For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2016 ஆம் ஆண்டின் உலகின் டாப் 10 அழகான பெண்கள்!

By Maha
|

ஒவ்வொரு வருடமும் அந்த ஆண்டின் மிகவும அழகிய பெண்களின் பட்டியல் வெளிவரும். அந்த வகையில் 2016 ஆம் ஆண்டின் உலகின் மிக அழகான பெண்களின் பட்டியலில், டாப் 10-இல் இருப்பவர்கள் யார் யார் என்று இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

அதுவும் இந்த பட்டியலில் பிரபலங்களின் வெறும் வெளிப்புற அழகு மட்டுமின்றி, அவர்களின் திறமையின் அடிப்படையிலும் ஒன்டர்ஸ்லிஸ்ட் தளம் பட்டியலிட்டுள்ளது. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
10. பியா வுர்ட்ஸ்பேச்

10. பியா வுர்ட்ஸ்பேச்

2015 ஆம் ஆண்டின் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற பியா வுர்ட்ஸ்பேச், இந்த பட்டியலில் 10 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இவர் வெறும் நடிகை மட்டுமின்றி, மாடல் மற்றும் 2015 ஆம் ஆண்டின் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்திற்கு பின் 2015 ஆம் ஆண்டின் மிஸ் யுனிவர்ஸ் பிலிப்பைன்ஸ் பட்டத்தையும் பெற்ற அழகு ராணி.

9. எமிலியா கிளார்க்

9. எமிலியா கிளார்க்

எமிலியா கிளார்க் இந்த பட்டியலில் 9 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். 28 வயதைக் கொண்ட இவர், கேம் ஆஃப் த்ரோன்ஸில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

8. அட்ரியானா லிமா

8. அட்ரியானா லிமா

பிரேசிலிய அழகியும், சூப்பர் மாடலான இவர் விக்டோரியாஸ் சீக்ரெட் ஏஞ்சல்களில் ஒருவரும் கூட. இவர் இந்த பட்டியலில் எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் படி, உலகிலேயே இரண்டாவதாக அதிக சம்பளம் வாங்கும் மாடல் இவர் தானாம். அதுவும் 9 மில்லியன் டாலர் வாங்குவாராம்.

7. பிரியங்கா சோப்ரா

7. பிரியங்கா சோப்ரா

முன்னாள் உலக அழகியான பிரியங்கா சோப்ரா இந்த பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளார். இவர் 2015 ஆம் வருடத்தில் ஆசியாவின் செக்ஸியான பெண்ணாக லண்டன் பத்திரிக்கை நடத்திய வாக்கு ஒன்றில் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் பல விருதுகளை வென்றவர் மற்றும் இந்தியாவிலேயே முதன் முதலாக அமெரிக்காவின் தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவரும் கூட.

6. அம்பர் ஹெர்டு

6. அம்பர் ஹெர்டு

அமெரிக்காவின் மிகவும் ஹாட்டான நடிகையான அம்பர் ஹெர்டு, நிறைய பத்திரிக்கைகளில் மிகவும் அழகான மற்றும் கவர்ச்சியானவர்களின் பட்டியலில் அடிக்கடி இடம் பெறுவார். இவர் இந்த பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார்.

5. பிக்சி லாட்

5. பிக்சி லாட்

இவர் மிகவும் பிரபலமான ஓர் பாப் பாடகி. இவர் இந்த பட்டியலில் 5 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இவர் பல சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார் மற்றும் 2009 ஆம் ஆண்டு இந்த பெண் 'பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ்' மூலம் போதுமான புகழ் பெற்றார்.

4. தீபிகா படுகோனே

4. தீபிகா படுகோனே

பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளுள் ஒருவரான தீபிகா படுகோனே, இந்த பட்டியலில் 4 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இவர் இந்தியாவின் மிகவும் அழகிய பெண்களின் பட்டியலில் பலமுறை இடம் பெற்றுள்ளார். இவரது அழகிய உடலமைப்பு, புன்னகை, கண்கள், உயரம் போன்றவை, இவரை பாலிவுட்டில் மட்டுமின்றி, ஹாலிவுட்டிலும் அழகானவராக வெளிக்காட்டுகிறது. மேலும் இவர் ஹாலிவுட் திரைப்படம் ஒன்றில் முக்கிய வேடத்தில் நடத்து வருகிறார். அதுமட்டுமின்றி பல கம்பெனிகளின் பிராண்ட் அம்பாஸிடரும் கூட.

3. நானா ம் ஜின்-ஆ

3. நானா ம் ஜின்-ஆ

தென்கொரியாவைச் சேர்ந்த நானா இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார். 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தவர். மிகவும் பிரபல பத்திரிக்கையான இண்டிபெண்டண்ட் கிரிட்டிக்ஸின் 2014 ஆம் ஆண்டின் 100 மிகவும் அழகிய பெண்களின் முகப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தார் மற்றும் 2015 ஆம் ஆண்டும் முதல் இடத்தைப் பிடித்தார். அந்த அளவில் க்யூட்டாக முகத்தைக் கொண்டவர் தான் நானா.

2. லிசா சொபரானோ

2. லிசா சொபரானோ

பிலிப்பைன்ஸ் நடிகையும் மாடலுமான லிசா, இந்த பட்டியலில் 2 ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். இவர் மிகவும் அழகிய முகத்தைக் கொண்டுள்ளார். மேலும் பல தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

1. செலினா கோம்ஸ்

1. செலினா கோம்ஸ்

முன்னாள் டிஸ்னி நடிகையான செலினா கோம்ஸ், 2016 ஆம் ஆண்டின் உலகின் மிக அழகான பெண்களின் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். இவர் மிகவும் க்யூட்டான மற்றும் அப்பாவித்தனமான முகத்தைக் கொண்டதோடு, அழகிய மற்றும் கவர்ச்சிகரமான உடலமைப்பையும் கொண்டவர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Top Ten Most Beautiful Women of 2016

Here we listed world's top 10 most beautiful women of 2016. Take a look...
Desktop Bottom Promotion