1948 - 2016: ஒலிம்பிக்கில் நடந்த நெஞ்சை பதைபதைக்க வைக்கும் அசம்பாவித சம்பவங்கள்!

Subscribe to Boldsky

மாடர்ன் ஒலிம்பிக் விளையாட்களில் கடந்த 1948-ம் ஆண்டிலிருந்து நேற்று நடந்து முடிந்த ரியோ 2016 ஒலிம்பிக் வரையிலும் பல மரண சம்பவங்கள் நடந்திருக்கின்றன. போட்டி நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் போது, போட்டி நடக்கும் முன்னர் பயிற்சியில் ஈடுபடும் போது, போட்டி முடிந்த பிறகு என பல தருணத்தில் வீரர்கள் இறந்துள்ளனர்.

இது மட்டுமின்றி, துப்பாக்கி சூடு, கார் விபத்து, வெடிகுண்டு சம்பவம் என வீரர்கள் மட்டுமின்றி அப்பாவி மக்களும் கூட சில அசம்பாவித சம்பவங்கள் காரணமாக ஒலிம்பிக் போட்டிகளின் போது உயிரிழந்துள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

பிரான்சிஸ்கோ லாசரோ (21)

பிரான்சிஸ்கோ லாசரோ போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த ஓட்டப்பந்தைய வீரர். கடந்த 1912-ம் ஆண்டு ஸ்டாக்ஹோம்-ல் நடந்த சம்மர் ஒலிம்பிக்கில் எலக்ட்ரோலைட் சமநிலையின்மையால் இவர் மராத்தான் ஓட்டப்பந்தையத்தின் போது மரணமடைந்தார். இவர் தேசிய அளவில் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்றவர். ஒலிம்பிக் விளையாட்டில் மரணமடைந்த முதல் வீரர் இவர் தான்.

நட் ஜென்சன் (23)

நட் ஜென்சன், டென்மார் நாட்டை சேர்ந்த சைக்கிள் பந்திய வீரர். 1960-ல் ரோம்-ல் நடந்த ஒலிம்பிக் போட்டியின் போது பந்தையத்தில் சைக்கிள் ஒட்டிக் கொண்டிருக்கும் போதே கீழே விழுந்து மரணமடைந்தார். இவரது மரணத்திற்கு ஹீட் ஸ்ட்ரோக் தான் காரணம் என அறியவந்தது.

நிகோலே (20)

நிகோலே, ரோமானிய நாட்டை சேர்ந்த குத்துச்சண்டை வீரர். இவர் 1936-ல் பெர்லின்-ல் நடந்த ஒலிம்பிக்-ன் போது குருதி நச்சூட்டம் (Blood Poisoning) காரணத்தால் இறந்தார். இறப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் தான் இவர் இங்கிலாந்து வீரரிடம் தோல்வியுற்றார்.

இக்னேஸ் (Ignaz Stiefsohn)

ஆஸ்திரியாவை சேர்ந்த க்ளைடிங் வீரர், 1936 பெர்லின் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கு முன்னர் பயிற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் மரணமடைந்தார்.

ராஸ் மில்னே (19)

ராஸ் மில்னே ஆஸ்திரேலியாவை சேர்ந்த பனிச்சறுக்கு வீரர். 1964 இந்ந்ஸ்ப்ரக் ஒலிம்பிக்கில் பயிற்சி செய்துக் கொண்டிருந்த போது பனிச்சறுக்கு மோதல் காரணமாக மரணமடைந்தார்.

காஷிமியர்ஸ் கே ஸ்க்ர்ஷிபெக்ஷி (Kazimierz Kay-Skrzypecki)

பிரிட்டனை சேர்ந்த காஷிமியர்ஸ் கே ஸ்க்ர்ஷிபெக்ஷி, ல்யூக் ரைட் வீரர். 1964 இந்ந்ஸ்ப்ரக் ஒலிம்பிக்கில் பயிற்சியின் போது ஏற்பட்ட விபத்தில் இவர் மரணமடைந்தார்.

நிக்கோலா (Nicolas Bochatay - 27)

நிக்கோலா சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த பனிச்சறுக்கு விளையாட்டு வீரர். 1992 விண்டர் ஒலிம்பிக் போட்டி பயிற்சியின் போது ஸ்னோ மெஷினுடன் மோதி விபத்து ஏற்பட்டு உயிரிழந்தார்.

நோடர் (Nodar Kumaritashvili - 21)

நோடர் ஜியார்ஜியா நாட்டை சேர்ந்த ல்யூக் ரைட் வீரர். 2010 விண்டர் ஒலிம்பிக் போட்டி பயிற்சியின் போது ஏற்பட்ட விபத்தின் போது உயிரிழந்தார்.

லண்டன் 1948

1948 லண்டன் ஒலிம்பிக்கின் போது செக்கோஸ்லோவேகியா நாட்டை சேர்ந்த பெண்கள் ஜிம்னாஸ்டிக் அணியை சேர்ந்த எலிஸ்கா என்பவர் போட்டியில் பங்குபெறும் முன்னரே மரணமடைந்தார். இவர் மரணமடைந்த அதே நாளில் இவரது அணி ஒலிம்பிக்கில் வெற்றி பெற்றனர்.

மெல்பேர்ன் 1956

1956-ம் ஆண்டு மெல்பேர்ன்-ல் நடந்த ஒலிம்பிக்கில் இத்தாலியை சேர்ந்த அர்ரிகோ என்பவர் படகோட்டும் போட்டியில் பங்குபெற இருந்தால். ஆனால், கார் விபத்தின் காரணமாக இவர் உயிழந்தார்.

சம்மர் ஒலிம்பிக்ஸ் 1972

1972-ல் நடந்த சம்மர் ஒலிம்பிக்கில் பாலஸ்த்தீன தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் காரணமாக இஸ்ரேல் நாட்டை சேர்ந்த 11 ஒலிம்பிக் வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இது ஒலிம்பிக்கின் கருப்பு தினமாக கருதப்பட்டது.

ஒலிம்பிக் பார்க் வெடிகுண்டு சம்பவம்

1996-ம் ஆண்டு அட்லாண்டா சம்மர் ஒலிம்பிக்கில் வெடிகுண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். 111 பேர் படுகாயம் அடைந்தனர்.

ரியோ 2016

நேற்று முடிவடைந்த ரியோ ஒலிம்பிக்கின் துவக்க விழா நடந்துக் கொண்டிருந்த ஸ்டேடியம் அருகில் நடந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒரு பெண் ஒலிம்பிக் கிராமத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். ஒன்று அந்த ஸ்டேடியத்தில் ஏறத்தாழ 53,000 மக்கள் அமர்ந்திருந்தனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: pulse, world, உலகம்
English summary

Olympic deaths: From London (1948) To Rio (2016)

At the modern Olympic Games, up to and including the 2016 Olympic Games, athletes have died while either competing in or practicing their sport. Take a look on here.
Story first published: Monday, August 22, 2016, 12:57 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter