For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வட கொரியா பற்றிய பயங்கரமான மற்றும் வினோதமான சில உண்மைகள்!

By Maha
|

உலகிலேயே வட கொரியா மிகவும் பயங்கரமான நாடு எனலாம். இந்த நாட்டிற்கு செல்லும் வாய்ப்பு உங்களுக்கு கிடைத்தால், ஒன்றுக்கு இரண்டு முறை யோசியுங்கள். ஏனெனில் இந்நாடு மிகவும் கண்டிப்பானது மற்றும் விசித்திரமான சட்டங்களைக் கொண்டது. இக்கட்டுரையைப் படித்த பின் நீங்கள் அந்நாட்டு பிரஜையாக இல்லை என்பதை நினைத்து சந்தோஷப்படுவீர்கள்.

ஏனென்றால் அந்த அளவில் இந்நாட்டில் வாழும் மக்களுக்கு எந்த ஒரு செயலைச் செய்வதிலும் சுதந்திரம் இல்லை. அனைத்துமே அரசாங்கத்தின் விதிமுறைகளைத் தான் கடைப்பிடிக்க வேண்டும். உதாரணமாக, டிவி பார்ப்பதில் இருந்து பேசுவது வரை என அனைத்துக்கும் விதிமுறைகள் உள்ளன.

இதுப்போன்று இன்னும் ஏராளமான கொடூரமான விஷயங்கள் உள்ளன. அதைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மூன்று தலைமுறை தண்டனை

மூன்று தலைமுறை தண்டனை

வட கொரியாவில், ஒருவர் குற்றம் செய்து சிறை தண்டனை பெற்றால், அந்த குற்றவாளிக்கு மூன்று தலைமுறை தண்டனை வரை அளிக்கப்படும். அதாவது, இந்த குற்றவாளி இறந்த பின், அவரது மற்ற 2 தலைமுறையினரான அவரது மகன் மற்றும் மகனின் மகன் இத்தண்டனையை அனுபவிக்க வேண்டும்.

இணையம் பயன்படுத்துவதில் தடை

இணையம் பயன்படுத்துவதில் தடை

வட கொரியாவில், அரசாங்க அதிகாரிகளின் அனுமதியின்றி இணையத்தை சுதந்திரமாக பயன்படுத்த முடியாது. மேலும் வட கொரியாவில் Kwangmyong என்னும் ஓர் உள்நாட்டு வலையமைப்பு உள்ளது. இது வட கொரிய நகரங்களை மட்டுமே இணைக்கும்.

அதிபரை எதிர்த்தால் சந்திக்கும் பிரச்சனை

அதிபரை எதிர்த்தால் சந்திக்கும் பிரச்சனை

சமீபத்தில் வட கொரிய அதிபர் கிம்ஜாங் யுங், தனது உறவினரும், ராணுவ அதிகாரியுமான ஜெங் சோங் என்பவர் தனக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, கடுமையான ஓர் தண்டனைக்கு உள்ளானார். அது என்னவெனில், கடும் பசியுடன் இருந்த 120 நாய்கள் அடைக்கப்பட்ட கூண்டில், நாய்களுக்கு உணவாக ஜெங் சோங்கை போட்டு அடைத்தது தான். இச்செய்தி சீன பத்திரிக்கைகளில் வெளிவந்தன. எவ்வளவு கொடுமையான நாடு பாருங்கள்.

உலகின் மிகவும் வரையறுக்கப்பட்ட எல்லைகள்

உலகின் மிகவும் வரையறுக்கப்பட்ட எல்லைகள்

வட மற்றும் தென் கொரிய எல்லைகள் மிகவும் ஆபத்தானது. அதிலும் வட கொரியாவில் இந்த எல்லையில் ஓர் அழகிய மற்றும் போலியான நகரம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தென் கொரிய மக்களை இந்த நகரத்தினுள் வரவழைத்து நம் அடிமையாக்கிக் கொள்ளலாம் என்பதால் தான். உண்மையில் அந்நகரத்தில் யாரும் வசிப்பதில்லை. இது பேய் நகரம் எனலாம்.

வாகனங்கள் இல்லை

வாகனங்கள் இல்லை

வட கொரியாவில் ராணுவத்தினர் மற்றும் அரசாங்க அதிகாரிகள் மட்டும் தான் சொந்த வானங்களை வைத்துக் கொள்ள முடியுமாம். மேலும் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சுதந்திரமாக செல்லக்கூட அரசாங்க அதிகாரிகளின் அனுமதி வேண்டுமாம்.

ஹேர்ஸ்டைலில் கூட விதிமுறை

ஹேர்ஸ்டைலில் கூட விதிமுறை

இந்நாட்டின் விதிமுறைப் படி, பெண்கள் 28 வகையான ஹேர் ஸ்டைல்களை மட்டும் தான் பின்பற்றலாம். அதிலும் திருமணமான பெண்கள் என்றால், அவர்கள் தங்கள் கூந்தலை குட்டையாகவும், திருமணமாகாத பெண்கள் தங்கள் கூந்தலை நீளமாகவும் வைத்துக் கொள்ள வேண்டுமாம். ஆண்களை எடுத்துக் கொண்டால், 5 செ.மீ-க்கு மேல் முடி நீளமாக இருக்கக்கூடாது. சற்று வயதானர்கள் என்றால் 7 செ.மீ வரை முடியை வைத்துக் கொள்ளலாமாம்.

ஓய்வு நேரமே இல்லை

ஓய்வு நேரமே இல்லை

வட கொரியாவில் உள்ள மக்கள் வாரத்திற்கு 6 நாட்கள் கட்டாயம் வேலை செய்ய வேண்டும். எஞ்சிய ஒரு நாளிலும் ஏதாவது ஒன்றைக் கூறி வேலை வாங்கிவிடுவார்களாம். மொத்தத்தில் இந்நாட்டில் உள்ள மக்களுக்கு ஓய்வு கிடைப்பதே அரிது.

ஜீன்ஸ் அணிவது சட்ட விரோதம்

ஜீன்ஸ் அணிவது சட்ட விரோதம்

வட கொரியாவில் ஜீன்ஸ் அணிவது என்பது சட்ட விரோதமான செயலாம். ஏனெனில் இது அமெரிக்க ஏகாதிபத்தியதை வெளிப்படுத்துகிறதாம். இந்த ஒன்றைத் தவிர, ஏனைய அனைத்தும் கொடுமையான ஒன்றாகத் தானே உள்ளது.

தேர்தல்

தேர்தல்

இந்நாட்டில் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை, ஒரே ஒரு வேட்பாளர் பங்கு கொண்டு தேர்தல் நடைபெறும். ஒருவேளை அந்த வேட்பாளரை பிடிக்காவிட்டால், அதற்கு என்று தனியாக, பாதுகாப்பு ஏதும் இல்லாத ஓர் அறை உள்ளது. அங்கு சென்று வேட்பாளரின் பெயரை அடித்து ஓட்டை பதிவு செய்யலாம்.

போட்டோ கூடாது

போட்டோ கூடாது

போட்டோ எடுக்க வேண்டுமெனில், அங்குள்ள அதிகாரிகளின் அனுமதியைப் பெற்று தான் எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அதற்குரிய தண்டனையை அனுபவிக்கக்கூடும்.

பைபிள் படிப்பது அல்லது டிவி பார்ப்பது

பைபிள் படிப்பது அல்லது டிவி பார்ப்பது

வட கொரியாவில் பைபிள் படித்தால் அல்லது ஆபாச படம் பார்த்தால், மரண தண்டனை கொடுக்கப்படும்.

ஹைட்ரஜன் குண்டு பரிசோதனை

ஹைட்ரஜன் குண்டு பரிசோதனை

சமீபத்தில் வட கொரியா எந்த ஒரு அனுமதியும், முன் அறிவிப்பும் இல்லாமல் பயங்கரமான ஹைட்ரஜன் குண்டு ஒன்றை பரிசோதித்து, அக்கம் பக்கத்தில் உள்ள நாடுகளுக்கு பெரும் தொந்தரவை வழங்கிக் கொண்டு இருக்கிறது என்றால் பாருங்கள். இது எவ்வளவு மோசமான நாடு என்று.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Scary And Bizarre Facts About North Korea

Here are some shivering and bizarre facts about North Korea. Read to know more.
Story first published: Thursday, January 28, 2016, 16:07 [IST]
Desktop Bottom Promotion