இவ்வருடம் மக்களை முட்டாளாக்கிய டாப் 8 விஷயங்கள் - 2016!

இந்த வருடம் மக்களை முட்டாளாக்கிய டாப் விஷயங்கள் பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.

Subscribe to Boldsky

ஒவ்வொரு காலத்திலும், ஒவ்வொருவரும் மக்களை ஏதோ ஒரு விஷயத்தில் முட்டாளாகிக் கொண்டு தான் இருக்கிறார்கள். அந்த வகையில் மக்களை நேரடியாக முட்டாளாக்கிய விஷயங்கள், மக்கள் சிலரை முட்டாளாக்கிய நிகழ்வுகள், மக்கள் நம்பி ஏமார்ந்த விஷயங்கள், இந்த வருஷமும் இது நடக்காது என நினைத்து, அதிசயமாக நடந்த விஷயங்கள் பற்றி இங்கு காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

ஃப்ரீடம் 251 மொபைல்!

251 ரூபாய்க்கு மொபைல் தருகிறேன் என இந்தியர்களை ஒட்டுமொத்தமாக முட்டாளாக்கியது ஃப்ரீடம் 251 மொபைல்!

கறுப்பு பண முதலைகள்!

சரியாக வரி கட்டாமல், ஊழல், லஞ்சம் மூலமாக பணத்தை பதுக்கியவர்களை மோடியின் கறுப்புப்பணம் ஒழிப்பு நடவடிக்கை முட்டாளாக்கியது.

கமர்ஷியல் பட இயக்குனர்கள்!

படம் முழுக்க காமெடி, நான்கு பாடல்கள், மொக்கை வில்லன் என்ற ஃபார்முலாவில் ஒரு படத்தை எடுத்தால் லாபம் பார்க்கலாம் என்ற எண்ணத்தை கொண்டிருந்த கமர்ஷியல் இயக்குனர்களை மக்கள் நல்ல படத்திற்கு வரவேற்ப்பு கொடுத்து முட்டாளாக்கினர்.

மூன்றாம் அணி!

திராவிட கட்சிகளை எதிர்த்து வென்று, ஆட்சியை பிடிப்போம் என்று உருவான மூன்றாவது அணியை ஒட்டு போடாமல் மக்கள் முட்டாளாக்கினர்.

டொனால்ட் ட்ரம்ப்!

ஹிலாரி தான் வெல்வார் என்று எண்ணிக் கொண்டிருந்த உலக மக்களை அதிபர் தேர்தலில் வெற்றிவாகைசூடி முட்டாளாக்கினார் டொனால்ட் ட்ரம்ப்.

ஆஸ்கர் வெற்றி!

எப்போதும் போல இந்த வருடமும் ஆஸ்கர் போட்டியில் நுழைந்தாலும் விருது கிடைக்காது என எண்ணியவர்களை ஆஸ்கர் வென்று முட்டாளாக்கினர் லியனார்டோ டிகாப்ரியோ.

ஒலிப்பிக்கில் இந்தியா!

ஒலிம்பிக்கில் பங்குபெற்ற இந்திய பெண் வீராங்கனைகள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி இந்திய ஆண் வீரர்கள் தங்கம் வென்று சாதிப்பார்கள் என ஆண்களின் வெற்றியை எதிர்நோக்கி காத்திருந்தவர்களை முட்டாளாக்கினர்.

ரேஷன்கார்டு!

இந்த வருடமாவது புது ரேஷன்கார்டு கிடைக்கும் என காத்திருந்த மக்களுக்கு, மீண்டும் இணைப்பு சீட்டு ஒட்டப்படும் என கூறி அரசு மக்களை முட்டாளாக்கியது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things Made People Fool This Year - 2016

Things Made Indians Fool This Year - 2016
Story first published: Friday, December 23, 2016, 16:30 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter