கிருமிகளை ஸ்மார்ட்போன் கேமரா கொண்டு கண்டறிவது எப்படி?

மைக்ரோஸ்கோப் மூலம் மட்டுமே காணக்கூடிய கிருமிகளை ஸ்மார்ட்போன் மூலம் காணலாம் என்பது தெரியுமா? ஸ்மார்ட்போன் கொண்டு வீடு மற்றும் நம்மைச் சுற்றியுள்ள இடத்தில் கிருமிகள் உள்ளதா என்பதை கண்டறியும் முறை இதோ!

Subscribe to Boldsky

நம் கண்ணால் பூச்சிகள் மற்றும் புழுக்களைத் தான் காண முடியும். ஆனால் நம் உயிருக்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை மைக்ரோஸ்கோப் மூலம் தான் காண முடியும். இத்தகைய மைக்ரோஸ்கோப் அனைவரது வீட்டிலும் இருக்காது. ஆனால் மைக்ரோஸ்கோப் மூலம் மட்டுமே காணக்கூடிய கிருமிகளை ஸ்மார்ட்போன் மூலம் காணலாம் என்பது தெரியுமா?

இங்கு ஸ்மார்ட்போன் கொண்டு வீடு மற்றும் நம்மைச் சுற்றியுள்ள இடத்தில் கிருமிகள் உள்ளதா என்பதை கண்டறியும் முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அதன்படி சோதித்து, உங்களைச் சுற்றியுள்ள இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.

Article Source

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

தேவையான பொருட்கள்:

* ஸ்மார்ட்போன்

* செல்லோ டேப்

* நீலம் மற்றும் ஊதா நிற மார்க்கர்

 

நன்மை

இந்த ட்ரிக் ஸ்மார்ட்போனில் உள்ள ப்ளாஷில் இருந்து வெளிவரும் ஒளியை கருப்பு நிறமாக மாற்றும். இந்த கருப்பு நிற ஒளியானது பல்வேறு வழிகளில் உதவியாக இருக்கும். உதாரணமாக, இந்த கருப்பு நிற ஒளி கள்ள நோட்டுகள், கிருமிகள் போன்றவற்றை கண்டறிய பெரிதும் உதவிபுரியும்.

பயன்படுத்தும் முறை #1

முதலில் ஸ்மார்ட்போனின் ப்ளாஷ் வெளிவரும் இடத்தில் சிறு துண்டு செல்லோ டேப்பை ஒட்ட வேண்டும். பின் அதன் மேல் நீல நிற மார்க்கரைக் கொண்டு கலர் செய்ய வேண்டும். பின் சிறிது நேரம் கழித்து மீண்டும் அதன் மேல் டேப்பை ஒட்டி, மீண்டும் நீல நிற மார்க்கரை கலர் செய்து உலர்த்த வேண்டும்.

பயன்படுத்தும் முறை #2

பின்பு மீண்டும் அதன் மேல் செல்லோ டேப்பை ஒட்டி, அதன் மேல் ஊதா நிற மார்க்கரைக் கொண்டு கலர் செய்ய வேண்டும்.

பயன்படுத்தும் முறை #3

பிறகு ப்ளாஷை ஆன் செய்து, எங்கு கிருமிகள் உள்ளது என்று தோன்றுகிறதோ, அவ்விடத்தை கேமராவின் மூலம் போட்டோ எடுங்கள்.

பச்சை நிறத்தில் கிருமிகள்

போட்டோ எடுக்கும் போது அவ்விடத்தில் கிருமிகள் இருந்தால், அது படத்தில் காட்டப்பட்டவாறு பச்சை நிறத்தில் வெளிக்காட்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Watch This Man Put a Tape on His Smartphone Camera’s Flash and Colors it. The Truth Shines Bright!

Learn how to make a personal X-ray vision for spotting toilet germs through your smartphone camera. Read on to know more...
Story first published: Thursday, October 13, 2016, 15:24 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter