For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நெஞ்சை பதைபதைக்க வைத்த சில புகைப்படங்கள்!

By Maha
|

வாழ்வில் நடந்த சில தருணங்களை மீண்டும் நினைவூட்ட எடுக்கப்படுவது தான் புகைப்படங்கள். சிலருக்கு புகைப்படங்கள் எடுப்பது விருப்பமான ஒன்றாக இருக்கும். அப்படி உலகில் சிலர் எடுத்த புகைப்படங்களுள் சில பார்த்ததுமே நம் நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வகையிலும், இன்னும் சில ஆச்சரியப்படுத்தும் வகையிலும் இருக்கும்.

இங்கு உலகில் உள்ள மிகவும் பிரபலமான சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பெரிய கல்லறை

பெரிய கல்லறை

1941 முதல் 1945 இடைப்பட்ட காலத்தில், சுமார் 20,000 சோவியத் போர் கைதிகள் மற்றும் பேர்கன்-பெல்சனில் இருந்த 50,000-த்திற்கும் மேற்பட்டவர்கள் இரக்கமற்ற முறையில் கொல்லப்பட்டனர். இது அப்படி கொன்று குவித்திருக்கும் போது எடுத்த போட்டோ.

Image Courtesy

அமெரிக்காவில் தூக்கிலிடப்பட்ட கருப்பின மக்கள்

அமெரிக்காவில் தூக்கிலிடப்பட்ட கருப்பின மக்கள்

இந்த புகைப்படம் லாரன்ஸ் பெய்ட்லர் என்பவரால் எடுக்கப்பட்டது. இந்த புகைப்படமானது கற்பழிப்பு செய்ததால் இரண்டு கருப்பினத்தவருக்கு தூக்கு தண்டனை வழங்கிய போது எடுத்தது. ஆனால் இவர்கள் மீது சுமத்தப்பட்ட கற்பழிப்பு பழி பொய்யானது என்று நாளடைவில் தெரிய வந்தது.

Image Courtesy

விமான விபத்து

விமான விபத்து

இது ட்வின் டவரில் விமானம் மோதி நொறுங்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம். இந்த புகைப்படத்தை ஸ்டீவ் லுட்லம் என்பவர் எடுத்தார். இந்த புகைப்படம் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் வந்தது.

Image Courtesy

விழும் மனிதன்

விழும் மனிதன்

இந்த புகைப்படம் ரிச்சார்ட் ட்ரூ என்பவரால் எடுக்கப்பட்டது. இது உலக வர்த்தக மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, மேலே இருந்து கீழே குதிக்கும் போது எடுத்தது. இருப்பினும் அவர் மரணத்தை தான் சந்தித்தார்.

Image Courtesy

இந்தியாவில் ஏற்பட்ட விஷ வாயு சம்பவம்

இந்தியாவில் ஏற்பட்ட விஷ வாயு சம்பவம்

இந்த புகைப்படம் பார்ப்போரின் கண்களில் இருந்து கண்ணீரை வரவழைக்கும் வகையில் இருந்தது. இந்த புகைப்படத்தை பப்லோ பர்த்தலமேயு என்பவர் இந்தியாவின் போபாலில் ஏற்பட்ட விஷவாயு சம்பவத்தின் போது எடுத்தார்.

Image Courtesy

வியட்நாம் போரின் கோரம்

வியட்நாம் போரின் கோரம்

எடி ஆடம்ஸ் என்பவர் தான் இந்த கொடிய புகைப்படத்தை எடுத்தார். இம்மாதிரி சுமார் 12-க்கும் மேற்பட்டோர் தலையில் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றால் பாருங்கள்.

Image Courtesy

ஈராக்கில் கைதிகள் சித்திரவதை செய்யப்படுவது

ஈராக்கில் கைதிகள் சித்திரவதை செய்யப்படுவது

இந்த புகைப்படம் அரபு கிரைப் சிறையில் இருந்த அமெரிக்க இராணுவத்தினர் மற்றும் சிஐஏ ஏஜெண்ட் ஒருவரால் எடுக்கப்பட்டது. இந்த புகைப்படம் ஈராக்கில் உள்ள கைதிகள் எவ்வளவு கொடுமையான முறையில் சித்திரவதை மற்றும் பலாத்காரம் போன்வற்றிற்கு உட்படுத்தப்படுத்தப்பட்டு கொல்லப்படுகின்றனர் என்பதை வெளிக்காட்டுகிறது.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Most Iconic Photos Ever Taken

Here are a list of most powerful photographs ever taken in history. Find out about the most iconic photos ever taken.
Desktop Bottom Promotion