இந்தியாவையே விற்ற பலே கில்லாடி நட்வர்லால் பற்றி தெரியுமா?

Subscribe to Boldsky

நட்வர்லால் பீகாரில் இருக்கும் சிவான் எனும் மாவட்டத்தில் உள்ள பாங்ரா எனும் கிராமத்தில் பிறந்தவர் தான் இந்த உலகமகா தில்லாலங்கடி நட்வர்லால். இந்தியாவின் புகழ்பெற்ற தாஜ்மஹால், நாடாளுமன்றம், ரெட் ஃபோர்ட் என அனைத்தையும் விற்று பணம் பார்த்த கில்லாடி.

931 பேரை கொன்று குவித்து உலகின் கொடூரமான சீரியல் கில்லராக திகழந்த இந்தியன்!

இவரது குடும்பம் வாழ்ந்து வந்த வீட்டை பிரிட்டிஷார் இடித்துவிட்டனர் என்றும். ஆயினும் அவ்விடம் இவரது குடும்பத்தின் பேரில் தான் இருந்தது எனவும் சில கூற்றுகள் மூலம் அறியப்படுகிறது. விடுதலைக்கு முன்பே வழக்கறிஞர் படிப்பு முடித்தவர் இந்த நட்வர்லால்.

யார் இந்த செங்கிஸ்கான்? உலகை ஆண்ட மிகப்பெரிய பேரரசன்!!!

ஆனால், தன்னுள் இருந்த தனித்தன்மை வாய்ந்த திறனை பயன்படுத்தி அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என ஏமாற்றுக்காரனாக மாறினார்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

இயற்பெயர்

மித்திலேஷ் குமார் ஸ்ரீவஸ்தவா என்பது தான் நட்வர்லாலின் இயற்பெயர். ஆனால், இவரை நட்வர்லால் என்றால் தான் போலிஸ் முதல் நீதிமன்றம் வரை அனைவருக்கும் தெரியும்.

வழக்கறிஞர்

வழக்கறிஞராக இருந்து ஏமாற்றுக் காரனாக மாறியவர் தான் இந்த உலகமகா தில்லாலங்கடி நட்வர்லால். தன்னிடம் மற்றவர் கையொப்பங்களை தத்ரூபமாக இடும் திறன் இருப்பதை கண்டு வியந்தார் நட்வர்லால்.

முதல் திருட்டு

முதல் முறையாக இந்த திருட்டுத்தன திறனை வைத்து திருட்டு கோப்புகள் தயாரித்து ஆயிரம் ரூபாய் திருடினார் நட்வர்லால்.

மாறுவேடம்

பல மாறுவேடங்கள் இட்டும் ஏமாற்றி இருக்கிறார் இந்த மகா கேடி நட்வர்லால். முன்னாள் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் முதல் திருபாய் அம்பானியின் கையொப்பம் வரை நட்வர்லாலுக்கு அத்துப்படியாக இருந்தது.

தாஜ்மஹால்

அரசு அலுவலகத்தின் அச்சுகள் தயாரித்து சுற்றுலாப் பயணிகளிடம் மூன்று முறை இந்தியாவின் புகழ்பெற்ற நினைவுச் சின்னமான தாஜ் மஹாலையே  விற்றுள்ளார் நட்வர்லால்.

நாடாளுமன்றம்

நட்வர்லால் ஓர்முறை இந்திய நாடாளுமன்றத்தையே சுற்றுலா பயணிக்கு விற்றுள்ளார். இதில் வியப்பு என்னவெனில், நாடாளுமன்றத்துடன் சேர்த்து அதன் உறுப்பினர்களையும் இவர் விற்றுள்ளார்.

113 வருட ஜெயில்

நட்வர்லால் செய்த குற்றங்களுக்காக 113 வருட சிறைக்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், அவ்வபோது தப்பித்தும் விடுவார். இவர் மொத்தமாக 20 வருடங்கள் தான் சிறையில் கழித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

84 வயதில்

கடைசியாக இவர் சிறையில் இருந்து தப்பித்தபோது நத்வார்லாலின் வயது 84.

இறப்பிலும் பித்தலாட்டம்

தனது இறப்பிலும் பித்தலாட்டம் செய்திருக்கிறார் நட்வர்லால். கடந்த 1996-ம் ஆண்டு தான் இறந்துவிட்டதாக தன் சகோதரன் மூலம் செய்திகள் பரப்பினர். ஆனால், கடந்த 2009-ம் ஆண்டு வரை அதாவது 97 வயது வரை நட்வர்லால் நலமுடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராபின் ஹூட்

நட்வர்லாலின் கிராமத்திற்கு இவர் ஒரு ராபின் ஹூட். இவரது கிராமத்தில் தான் இவர் நிறைய நாட்கள் வாழ்ந்தார். இவரது கிராம மக்களுக்கு நிறைய உதவிகளும் செய்துள்ளார்.

இன்றும் விரும்பும் கிராமம்

இன்றும் இவரது கிராம மக்கள் பலர் இவர் மீது நல்ல மதிப்பு வைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் வாழ்ந்த வீட்டு பகுதியில் சிலை வைக்க வேண்டும் என்று கூட கிராமத்தினர் முயற்சித்தனர்.

பல திரைப்படங்கள்

நட்வர்லால்-ன் லீலைகளை கருவாக கொண்டு நிறைய இந்தி திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. 1979-ம் ஆண்டு அமிதாப் பச்சன் நடித்த மிஸ்டர் நட்வர்லால் எனும் திரைப்படமும் நட்வர்லாலின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Interesting Facts About Mr Natwarlal Who Sold The Taj Mahal Thrice

Interesting Facts About Mr Natwarlal Who Sold The Taj Mahal Thrice, read here in tamil.
Story first published: Friday, March 18, 2016, 13:21 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter