For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாக்-அவுட் நாயகன் முகமது அலி பற்றி பலரும் அறியாத உண்மைகள்!

|

முகமதி அலி, ஓய்வுபெற்ற முன்னாள் அமெரிக்க குத்துச்சண்டை வீரர். லைட் ஹெவிவெயிட் பிரிவில் அசைக்க முடியாத வீரராக திகழ்ந்தவர். சிலரது மறைவு அதற்கு மாற்று இல்லாமல் போகும். சிலருக்கு இணையாக ஓர் துறையில் மீண்டும் வேறு ஒருவரால் ஜொலிக்க முடியுமா என்பது சற்று யோசிக்க வைக்கும்.

உலகை வெளுத்து வாங்கிய டாப் 10 கருப்பின மக்கள்!!!

பாப் இசை உலகிற்கு ஓர் மைக்கல் ஜாக்சன், கிரிக்கெட் உலகிற்கு ஓர் டான் பிராட்மேன் என சிலரது மறைவு ஓர் நிரப்ப முடியாத இடத்தை விட்டு செல்லும். அது போல தான் முகமது அலியின் மரணமும். இவரது இடத்தை குத்துச்சண்டை உலகில் வேறு யாராலும் நிரப்ப முடியாத.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உண்மை # 1

உண்மை # 1

முகமது அழியில் உண்மை பெயர், காசியஸ் மார்செல்லாஸ் க்ளே ஜூனியர். இவர் இஸ்லாமிய தேசத்தில் இணைந்த பிறகு 1964-ம் ஆண்டு முகமது அலி என தன் பெயரை மாற்றிக் கொண்டார்.

உண்மை # 2

உண்மை # 2

தி கிரேட்டஸ்ட், தி சேம்ப், தி லூயிஸ்வில்லே, அலி எனும் பெயர்கள் கொண்டு செல்லமாக அழைக்கப்பட்டு வந்தார். முகமது அலி நான்கு முறை திருமணம் செய்துக் கொண்டார். இவருக்கு ஏழு பெண்கள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.

உண்மை # 3

உண்மை # 3

முகமது அலி, போட்டிக்கு முந்தைய பேட்டி அளிப்பதன் மூலம் மிகவும் பிரபலமானவர். ஏறத்தாழ வெறித்தனமாக பேசுவார், அதிலேயே எதிர் போட்டியாளருக்கு அச்சம் தொற்றிக் கொள்ளும். மேலும், தான் எப்படி வெற்றி பெறுவேன், அடிப்பேன் என்பதை எல்லாம் அணுவணுவாக பேட்டியில் விவரித்து கூறுவார்.

உண்மை # 4

உண்மை # 4

ரோமில் 1960-ம் நடந்த சம்மர் ஒலிம்பிக்ஸ்-ல் முகமது அலி லைட் ஹெவிவெய்ட் பிரிவில் தங்க பதக்கத்தை வென்றார். இவரது சுயசரிதையில், இவர் வென்ற தங்க பதக்கத்தை ஓஹியோ ஆற்றில் தூக்கி எறிந்துவிட்டதாக கூறியிருந்தார். ஓர் உணவு விடுதியில் வெள்ளையர்களுக்கு மட்டும் தான் சேவை என்ற பலகையை பார்த்து இதை செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உண்மை # 5

உண்மை # 5

முகமது அலிக்கு மத்திய நரம்பு மண்டலத்தை தாக்கி மனித உடலின் செயல்பாட்டை முடக்கும். பார்கின்சன் நோய் இருந்தது. குத்துச்சண்டையின் போது பலமுறை தலையில் அடிப்பட்டதால் மூளையில் இரத்தக்கசிவு உண்டானதால், முகமதி அலிக்கு பக்கவாதம் ஏற்பட்டது.

உண்மை # 6

உண்மை # 6

1967-ஆம் ஆண்டு தன் மத நம்பிக்கையின் அடிப்படை காரணமாக அமெரிக்க இராணுவத்தில் பணிபுரிய மறுத்தார். மேலும், வியட்நாம் போருக்கு எதிர்ப்பு தெரிவித்தார் முகமதுஅலி. இதனால் அவர் கைது செய்யப்பட்ட்டு, அவரது குத்துச்சண்டை பட்டங்கள் பறிக்கப்பட்டன. மேலும், குத்துச்சண்டை போட்டிகளில் பங்குபெறும் உரிமமும் தற்காலிகமாக நீக்கப்பட்டது.

உண்மை # 7

உண்மை # 7

ஆயினும், முகமது அலி சிறையில் அடைக்கப்படவில்லை. இவரது மேல்முறையீடு யு.எஸ். உச்ச நீதிமன்றத்தில் வெற்றி பெரும் வரை நான்கு ஆண்டுகள் அலி குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மை # 8

உண்மை # 8

முகமது அலி பங்குபெற்ற 61 குத்துச்சண்டை போட்டிகளில் 56 வெற்றிகள் பெற்றுள்ளார். இதில் 37 போட்டிகள் நாக்-அவுட் முறையில் வென்றதாகும். குத்துச்சண்டை உலகின் நாக்-அவுட் மன்னனாக திகழ்ந்தார் முகமது அலி.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Lesser Known Facts About Muhammad Ali

Lesser Known Facts About Muhammad Ali , read here in tamil.
Desktop Bottom Promotion