For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பேய் நகரங்கள் என்றழைக்கப்படும் இந்தியாவின் திகிலான இடங்கள்!!

|

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் மன்னராட்சி நடந்து வந்த இடங்களும், சில போர்களின் காரணமாக அழிக்கப்பட்ட கோட்டைகளும் இன்று இந்தியாவின் திகிலான இடங்களாக திகழ்கின்றன. மேலும், இயற்கை சீற்றத்தில் அழிவை கண்ட சில இந்திய பகுதிகளும் கூட பேய்கள் இருக்கும் பகுதிகளாக கூறப்படுகின்றன.

இவற்றுக்கு முக்கிய காரணமாக இருப்பது அழிவை கண்ட அவற்றின் தோற்றங்களும், அவற்றின் பின்னணில் இருக்கும் அரச வரலாறுகளும் தான். மேலும் பல காலமாக தொடர்ந்து பரப்பப்படும் புரளிகளும் இவ்விடங்களை திகில் நிறைந்த இடங்களாகவும், பேய்கள் உலாவும் இடங்களாகவும் மாற்றிவிட்டன...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தனுஷ்கோடி

தனுஷ்கோடி

பாம்பன் தீவில் இருக்கும் தனுஷ்கோடி, இன்று வரை மக்கள் மிகவும் ஆர்வமாக சென்று பார்க்க விரும்பும் இடம். 1964-ம் ஆண்டு ஓர் புயலில் சிக்கி சின்னாபின்னமாகிப் போன இடம். மொத்தமாக அழிவை சந்தித்தது தனிஷ்கோடி. தனுஷ்கோடியில் இருக்கும் பல பகுதிகள் பேய்கள் இருக்கின்றன என்ற அச்சம் இருப்பதாக அங்கு சென்றுவரும் சுற்றுலா பயணிகளே கூறியுள்ளனர்.

பதேபூர் சிக்ரி

பதேபூர் சிக்ரி

முகலாய சாம்ராஜ்யத்தின் தலைநகரமாக திகழ்ந்த இடம் பதேபூர் சிக்ரி. இந்தியாவில் இருக்கும் திகிலான இடங்களில் இதுவும் ஒன்றென கூறப்படுகிறது.

மண்டு

மண்டு

மத்தியபிரதேசத்தில் இருக்கும் ஓர் கோட்டை நகரம் தான் இந்த மண்டு. கி.மு 555 ஆம் ஆண்டுகள் முதலே இங்கு மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் இருக்கின்றன. இப்போது பெரியளவில் இங்கு யாரும் சென்றுவருவதில்லை. மேலும் இதன் பழமையான தோற்றமும், கோட்டை உருவங்களும் திகிலான இடம் என்ற அடைமொழியை தந்துவிட்டது.

பழைய கோவா

பழைய கோவா

முன்பு இதுதான் கோவாவின் முக்கிய நகரப்பகுதியாக இருந்தது. 17-ம் நூற்றாண்டிலேயே இது பெருமளவில் கைவிடப்பட்ட பகுதியாக மாறிவிட்டது. இதற்கு காரணம் இங்கு பரவிய மலேரியா மற்றும் காலரா போன்ற நோய்கள் தான் என்று கூறப்படுகிறது.

ராஸ் தீவு

ராஸ் தீவு

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் ஆளுமை பகுதியாக இருந்து வந்தது இந்த ராஸ் தீவு. 1941-ம் ஆண்டு ஏற்பட்ட பெரிய நிலநடுக்கம் இந்த தீவை அழித்துவிட்டது. இப்போது திகில் நிறைந்த பகுதிகளில் இதுவும் ஒன்றாக திகழ்கிறது.

விஜயநகரா

விஜயநகரா

1500-ம் ஆண்டுகளில் உலகின் இரண்டாவது பெரிய நகரமாக திகழ்ந்தது இந்த விஜயநகரா. ஏறத்தாழ 5,00,00 கும் மேலான குடிகள் இங்கு இருந்ததாக கூறப்படுகிறது. முஸ்லிம் படைகள் இவ்விடத்தை ஆக்கிரமித்து 1565-ம் ஆண்டு அழித்துவிட்டன. அப்போதிலிருந்து இந்த இடம் தனித்துவிடப்பட்ட பகுதியாக மாறிவிட்டது. இதுவும் ஓர் உலக கலாச்சார இடமாக தான் திகழ்கிறது.

லக்பத்

லக்பத்

சிந்து நதிக்கரையில் இருந்த கட்ச் சிற்றோடை நுழைவில் ஓர் பரபரக்கும் துறைமுக பகுதியாக இருந்தது லக்பத்.1819-ல் ஏற்பட்ட ஓர் பூகம்பம் இந்த பகுதி மட்டும் 7 கி.மீ சுற்றுவட்டார பகுதிகளையும் முற்றிலுமாக அழித்துவிட்டது.

பங்கார் கோட்டை (Bhangarh Fort)

பங்கார் கோட்டை (Bhangarh Fort)

ராஜஸ்தானின் சவாய் மாதோ சிங் 17-ம் நூற்றாண்டில் கட்டிய கோட்டை தான் பங்கார் கோட்டை. இது இப்போது மக்கள் வாழாத கைவிடப்பட்ட பகுதியாக திகழ்கிறது. இந்தியாவில் அழியும் நிலையில் உள்ள பல கோட்டைகள் சிலரால் திகிலான இடங்கள் என்றும் பேய்கள் இருக்கும் பகுதிகள் என்றும் பரப்பப்படுகின்றன. பெரும்பாலும் இதற்கான காரணமாக இருப்பவை, அவைகளின் தோற்றங்களும், அரச வரலாறுகளும் தான்.

குல்தாரா

குல்தாரா

ராஜஸ்தானில் இருக்கும் ஜெய்சால்மர் நகரின் அருகாமையில் இருக்கும் குல்தாரா எனும் பகுதியும் இந்தியாவின் திகலான இடங்களில் ஒன்றாக திகழ்கிறது.

பிரபல்காத்

பிரபல்காத்

மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் மாத்தேரான் எனும் பகுதின் அருகாமையில் இருக்கும் ஓர் மலைக் கோட்டை பகுதி இந்த பிரபல்காத். கைவிடப்பட்ட இந்த பகுதிக்கு செல்வதும் கடினம் மேலும் இங்கு நீர் பற்றாக்குறையும் அதிகம்.

மத் கோட்டை

மத் கோட்டை

மும்பைக்கு அருகாமையில் இருக்கும் ஓர் சிறிய பகுதி இந்த மத் கோட்டை. இதன் முக்கியத்துவத்தின் காரணமாகவே இந்த பகுதி உபயோகமின்றி இருக்கிறது என கூறப்படுகிறது.

கோல்கொண்டா கோட்டை

கோல்கொண்டா கோட்டை

ஹைதராபாத் குதுப் ஷாஹி வம்சத்தின் அரியணையாக இருந்த இடம் கோல்கொண்டா கோட்டை. முகலாய பேரரசர் அவுரங்கசீப் இதை வெற்றிக் கொண்டு அழித்துவிட்டார். இப்போது இது இந்தியாவின் திகிலான இடங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ghost Towns In India

There are some haunted places in India, which people thinks as ghost towns of our country, take a look.
Story first published: Saturday, January 30, 2016, 12:39 [IST]
Desktop Bottom Promotion