For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அசாதாரணமான கோயில்களும் அதை சுற்றியிருக்கும் மர்மங்களும்!!

|

இந்துக்கள் கலாச்சாரத்திலும், பண்பாட்டிலும் மிகவும் தொன்மையானவர்கள். கல்வியும், மன்னர் ஆட்சியையும் தோன்றும் முன்னரே தோன்றிய குடி என்பதால் இந்துக்கள் கலாச்சாரம், சம்பிரதாயங்களில் நிறைய சுவாரஸ்யங்கள் நிறைந்து இருக்கின்றன.

மனிதர்களை பற்றிய நம்ப முடியாத 7 மர்மங்கள்!!!

இந்துக்கள் ஆன்மிகம், கோவில், வழிபாடு போன்றவற்றிலும் கூட மிகவும் தொன்மை வாய்ந்து காணப்படுகிறார்கள். இராஜ ராஜ சோழனின் பெரியக் கோயிலை கட்டிய வரலாறே இன்றளவும் ஆச்சரியமாக இருக்கிறது. ஆச்சரியங்கள் மட்டுமின்றி சில கோயில்கள் மர்மங்களும் தாங்கி நிற்கின்றன.

இந்தியாவில் அவிழ்க்க முடியாத 7 மர்ம முடிச்சுகள்!!!

அந்த வகையில் நமது ஊர்களில் இருக்கும் ஒருசில அசாதாரண இந்து கோயில்களும், நம்ப முடியாத அளவிற்கு சில மர்மங்களும் அவற்றை சுற்றி சூழ்ந்தும் இருக்கின்றன...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தில்லை நடராஜர்

தில்லை நடராஜர்

சிதம்பரத்தில் இருக்கும் தில்லை நடராஜர் கோவில், சிவனுக்குரியது என கூறப்படும் பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாயத்தை குறிப்பது ஆகும்.

தில்லை நடராஜர்

தில்லை நடராஜர்

சிதம்பரத்தில் இருக்கும் தில்லை நடராஜர் இடத்தில் ஓர் தகவல் மறைந்திருக்கிறது எனவும், அது சிதம்பர இரகசியம் என்றும் இந்துக்களால் நெடுங்காலமாக நம்பப்பட்டு வருகிறது.

பூமியின் மத்திய புள்ளி

பூமியின் மத்திய புள்ளி

தில்லை நடராஜர் ஒற்றைக்காலில் தன் கட்டை வரலை ஊனி நிற்கும் இடம் தான் பூமியின் மத்திய புள்ளி எனவும் கூறப்படுகிறது.

நரசிம்ம சுவாமி கோவில் (Panakala Narasimha Swamy)

நரசிம்ம சுவாமி கோவில் (Panakala Narasimha Swamy)

ஆந்திராவில் மங்களகிரி மலை உச்சியில் இருக்கிறது இந்த நரசிம்ம சுவாமி கோவில். இங்கு விஷ்ணு நரசிம்ம அவதாரத்தில் முக்கிய கடவுளாக வணங்கப்படுகிறார்.

வெல்லம் நீர்

வெல்லம் நீர்

இங்கு கடவுளின் வாயில் வெல்லம் ஊற்றப்படுகிறது. அதை சிலை குடிக்கிறது என கூறப்படுகிறது. மேலும் கொப்புளிப்பது போன்ற சப்தம் வருகிறது என்றும் கூறுகிறார்கள். மலையில் இந்த வெல்ல நீர் அதிகமாக இருப்பினும் கூட ஒரு எறும்பு கூட இந்த மலையில் இல்லை என்பது மர்மமாக இருக்கிறது என இந்த ஊர் மக்கள் கூறுகின்றனர்.

ஸிம்மாச்சலம் கோயில்

ஸிம்மாச்சலம் கோயில்

ஆந்திராவின் விசாகப்பட்டினம் பகுதியில் இருக்கிறது இந்த ஸிம்மாச்சலம் கோயில். இங்கிருக்கும் நரசிம்மர் சந்தன காப்பு சாத்தப்படுகிறது. நரசிம்மரின் உக்கிரத்தை குறைக்க தான் இந்த சந்தன காப்பு என கூறப்படுகிறது.

வருடத்தில் ஒரு நாள்

வருடத்தில் ஒரு நாள்

ஆனால், வருடத்தில் ஒரு நாள் மட்டும் இந்த சந்தன காப்பு இன்றி நரசிம்மர் காட்சியளிப்பார். இந்த பூஜையை நிஜரூப தரிசனம் என கூறுகிறார்கள். இந்த நாள் தான் விசாகப்பட்டினத்தின் மிகவும் வெப்பமான நாளாக பதிவாகிறது என்பது மர்மமாக இருந்து வருகிறது.

திருமலா கருடன் மலை

திருமலா கருடன் மலை

வெங்கடாசலபதி இருக்கும் திருமலாவில் இருக்கிறது கருடன் மலை. இயற்கையாகவே இந்த மலை கருடன் போன்ற தோற்றத்தில் இருப்பதால் இந்த மலைக்கு கருடன் மலை என்ற பெயர் வந்தது.

வெங்கடாசலபதி வாகனம்

வெங்கடாசலபதி வாகனம்

திருமலாவில் இருக்கும் வெங்கடாசலபதியின் வாகனமாக கருதப்படும் கருடன் உருவிலேயே, திருமலா அருகில் ஓர் மலை இருப்பது இன்றுவரை ஆச்சரியமாக தான் இருக்கிறது.

Image Courtesy

ஸ்தம்பேஷ்வர் மகாதேவ் கோவில்

ஸ்தம்பேஷ்வர் மகாதேவ் கோவில்

குஜராத்தில் இருக்கும் காவி கம்பை (Kavi Kamboi) எனும் சிறிய டவுன் பகுதிக்கு அருகில் அமைந்திருக்கிறது இந்த ஸ்தம்பேஷ்வர் மகாதேவ் கோவில். இது அரேபியன் கடற்கரை அருகில் அமைந்திருக்கும் ஓர் இடமாகும்.

ஸ்தம்பேஷ்வர் மகாதேவ் கோவில்

ஸ்தம்பேஷ்வர் மகாதேவ் கோவில்

கடல் அலை குறைவாக வீசும் காலத்தில், கடல் மட்டம் குறையும் போது மட்டும் தான் இந்த கோயிலை காண முடியும். பெரும்பாலும் இந்த கோயில் கடலில் மூழ்கிய நிலையில் தான் இருக்கும். இது மூழ்கும் போதும், வெளிப்படும் போதும் மக்கள் பெரும் கூட்டமாக இங்கு வந்து செல்கிறார்கள்.

தத்வாணி (Tatwani) கோயில்

தத்வாணி (Tatwani) கோயில்

பண்டையக் காலத்தில் கட்டப்பட்ட கோயில் இது. தர்மசாலாவில் இருந்து 25 கி.மீ தொலைவில் இருக்கிறது இந்த கோவில். இங்கு இருக்கும் ஓர் குளத்தில் எப்போதுமே நீர் சூடாக தான் இருக்கிறது.

தீயவை நீங்கும்

தீயவை நீங்கும்

இந்த குளம் ஆண்களுக்கானதாக திகழ்கிறது. இந்த குளத்தில் குளித்தால் உடலில் உள்ள தீங்கு நீங்கிவிடும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. பெண்களுக்கு என ஓர் தனி குளமும் இங்கு இருப்பதாக கூறப்படுகிறது.

ஜ்வாலா ஜி கோவில்

ஜ்வாலா ஜி கோவில்

ஹிமாச்சல் பிரதேசத்தில் இருக்கும் காங்க்ரா எனும் நகரத்துக்கு அருகாமையில் இமாலய மலையின் அடிவாரத்தில் இருக்கிறது இந்த கோயில். இங்கு ஒரு தீச்சுடர் நூற்றாண்டு காலமாக தொடர்ந்து எரிந்து வருகிறது.

கர்னி மாதா கோயில்

கர்னி மாதா கோயில்

கர்னி மாதா கோயிலை எலிக் கோயில் என்றும் குறிப்பிடுவதுண்டு. இது ராஜஸ்தானில் இருக்கிறது. கர்னி மாதாவை வழிப்படும் கோயிலாக இது திகழ்கிறது. இவர் துர்க்காதேவியின் அவதாரமாக கருதப்படுகிறார்.

கர்னி மாதா கோயில்

கர்னி மாதா கோயில்

இவரது இளம் மகன் மூழ்கி இறந்த போது, எமன் மீண்டும் உயிர் கொடுக்க மறுத்துவிட்டார் என்றும், பிறகு இவரே தன் மகனுக்கு உயிர் கொடுத்தார் என்றும், அதன் பிறகு தன் குடும்பத்தில் யாருக்கும் மரணம் இல்லை வலியுறுத்தினார். இதன் பிறகு அனைவரும் எலி உருவில் மாறி இங்கே இருப்பதாக சில கூற்றுகள் கூறப்படுகின்றன.

கர்னி மாதா கோயில்

கர்னி மாதா கோயில்

ஏறத்தாழ இந்த கோவிலில் 20,000 எலிகளுக்கு மேல் இருக்கின்றன. இங்கு எலிகளை வணங்க பழம், பால் போன்ற உணவுகளுடன் பலதரப்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Unusual Hindu Temples And Their Mysterious Powers

Unusual Hindu Temples And Their Mysterious Powers, Take a look.
Desktop Bottom Promotion