For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தஞ்சை பெரிய கோவில் சென்று வந்து பதவி இழந்த அரசியல் பிரபலங்கள்!

|

தஞ்சை பெரிய கோவில், பிரகதீஸ்வரர் கோவில், பெருவுடையார் கோவில் என்று அறியப்பட்டு வருகிறது. ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த பிரசித்தி பெற்ற பெரிய சிவத்தலம். ஆயிரம் ஆண்டுகளை கடந்து தமிழர் பெருமையை தாங்கி நிற்கிறது. தஞ்சை பெரிய கோவிலுக்கும் தமிழக, இந்திய அரசியல் பிரபலங்களுக்கும் ஓர் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.

பலரும் அறிந்திராத தில்லை சிதம்பரம் கோயிலைப் பற்றிய இரகசியங்கள்!!

ஆனால், இது அவர்களை சற்று அச்சம் கொள்ள வைக்கும் தொடர்பாகும். அதாவது பெரிய பதவியில் இருக்கும் இந்திய / தமிழக அரசியல் பிரபலங்கள் தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்று திரும்பினால் அவர்களது பதவி அல்லது உயிருக்கு அபாயம் ஏற்படும் என்ற அச்சம் தான் அது.

அசாதாரணமான கோயில்களும் அதை சுற்றியிருக்கும் மர்மங்களும்!!

இது பல காலம் தொட்டு தொடர்ந்து வரும் துர்ச்சகுனமாக காணப்படுகிறது. எந்தெந்த அரசியல் பிரபலங்கள் இது போன்று தஞ்சை பெரிய கோவில் சென்று வந்த பிறகு அபாயத்தை சந்தித்துள்ளனர் என இனிக் காண்போம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கருணாநிதி

கருணாநிதி

தஞ்சை பெரிய கோவில் உள்ளே புதிதாக வராஹி அம்மன் சிலை வைக்க பிரச்சனை எழும்பி, பிறகு அந்த புதிய மண்டபம் இடித்த அதே நாளான ஜனவரி 31 1976-ம் ஆண்டு தான் கருணாநிதி அவர்களின் தலைமையிலான தி.மு.க ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது.

இந்திராகாந்தி

இந்திராகாந்தி

அந்த வராஹி அம்மன் மண்டபத்தை இடிக்க உத்தரவிட்ட பிரதமர் இந்திராகாந்தியின் பதவியும், ஆட்சியையும் அதன் பிறகு பறிபோனதும் குறிப்பிடத்தக்கது.

எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆர் முதல்வராக இருக்கும் போது ராஜ ராஜ சோழனின் ஆயிரமாவது முடிசூட்டு விழா நடத்தப்பட்டது. அந்த வைபவத்திற்கு சென்ற போது அங்கே சற்று மயக்கம் அடைந்தார் எம்.ஜி.ஆர். அதன் பிறகு தான் எம்.ஜி.ஆர்-ன் உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டது.

மீண்டும் தி.மு.க

மீண்டும் தி.மு.க

இந்த அபசகுனத்தை உடைக்கிறேன் என்று சபதம் எடுத்து மீண்டும் ஆட்சியில் இருந்த கருணாநிதி அவர்களின் தி.மு.க அரசு தஞ்சை பெரிய கோவிலும் 1000 ஆண்டு விழாவை ஏற்பாடு செய்தது. இந்த விழாவிற்கு சென்று வந்த பிறகு பல தி.மு.க பிரபலங்கள் பதவி இழந்து, பல இன்னல்களை சந்தித்தனர்.

ராசா

ராசா

மத்திய அமைச்சராக இருந்த ராசா பதவி இழந்ததோடு, ஊழல் வழக்கில் சிக்கி சிறைக்கும் சென்றார்.

கனிமொழி

கனிமொழி

ராசாவை தொடர்ந்து அன்றைய முதல்வராக இருந்த கருணாநிதியின் மகளான கனிமொழியும் சிறைக்கு சென்றார்.

கோ.சி.மணி

கோ.சி.மணி

மேலும், கோ.சி மணி நோய்வாய்ப்பட்டு, உடல்நலம் மோசமடைந்தார்.

பழனி மாணிக்கம்

பழனி மாணிக்கம்

பழனி மாணிக்கம் பதவியும் இழந்து, மாவட்ட செயலர் பொறுப்பையும் இழந்தார்.

படுதோல்வி

படுதோல்வி

வரலாறு காணாத வண்ணம், தி.மு.க மீண்டும் தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது. இதன் பிறகு அரசியல் பிரபலங்களுக்கு மத்தியில் மேலும், தஞ்சை பெரிய கோவில் மீதான அச்சம் அதிகமானது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Political Leaders And Tanjore Temple Sentiment

Do you know about the Political Leaders And Tanjore Temple Sentiment? read here in tamil.
Desktop Bottom Promotion