மோனிகா லெவின்ஸ்கி எனும் இப்பெண், பில் கிளின்டனின் முன்னாள் காதலி மட்டுமல்ல...

பில் கிளிண்டனுடன் வெள்ளை மாளிகையிலேயே தகாத உறவில் இருந்த மோனிகா லெவின்ஸ்கி பற்றிய சில தகவல்கள்.

Subscribe to Boldsky

யாரால் மறக்க முடியும் அந்த செய்தியை. முக்கியமாக உலக அரசியலை சீராக கவனித்து வரும் யாராலும் அந்த செய்தியை மறக்க முடியாது. வெள்ளை மாளிகையில் பணிபுரிந்து வந்த மோனிகா லெவின்ஸ்கியுடன் அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் தகாத உறவில் இருந்தார்.

Monica Lewinsky Is Not Just Ex Girlfriend Of Bill Clinton...

அமெரிக்கா மட்டுமின்றி, பல்வேறு சர்வதேச ஊடகங்களின் அன்றைய தலைப்பு செய்து அது தான். பல நாட்கள் இந்த தலைப்பு தான் பல்வேறு விவாதங்களுக்கு தலைப்பாகவும், கருவாகவும் இருந்தது. இதை சில வருடங்கள் ஃபாலே செய்து செய்தி வழங்கியவர்களும் இருந்தனர்.

இந்த கடுமையான கான்ட்ரவர்ஸிக்கு பிறகு சற்று காணாமல் போயிருந்தார் மோனிகா லெவின்ஸ்கி. அமெரிக்க வெள்ளை மாளிகையை நிலைகுலைய செய்து இவர் யார்?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

இன்டர்ன்ஷிப்!

1995-ல் படிப்பை முடித்த பிறகு இன்டர்ன்ஷிப்-காக வெள்ளை மாளிகை அலுவலகத்தில் சேர்ந்தார் மோனிகா லெவின்ஸ்கி. இன்டர்ன்ஷிப்-காக சேர்ந்த அதே வருடமே ஊதியம் வாங்கும் பணியாளர் பட்டியலில் மோனிகா லெவின்ஸ்கி-க்கு வெள்ளை மாளிகை சட்ட வெளியுறவு அலுவகத்தில் வேலை கிடைத்தது.

வேறு என்ன வேண்டும்?

உலக வல்லரசான அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் வேலை, அதுவும் 22 வயதில். பார்பதற்கு நல்ல தோற்றத்துடன், ஸ்மார்ட்டாகவும், நல்ல கல்வி தகுதியும் கொண்டிருந்தார் மோனிகா லெவின்ஸ்கி. உலகின் மதிப்புமிக்க வேலையை அவர் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிபருடன் காதல்...

வாழ்க்கையை இளமையின் ஆரம்பித்திலேயே நல்ல வேலையுடன் சந்தோசமாக வாழ ஆரம்பித்தார் மோனிகா லெவின்ஸ்கி.

ஆனால், அன்றைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனுடன் காதலில் விழுவார் என அவர் அப்போது எதிர்பார்க்க வில்லை. தனது விக்கிபீடியா பக்கம் ஒருநாள் முழுக்க கான்ட்ரவர்ஸியால் நிறையும் என அவர் கனவிலும் எதிர்பார்த்திருக்க மாட்டார்.

கசப்பான திருப்புமுனை...

அதிபருடன் காதல், அதிபருக்கும் மோனிகா மீத விருப்பம். இதை வெள்ளை மாளிகை பணியாளர்களும் அறிந்தனர்.கான்ட்ரவர்ஸி காட்டுத்தீ போல பரவ ஆரம்பித்தது.

அடுத்த வருடமே மோனிகா வெள்ளை மாளிகையில் இருந்து பென்டகன் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டார். இருவர் மத்தியிலும் உடல் ரீதியான உறவு இருக்கிறது என செய்தி அனைவர் மத்தியிலும் பரவ மோனிகா தன் வேலையை இராஜினாமா செய்தார்.

கிளிண்டனின் பதவிக் காலத்தில், இது ஒரு மோசமான நிகழ்வாக அமைந்தது. இது குறித்து வெளிப்படையாக கிளிண்டனும் அறிக்கை வெளியிட நேர்ந்தது. மோனிகா உலகின் பார்வையில் குணமற்ற நபராக மாறினார்.

பிரபலம் அடைந்தார் மோனிகா!

கடுமையான கான்ட்ரவர்ஸி நிகழ்ந்த போதிலும் கூட, ஊடகங்கள் மோனிகாவை ஒரு பிரபலமாக மாற்றியது. பல டிவி நிகழ்சிகளில் பங்குபெற்றார். பல தொழில்களில் ஈடுபட்டார். எத்தனை நாட்கள் தான் மக்கள் இவரை பற்றிய கான்ட்ரவர்ஸி பேச முடியும். ஒருநாள் அனைத்தையும் விட்டு விலகினார் மோனிகா.

அடங்காமல் அடித்த கான்ட்ரவர்ஸி அலைகள். வருடங்கள் பின்தொடர்ந்து செய்தி கொடுத்து வந்த ஊடகங்கள் என பலவற்றை கடந்த மோனிகா, வேறுவழியின்றி அமைதியாக வாழ துவங்கினார். இவரது குரல் எங்கும் கேட்காமல் இருந்தது.

மீண்டு வந்த மோனிகா...

ஒரு வகையில் நல்ல வாழ்க்கை சிறிய வயதில் கிடைத்து, அதை மிக விரைவில் இழந்து, வாழ்க்கையின் விளிம்பில் நின்றுக் கொண்டிருந்தார் மோனிகா. இதில் கிளிண்டனும் தான் இருந்தார். ஆனால், பாதிக்கப்பட்டது மோனிகா மட்டும் தான்.

வெகுநாட்கள் கழித்து மீண்டும் வந்தார் மோனிகா. தனக்கு நேர்ந்த அதே விஷயத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக போராட, உதவ ஆதரவாளராக வந்தார்.

கொடுமைகளை எதிர்க்க வந்த மோனிகா!

பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை எதிர்க்க ஒரு அமைப்பை உண்டாக்கினார். நேரடியாக, சமூக தளங்கள் மூலம் பல வகையில் இதை விரிவுப்படுத்த தொடங்கினார்.

வாழ்க்கை என்பது முடித்துக் கொள்ள அல்ல. பெரும் சர்ச்சைகளை தாண்டி. மோனிகா இன்று மீண்டு வந்து பெண்களுக்காக உதவி கொண்டிருக்கிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Monica Lewinsky Is Not Just Ex Girlfriend Of Bill Clinton...

Monica Lewinsky Is Not Just Ex Girlfriend Of Bill Clinton...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter