெறும் முன், சாட்டையால் அப்பழங்குடியின ஆண்கள் அடிப்பார்கள். அந்த வலியைத் தாங்கிக் கொண்டு அந்த ஆண் இருந்தால், திருமணம் நடைபெறும். இல்லாவிட்டால் அத்திருமணம் நடக்காது. இச்செயலால் பல அப்பழங்குடியின இளம் ஆண்கள் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Weird African Customs And Traditions You Didn't Know Existed

Here are some tribes from across africa with mouth dropping customs. Read on to know more...
Desktop Bottom Promotion