தவறுதலாக ஆபாச வீடியோக்கள் ஒளிப்பரப்பான சம்பவங்கள்!

இன்டர்நெட், சர்வர், மாற்றி பதிவு செய்தது என தவறுதலாக ஆபாச வீடியோக்கள் ஒளிப்பரப்பான சம்பவங்கள் பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.

Subscribe to Boldsky

தங்களை அறியாமல் தவறி நடப்பதால் தான் அது தவறு. தெரிந்தே செய்தால் அது தப்பு. சில தவறுகள் திருத்திக் கொள்ள வாய்ப்பளிக்கும். சில தவறுகள் திருத்திக் கொண்டாலும் கூட, சில காலத்திற்கு கரும்புள்ளி போல நம்மை விட்டு நீங்காமல் ஒரு அசௌகரியமான நிலையை உண்டாக்கும்.

Shocking Cases Of Accidental Porn!

அப்படி இன்டர்நெட், சர்வர், மாற்றி பதிவு செய்தது என தவறுதலாக ஆபாச வீடியோக்கள் ஒளிப்பரப்பான சம்பவங்கள் பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

சம்பவம் #1

ஆஸ்திரேலிய ரக்பி விளையாட்டு வீரர் ஹெயன் என்பவர் பள்ளி மாணவர்களுக்கு பிரசண்டேசன் வழங்கிக் கொண்டிருக்கும் போது தவறுதலாக ஆபாச படம் ஒளிப்பரப்பாகி பரபரப்பானது. இதற்கு காரணம் இவரது போன் வை-பையில் கடவு பாதுகாப்பின்றி இணைந்திருந்தது தான் என அறியப்பட்டது.

Image Source

சம்பவம் #2

இஸ்ரேலில் இருக்கும் பள்ளி ஒன்றில் ஆறாம் வகுப்பு சேர்ந்த 90 மாணவர்களுக்கு பாடம் சார்ந்து அனுப்பப்பட்ட டிவிடியில் தெரியாமல் ஆபாசப்படமும் பதிவு செய்து அனுப்பி, பிறகு அந்த பெற்றோர்களை நேரில் அழைத்து தகவல் கூறினார்.

Image Source

சம்பவம் #3

பள்ளி ஆசிரியர் ஒருவர் தெரியாமல், பள்ளியின் சர்வரில் ஆபாச படத்தை பதிவேற்றம் செய்து சிக்கினார். இவரை இவரது பதிவு செய்த ரிஜிஸ்டர் எண் மூலம் கண்டறிந்து சஸ்பென்ட் செய்தனர்.

சம்பவம் #4

தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ஒரு தந்தை, தனது மகள் மற்றும் அவரது தோழிகளுக்கு பார்பி படம் காட்டுவதற்கு பதிலாக, தவறுதலாக வீட்டில் ஆபாசப்படம் ஒளிப்பரப்பு செய்துவிட்டார்.

Image Source

சம்பவம் #5

கார் விபத்தில் மரணம் அடைந்த நபரது வீட்டில், அவரது மகன் தன் தந்தை பற்றிய அஞ்சலி வீடியோ ஒளிப்பரப்பு செய்வதற்கு பதிலாக நிகழ்ச்சியின் போது ஆபாச வீடியோ ஒளிப்பரப்பு செய்துவிட்டார். இதனால் வந்தவர்கள் சீற்றம் கொண்டனர்.

Image Source

சம்பவம் #6

ஒரு கடையின் விளம்பர பலகையில், கடை பற்றிய விளம்பரம் ஒளிப்பரப்பு ஆவதற்கு பதிலாக சர்வரில் இணைந்திருந்த ஆபாசப்படம் ஓடிக்கொண்டிருந்த வேறு திரை தவறுதலாக ஒளிப்பரப்பு ஆகி பெரும் பரபரப்பு உண்டானது.

Image Source

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Shocking Cases Of Accidental Porn!

Shocking Cases Of Accidental Porn!
Story first published: Saturday, December 10, 2016, 15:56 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter