For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் பற்றி பலரும் அறியாத தகவல்கள்!!

|

சைலேந்திரபாபு ஐ.பி.எஸ், இவரது பெயரை கேட்டாலே தப்புதண்டா செய்பவர்களது முதுகுத்தண்டு உடைந்துப் போகும். தற்போதைய தமிழக காவல் துறையில் பணிபுரியும் மற்றும் பணிபுரிய ஆர்வமாக காத்திருக்கும், முயற்சிக்கும் நபர்களுக்கு ஓர் முன்மாதிரியாக திகழ்பவர் சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்.

சகாயம் ஐ.ஏ.எஸ் பற்றி பலரும் அறியாத தகவல்கள்!!

பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று சிறப்புரையாற்றி வளரும் இளைஞர்கள் மத்தியில் நல்ல விதையை விதைக்க இவர் எப்போதும் தவறியதில்லை. உடற்திறன் மீது இவருக்கு அலாதி பிரியம் உண்டு. மேலும், கல்வி, புத்தகம் எழுதுவது போன்றவை இவரது அன்றாட வேலை மற்றும் செயல்பாடுகளில் ஒன்றிப்போய் இருப்பவை ஆகும்.

இனி, சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் பற்றி பலரும் அறியாத தகவல்கள் குறித்து பார்க்கலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிறப்பு மற்றும் படிப்பு

பிறப்பு மற்றும் படிப்பு

1962-ம் ஆண்டு ஜூன் மாதம் 5ம் நாள் பிறந்தார் சைலேந்திரபாபு. கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை எனும் பகுதியில் தனது பள்ளிப்படிப்பை முடித்த சைலேந்திரபாபு, மதுரையில் உள்ள விவசாயப் பல்கலைக்கழகத்தில் விவசாயம் மற்றும் அறிவியல் இளங்கலை பட்டம் பெற்றார். பிறகு கோவையில் உள்ள தமிழக வேளாண் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றார். மேலும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொதுச்சட்டம் இளங்கலை படமும், மக்கள் தொகை கல்வியில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளார் சைலேந்திரபாபு.

முனைவர் பட்டம்

முனைவர் பட்டம்

இவரது "Missing Children" ஆய்வறிக்கைகாக சென்னை பல்கலைகழகம் முனைவர் பட்டம் வழங்கியது. கடந்த 2013-ம் ஆண்டு மனிதவள வணிக நிர்வாக படிப்பில் முதுகலை மட்டம் பெற்றார். கல்வி மீதான தாகம் இவருக்கு அடங்காத ஒன்றாகும்.

போலீஸ் மீது ஆர்வம்

போலீஸ் மீது ஆர்வம்

கல்லூரி காலத்தில் அனைவரையும் போல தானும் கடைசி பெஞ்சில் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்த மாணவன் தான் என்றும், ஒரு நாள் தனது கல்லூரியில் சிறப்புரையாற்றிய ஒருவரின் பேச்சின் மூலமாகவே தனக்கான பாதையை வகுத்துக் கொண்டு போலீஸ் வேலையில் சேர வேண்டும் என்று முனைந்ததாக சைலேந்திரபாபு பல இடங்களில் குறிப்பிட்டு பேசியுள்ளார்.

இந்திய காவல்பணி அதிகாரி

இந்திய காவல்பணி அதிகாரி

ஹைதராபாத் தேசிய காவல்துறை அகாடமியில் பயிற்சி பெற்று கடந்த 1987-ம் ஆண்டு சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் அவர்கள், இந்திய காவல்துறை அதிகாரியாக பணி நியமனம் செய்யப்பட்டார்.

பதவி உயர்வுகள்

பதவி உயர்வுகள்

சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் அவர்கள் பெற்ற பதவி உயர்வுகள்....

போலீஸ் கூடுதல் இயக்குநர் ஜெனரல் (ADGP) - ஏப்ரல் 23, 2012

இன்ஸ்பெக்டர் ஜெனரல் (IG) - டிசம்பர் 20, 2006

துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (DIG) - மார்ச் 2001

காவல்துறை கண்காணிப்பாளர் (SP) - ஜனவரி 1992

கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் (ASP) - அக்டோபர் 1989

விருதுகள் மற்றும் கௌரவங்கள்

விருதுகள் மற்றும் கௌரவங்கள்

முதலமைச்சர் பதக்கம் (2000) - சிறந்த வேலைப்பாடு - கடலூரில் வகுப்புவாத கலவரங்கள் தடுப்பு.

வீரப்பதக்கம் - நக்சலைட் என்கவுண்டர் (1993) மற்றும் யானை தந்தம் வெட்டியவர்கள் கைது (2001)

பிரதமர் பதக்கம் (2001) - 1997ம் ஆண்டு சிவகங்கையில் ஏரியில் கவிழ்ந்த பேருந்தில் இருந்து 18 நபர்களை உயிருடன் காப்பாற்றியதற்காக.

ஜானதிபதி விருது (2005) - புகழத்தக்க சேவை செய்தமைக்காக.

சிறந்த முன்னாள் மாணவர் விருது - தமிழக வேளாண் பல்கலைக்கழகம், 15 வருடங்களாக அரசு சேவை தேர்வுக்காக மாணவர்களுக்கு ஊக்கமளித்ததற்காக வழங்கப்பட்ட விருது.

ஜனாதிபதி போலீஸ் விருது(2013) - சிறப்புமிகு சேவைக்காக

புத்தகங்கள்

புத்தகங்கள்

படிப்பு மற்றுமின்றி எழுத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர் சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் அவர்கள். ஆங்கிலம் மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் இவர் நூல்கள் எழுதியுள்ளார்....

You Too Can Become an I.P.S. Officer

Boys & Girls - Be Ambitious

Principles of success in interview

உடலினை உறுதி செய்

அமெரிக்காவில் 24 நாட்கள்

நீங்களும் ஐ பி எஸ் அதிகாரி ஆகலாம்

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

ஐம்பது வயதை கடந்த போதிலும் கூட தன்னுடன் பணிபுரியும் காவல்துறை அதிகாரிகளுக்கு ஓர் முன்மாதிரியாக திகழ்கிறார் என்றால் அதற்கு இவரது உடற்தகுதி தான் காரணம். இன்றும் காலை ஐந்து மணிக்கு முன்னரே எழுந்து உடற்பயிற்சி, ஓட்டப்பயிற்சி செய்யும் பழக்கம் கொண்டவர். ஆரோக்கிய உணவை மட்டுமே உண்ணும் பழக்கத்தை கடைபிடிக்கும் குணமுடையவர் சைலேந்திரபாபு.

விளையாட்டு ஆர்வம்

விளையாட்டு ஆர்வம்

விளையாட்டிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர் சைலேந்திரபாபு. நீச்சல், தடகளம், துப்பாகிச்சுடுதல் , சைகிளிங் போன்றவற்றில் தீவிர பங்களிப்பால் நீச்சலுக்காகத் தேசிய போலீஸ் அகாடமி மூலம் "RD சிங்" கோப்பையை பெற்றுள்ளார்.

ஆசிய முதுநிலை மெய்வல்லுனர் போட்டிகள்

ஆசிய முதுநிலை மெய்வல்லுனர் போட்டிகள்

2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாங்காங்கில் நடைபெற்ற ஆசிய முதுநிலை மெய்வல்லுனர் போட்டிகள் ( Asian Masters Athletic Championships) நூறு மீட்டார் ஓட்டப்பந்தயத்தில் கலந்துக் கொண்டார். மேலும் சென்னை, கோவையில் நடைபெற்ற ௧ பத்தாயிரம் மீட்டார் மராத்தான் போட்டிகளிலும் பங்கெடுத்துள்ளார் சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் அவர்கள்.

ஓர் சிறந்த முன்மாதிரி

ஓர் சிறந்த முன்மாதிரி

காவல் துறையில் பணியாற்ற விரும்பும் நபர்கள் மட்டுமில்லாமல், எழுச்சி அடைய விரும்பும், வாழ்வில் வெற்றிப்பெற விரும்பும் இளைஞர்களுக்கும் இவர் ஒரு சிறந்த முன்மாதிரியாக திகழ்கிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Lesser Known Facts About Sylendra Babu IPS

Here we have share some lesser known facts about Sylendra Babu IPS, read here in tamil.
Desktop Bottom Promotion