இவ்வருடம் ஃபேஸ்புக்கை கலக்கிய டாப் 10 நபர்கள் / விஷயங்கள்!

2016-ம் ஆண்டு ஃபேஸ்புக்கை கலக்கிய, டிரென்ட் ஆன டாப் 10 விஷயங்கள் பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.

Subscribe to Boldsky

முன்பெல்லாம் ஒருவர் புகழ் அடைய வேண்டும் என்றால் கடினமாக உழைக்க வேண்டும், தனித்துவமான வகையில் திறமைக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், இன்று அப்படி இல்லை. கோமாளித்தனமாக ஃபேஸ்புக்கில் ஏதாவது ஒன்றை செய்தால் போதும், ஒருவர் எளிதாக பிரபலமாகிவிடலாம்.

இதே ஃபேஸ்புக்கில் தங்கள் திறமையை காட்டி பிரபலம் அடைந்தவர்களும் இருக்கிறார்கள். அந்த வகையில் 2016-ல் ஆஹா ஓஹோவென டிரென்ட் ஆன சம்பவங்கள் மற்றும் நபர்கள் பற்றி இங்கு காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

மண்ணை சாதிக்!

ஆரம்பக் காலத்தில் ஊர் காவலன் போல சமூகத்தில் நடக்கும் தீய செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வீடியோ பதிவு செய்து வந்த மண்ணை சாதிக். பின்னாளில் முழுக்க, முழுக்க தன்னை ஒரு கமர்ஷியல் எண்டர்டெயினராக மாற்றிக் கொண்டார். இவரது ஃபேஸ்புக் லைவ் நிகழ்சிகள் அனைத்தும் சூப்பர்ஹிட்.

டப்ஸ்மேஷ் கில்லாடிகள்!

தார்மிக் லீ, மிர்நாலினி, பிரகதி என டப்ஸ்மேஷ் கில்லாடிகள் அனைவரும் மீடியாக்களின் பார்வையில் பட்டு பெருமளவில் ரீச் அடைந்த வருடம் 2016.

5,00,000 புதிய வாக்காளர்கள்!

ஸ்மைல் சேட்டை யூடியூப் சேட்டை சமூக ஆர்வத்துடன். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் சமயத்தில் 5 லட்ச புதிய வாக்காளர்களிடம் வாக்களிப்போம் என்ற உறுதிமொழி எடுக்க செய்த நிகழ்வு பெருமளவு டிரென்ட் ஆனது மட்டுமின்றி நல்ல தாக்கத்தையும் உண்டாக்கியது.

ரெட் வெல்வெட் கேக்!

திமுகவின் தீவிர விசுவாசியான பிரியா குருநாதன் என்பவர் ஃபேஸ்புக்கில் வெல்வெட் கேக் பற்றி போஸ்ட் போட்டு கடும் விமர்சனத்திற்கு உள்ளானார்.

தமிழ் ராக்கர்ஸ்!

தயாரிப்பாளர்களை விட கட்சிதமாக எப்போது திருட்டு பிரின்ட் வெளியிடுவோம். அது எந்த டொமைன்-ல் வாடிக்கையாளர்கள் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என தமிழ் ராக்கர்ஸ்!அட்டூழியம்செய்த ஆண்டு 2016!

நீயா நானா நமீதா!

பெண்ணியம் பற்றிய கருத்தை நீயா, நானா மேடையில் வெளியிட்டு வயது வரம்பின்றி பலரது எதிர்ப்புக்கு ஆளானார் நமீதா எனும் பெண்.

சாரு!

டப்ஸ்மேஷ்போன்ற வேறொரு செயிலி மூலம் பாடலுக்கு வாயசைத்து ஒரே நாளில் ஓஹோவென டிரென்ட் ஆனவர் சாரு. ஆனால், இது இவராக சமூக தளத்தில் வெளியிடவில்லை. இவை கசிந்த வீடியோக்கள் என கூறப்பட்டது. ஒருசில வீடியோ பதிவுகளுடன் இவரது தரிசனம் நின்று போனது.

நூறுநாள் புடவை!

முன்னாள் சண் டிவி செய்தி வாசிப்பாளரின் நூறுநாள் புடவை சேலஞ் பெண்கள் மட்டுமின்றி, ஆண்கள் மத்தியிலும் புடவை மீதான ஆர்வத்தை தூண்டியது.

சேலஞ்ச் அக்சப்டட்!

உலகமெங்கும் திடுக்கிடும் வகையில் கின்னஸ் சாதனைகள் செய்துக் கொண்டிருந்த அதே சமயத்தில் தான் ஃபேஸ்புக்கில் பிளாக் அன்ட் ஒயிட் புகைப்பட சேலஞ் எதுவோ வீரதீர செயல் போல காட்டுதீயாக பரவியது. #சேலஞ்ச்_அக்சப்டட்

பேலியோ டயட்!

திடீரென முளைத்தது இந்த பேலியோ டயட். 50:50 பிஸ்கட் போல இந்த டயட்டை பாதி பேர் ஆதரித்தனர். பாதி பேர் எதிர்த்தனர். சிலர் இது ஆரோக்கியத்துக்கு கேடு என போர்க்கொடி எல்லாம் தூக்கினர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Top 10 Facebook Trends in 2016

Top 10 Facebook Trends in 2016
Story first published: Friday, December 16, 2016, 16:14 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter