For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மக்கள் சமைக்காமல் பச்சையாக உண்ணும் அருவெறுக்கத்தக்க சில உயிரினங்கள்!

|

அனைவருக்குமே வித்தியாசமான சுவையுடைய உணவுகளை ருசிக்க விருப்பம் இருக்கும். ஆனால் சிலரோ விசித்திரமான உணவுகளை சாப்பிட விரும்புவார்கள். அந்த வகையில் ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் உள்ள மக்கள் சில உயிரினங்களை சமைக்காமல் பச்சையாக சாப்பிடும் வழக்கத்தைக் கொண்டவர்கள்.

இக்கட்டுரையில் நாம் உலகில் மக்கள் சமைக்காமல் பச்சையாக சாப்பிடும் உயிரினங்களைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம். இங்கு பட்டியலிடப்பட்டுள்ள உயிரினங்கள் கொல்லப்படாமல் உயிருடன் அப்படியே சாப்பிடப்படுபவைகளாகும்.

சரி, இப்போது எந்தெந்த உயிரினங்களை பச்சையாக மக்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள் என்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேபி இறால்கள்

பேபி இறால்கள்

படத்தில் காட்டப்பட்ட இந்த உணவில் பேபி இறால்கள் உயிருடன் இருக்கும். மேலும் இந்த உணவானது பேபி இறால்கள் இறப்பதற்குள் வேகமாக சமைக்கப்பட்ட பரிமாறப்படும்.

கூட்டுப்புழுக்கள்

கூட்டுப்புழுக்கள்

காசு மர்சு என்பது என்பது இத்தாலியில் மிகவும் பிரபலமான ஓர் சீஸ். இந்த சீஸானது கூட்டுப்புழுக்கள் கொண்டு நொதிக்க வைக்கப்படும். இந்த சீஸ் மென்மையாகவும், சுவையாகவும் இருப்பதற்கு காரணம் அந்த கூட்டுப்புழுக்கள் தான். இத்தாலிய மக்கள் இந்த சீஸை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

பாம்பு

பாம்பு

பாம்புகள் சாப்பிடும் மக்களைப் பற்றி அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். பொதுவாக பாம்புகளை வேக வைத்து தான் சாப்பிடுவார்கள். ஆனால் இந்தியாவைச் சேர்ந்த சுடாரி நாயக் என்பவர், உயிருடன் இருக்கும் பாம்பை கையில் எடுத்து பச்சையாக அப்படியே சாப்பிடுவாராம்.

Image Courtesy

பழ வெளவால்கள்

பழ வெளவால்கள்

இந்த பழ வௌவால்கள் சிக்கன் சுவையைக் கொண்டதாக ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் பழ வௌவால்களில் கொழுப்புக்கள் குறைவாகவும், புரோட்டீன்கள் அதிகமாகவும் உள்ளதாம். இந்த பழ வௌவால்களை சூப் அல்லது க்ரில் வடிவிலோ மற்றும் வேறு பலவாறு சமைத்தும் சாப்பிட்டால் நன்றாக இருக்குமாம்.

Image Courtesy

தவளை

தவளை

இந்த விசித்திரமான உணவானது சீனா, வியட்நாம் மற்றும் ஜப்பான் போன்ற பகுதிகளில் வாழும் மக்களால் விரும்பி உண்ணப்படும் ஓர் உணவுப் பொருளாகும். இங்குள்ள மக்கள் சாப்பிட பயன்படுத்தும் தவளையானது ஸ்பெஷலாக வளர்க்கப்படுமாம்.

விலாங்கு மீன்

விலாங்கு மீன்

பிரபல செஃப்பான ரேமண்ட் பிளாங்க், ஜப்பானில் இருந்த போது உயிருடன் உள்ள விலாங்கு மீனை உட்கொண்டுள்ளாராம். அதுவும் இந்த விலங்கு மீனின் மேல் சிறிது வினிகர் மற்றும் உப்பு சேர்த்து உட்கொண்டால் அற்புதமாக இருக்கும் என்று கூறுகிறார்.

கரப்பான் பூச்சி

கரப்பான் பூச்சி

32 வயதுடைய எட்வார்டு என்பவர் தென் ப்ளோரிடாவில் நடந்த போட்டியில் பங்கு கொண்டு வெற்றி பெற்ற பின் இறந்தவர். இவர் பங்கு கொண்ட போட்டி என்னவென்று தெரியுமா? உயிருடன் இருக்கும் கரப்பான் பூச்சியை உட்கொள்வது. இப்போட்டியில் இவர் 35 உயிருள்ள கரப்பான் பூச்சியை உட்கொண்டுள்ளார்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

List Of Animals That Are Eaten Alive

Here are a list of animals that people eat alive. These are the poor animals which people actually relish and enjoy their meal. Read on to know more..
Desktop Bottom Promotion