உலகை அதிர வைத்த சில கொடூரமான மனைவிகள் பற்றி கேள்விப்பட்டதுண்டா?

Subscribe to Boldsky

கணவன் கொடுமையால் மனைவி துன்புறுத்தப்பட்டிருப்பது போன்ற பல செய்திகளைப் படித்திருப்பீர்கள். ஆனால் உலகில் உள்ள சில மனைவிகள் தங்களது கணவன்களை மிகவும் மோசமாக துன்புறுத்திய கதைகளை எங்காவது படித்ததுண்டா அல்லது கேள்வி தான் பட்டதுண்டா?

நம்மை உறைய வைக்கும் சில நரமாமிச வழக்குகள்!

இக்கட்டுரையில் உலகை அதிர வைத்த சில கொடூரமான மனைவிகளைப் பற்றி தான் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பெண்களின் செயல்கள் ஒவ்வொன்றும் மிகவும் மோசமாகவும், பயங்கரமாகவும் இருக்கும். இங்கு கொடுக்கப்பட்டுள்ள சிலரது கதைகள் நமக்கு பேரதிர்ச்சியாக கூட இருக்கலாம்.

வினோதமான முறையில் மரணத்தைத் தழுவிய மனிதர்கள்!

ஆனால் இவை அனைத்தும் உண்மை சம்பவங்கள் தான். அந்த இதயமற்ற மோசமான பெண்களின் கதைகளைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

இவர்கள் பிறப்பில் ஓர் ஆண் என்று சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

கணவனைக் கொன்று குழந்தைகளுக்கு விருந்து வைத்த மனைவி

படத்தில் காட்டப்பட்ட இந்த பெண் தன் கணவனை 37 முறை கத்தியால் குத்தி சிதைத்து, இறைச்சி கொக்கியில் மாட்டி தொங்க விட்டு, பின் கணவனின் தலை மற்றும் இதர பாகங்களை வெட்டி சமைத்து, குழந்தைகளுக்கு கொடுக்க முயற்சித்தவர்.

Image Courtesy

4-5 கணவன்களைக் கொன்ற 76 வயது மூதாட்டி

இந்த மூதாட்டி 4-5 ஆண்களை திருமணம் செய்து, இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்துள்ளார். இது ஒரு முழுமையான நீண்ட விசாரணைக்கு பின்னரே, இவர் குற்றவாளி என்பது கண்டறியப்பட்டது.

Image Courtesy

கணவனை விட முதலை தான் முக்கியம் என்று கூறிய பெண்

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விக்கி லோவிங் என்னும் பெண், செல்லப் பிராணியாக முதலையை வளர்ந்து வந்தார். முதலையின் மீது அளவுகடந்த அன்பு வைத்த இவர், கணவணா முதலையா என்ற கேள்வி வரும் போது, முதலை தான் எனக்கு முக்கியம் என்று கூறி கணவனை விவாகரத்து செய்து, அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியவர்.

Image Courtesy

தன் முகத்தை பார்த்ததால் கணவனை விவாகரத்து செய்த சவுதி பெண்

சவுதி அரேபியாவில் உள்ள பெரும்பாலான பெண்கள், தங்களது கணவனுக்கு கூட முகத்தை காட்டமார்கள். அந்த நிலையில், அங்கு திருமணமாகி 30 வருடம் தன்னுடன் ஒன்றாக வாழ்ந்த தன் கணவன் தான் தூங்கிக் கொண்டிருக்கும் போது முகத்தைப் பார்த்துவிட்டதால், அந்த நொடியே கோபத்துடன் விவாகரத்து கேட்டுப் பெற்றுள்ளார்.

கோபத்தில் கணவனின் ஆணுறுப்பை வெட்டிய மனைவி

கத்யா கரிடோவோனோவா என்னும் பெண், தன் கணவன் தனது நெருங்கிய தோழியுடன் உடலுறவு கொண்டிருப்பதைக் கண்டு கடுங்கோபம் கொண்டு, அங்கிருந்த விளக்கால் தோழியின் தலையை உடைத்து, கணவனின் ஆணுறுப்பை வெட்டி துண்டித்துவிட்டார். நல்ல வேளை அவனது ஆணுறுப்பு மீண்டும் இணைத்து தைக்கப்பட்டது.

சிறுநீரகத்தை திருப்பிக் கேட்ட கணவன்

டானெல் பாடிஸ்டா என்னும் பெண் ரிச்சார்டு பாடிஸ்டாவை திருமணம் செய்து கொண்டார். டானெல் கடுமையான சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு, சிறுநீர மாற்று அறுவை சிகிச்சை செய்யும் அளவில் இருந்தார். அப்போது ரிச்சாட்டு தன் மனைவியின் மீதுள்ள பாசத்தால், தனது ஒரு சிறுநீரகத்தைக் கொடுத்தார். ஆனால் 4 வருடத்திற்கு பின், டானெல் ஏமாற்றுவதை அறிந்த ரிச்சாட்டு, 1.5 மில்லியன் தர வேண்டும் அல்லது தனது சிறுநீரகத்தை திருப்பி தர வேண்டும் என வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Most Cruelest Wives Who Shook The World

Here in this article, we are about to share some of the cases where women who have been really cruel. These are the cases of wives who shook the world.
Story first published: Tuesday, June 28, 2016, 13:27 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter