For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விமான விபத்திற்கு பிறகு நேதாஜியை ரஷ்யாவில் கண்டவர்கள் கூறியது என்ன?

|

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியில் இருக்கும் போது அவர்களுக்கு பயத்தை கண்முன் காட்டிய மாபெரும் வீரன். காந்தியின் அகிம்சை வழியில் நேதாஜிக்கு எப்போதும் உடன்பாடு இருந்ததில்லை. இதை நேரடியாகவும் கூட கூறியிருந்தார். இந்தியா மட்டுமின்றி, அந்த காலத்தில் அடிமையாக இருந்த இதர நாடுகளுக்கும் கூட உதவ வேண்டும் என்று நேதாஜி எண்ணினார்.

இந்திய இளைஞர் இராணுவ படையை ஏற்படுத்தி ஆங்கிலேயர்களை எதிர்த்தார். சுபாஷ் சந்திர போஸ். ஒருபக்கம் இரண்டாம் உலகப்போர் மற்றும் இந்தியாவில் நேதாஜியின் இளைஞர் இராணுவத்தின் எழுச்சி, காந்தியின் அகிம்சை வழிப் போராட்டத்தை விட பெரும் நெருக்கடியை ஆங்கிலேயருக்கு தந்தது. ஓர் எல்லைக்கு பிறகு நேதாஜி உலக அளவில் ஓர் பெரும் அணியை திரட்ட முடிவெடுத்திருந்தார்.

அப்போது தான் ஓர் விமான விபத்தில் நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் மரணமடைந்துவிட்டார் என்ற செய்து வந்தது. ஆனால், நேதாஜியின் மரணம் இன்று வரை மர்மமாக தான் இருக்கிறது. 1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 18 அன்று நேதாஜி இறந்துவிட்டார் என்ற செய்திக்கு பின்னரும் கூட ரஷ்யாவில் அவரை கண்டதாக பலர் கூறியுள்ளானர். அவற்றை பற்றி இனிக் காண்போம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜோசஃப் ஸ்டாலினும் வ்யாஸ் லாலும்

ஜோசஃப் ஸ்டாலினும் வ்யாஸ் லாலும்

விமான விபத்துக்குப் பிறகு நேதாஜி ரஷ்யாவில் காவலில் சில ஆண்டுகள் இருந்ததாகக் சிலர் கூறியிருக்கிறார்கள். 1949-ல் ஜோசஃப் ஸ்டாலினும் வ்யாஸ் லால் மொலேடோவ்-ம் நேதாஜி ரஷ்யாவில் தங்கி இருப்பது குறித்து விவாதித்ததாக சில கூற்றுகள் கூறுகின்றன.

முத்துராமலிங்கத் தேவர்

முத்துராமலிங்கத் தேவர்

1949-ல் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தான் நேதாஜியை ரஷ்யாவில் சந்தித்ததாகவும் அவருடன் சீனாவில் தங்கியதாகவும் கூறிப்பிட்டார். இவர் இவ்வாறு கூறிய பிறகு தான் இந்தியாவில் நேதாஜியை பற்றிய மர்மம் அறிய மக்களிடம் என்னத்தை ஏற்படுத்தியது. இதன் காரணம் தான் நேருவை ஷா நவாஸ்கான் கமிஷன் அமைக்க மறைமுக தூண்டுதலாக இருந்தது.

Dr. S. ராதாகிருஷ்ணன்

Dr. S. ராதாகிருஷ்ணன்

இந்தியாவின் ரஷ்ய தூதராக இருந்த Dr. S. ராதாகிருஷ்ணன் நேதாஜியை ரஷ்யாவில் வெளியே தெரியாத இடத்தில் சந்திக்க அனுமதிக்கப்பட்டார் என்பது திகைக்க வைக்கும் தகவலாக இருக்கிறது.

ரஷ்ய தூதர்

ரஷ்ய தூதர்

காபூலில் ஆப்கன் கவர்னர் கோஸ்ட் -என்பவரிடம், ஆப்கனுக்கான ரஷ்ய தூதர்,"மாஸ்கோவில் காங்கிரஸ் அகதிகளோடு, நேதாஜியும் உள்ளார். கிலாசி மலாங்கிற்கு நேதாஜியுடன் நேரடித் தொடர்பு இருக்கிறது." என்று கூறியிருந்தார்.

வியட்நாம் தலைவர் ஹோஸோம்

வியட்நாம் தலைவர் ஹோஸோம்

1945-ம் ஆண்டுக்கு பிறகு , (இரண்டாம் உலகப்போருக்குப் பின்) வியட்னாமின் மரியாதைக்குரிய தலைவர் ஹோஸோமினுடன் நேதாஜிக்கு நட்பு இருந்ததை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் வியட்னாமில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

H.V. காமத்

H.V. காமத்

1945-ம் ஆண்டு டிசம்பர் 20 அன்று வெளியான ஒரு செய்திக் குறிப்பில் நேதாஜி உயிருடன் இருப்பதாக H.V. காமத் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. மோலொடோஃப் என்ற ரஷ்ய வெளியுறவு அமைச்சர் மார்ச் 1946-ல் நேதாஜி ரஷ்யாவில் இருப்பதாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அலெக்சாண்டர் கொலசிரிகோவ்

அலெக்சாண்டர் கொலசிரிகோவ்

மாஸ்கோவில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள படோல்ஸ்க் இராணுவ ஆவணக் காப்பகத்தில் அலெக்சாண்டர் கொலசிரிகோவ் என்ற WarswPact-ன் முன்னாள் மேஜர் ஜெனரல் 1996 அக்டோபரில் சில ஆவணங்களைப் பார்த்ததாகவும், அதில் நேதாஜியை ரஷ்யாவில் தங்க வைத்திருப்பதன் பல்வேறு விளைவுகள் குறித்து ஆராய்ந்ததற்கான தகவல்கள் இருக்கின்றன எனவும், அதை நகல் எடுக்கவோ, ஆவண எண் போன்றவற்றைக் குறிப்பு எடுக்கவோ அவர் அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Proofs That Shows Subash Chandra Bose Did Not Died In Flight Accident

Proofs That Shows Subash Chandra Bose Did Not Died In Flight Accident,
Desktop Bottom Promotion