For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லியோனார்டோ டா வின்சி பற்றி பலரும் அறியாத உண்மைகள்!

|

லியொனார்டோ டா வின்சி, உலக புகழ்பெற்ற ஓவியர். இவர் வெறும் ஓவியர் மட்டுமல்ல, இத்தாலிய மறுமலர்ச்சிக் கட்டிடக் கலைஞர், கண்டுப்பிடிப்பாளர், பொறியியலாளர், சிற்பி ஆவார். மேலும், இவர் ஒருசில மெஷின்கள், பறக்கும் கார் போன்றவற்றை பற்றியும் எழுதி வைத்து சென்றுள்ளார்.

ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கிய கொடூர சம்பவத்திற்கு வித்திட்ட ஹிட்லர் பற்றிய அரிய விஷயங்கள்!

ஒரு பல்துறை மேதையாக திகழ்ந்தவர் லியோனார்டோ டா வின்சி. ஓவியத்தில் பெரும் புகழ் பெற்றிருந்தார். குறிப்பாக இவரது, "கடைசி விருந்து" (The Last Supper), "மோனா லிசா" (Mona Lisa) போன்ற ஒவியங்கள் சிறப்பான ஓவியங்கள் என்று பெயர் பெற்று உலகப் புகழ் பெற்றவை ஆகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உண்மை #1

உண்மை #1

வானம் ஏன் நீல நிறத்தில் இருக்கிறது என முதன் முதலில் விளக்கம் அளித்தவர் லியோனார்டோ டா வின்சி என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மை #2

உண்மை #2

ஒரே நேரத்தில் ஓர் கையால் எழுதவும், மறுக்கையால் வரையவும் திறன் கொண்ட நபர் லியோனார்டோ டா வின்சி.

உண்மை #3

உண்மை #3

காண்டாக்ட் லென்ஸ் குறித்து முதன் முதலில் முன்மொழிந்தவர் லியோனார்டோ டா வின்சி. இவர் இதைப்பற்றி 1508-ம் ஆண்டே கூறிவிட்டாராம்.

உண்மை #4

உண்மை #4

பில் கேட்ஸ் லியோனார்டோ டா வின்சியின் கோடக்ஸ் லீசெஸ்டரை 30 மில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்கினார். இதன் சில பக்கங்களை விண்டோஸ் 95-ன் க்ரீன் சேவராகவும் பயன்படுத்தினார்.

உண்மை #5

உண்மை #5

லியனார்டோ டிகாப்ரியோவின் பெயரில் லியனார்டோ எனும் முதல் பெயர் வர காரணம். அவரது அம்மா லியனார்டோ டா வின்சியின் படத்திற்கு முன் நின்றுக் கொண்டிருக்கும் போது தான் நடிகர் லியனார்டோ டிகாப்ரியோ முதன் முதலில் வயிற்றில் இருக்கும் போது உதைத்தார் என்பது தான்.

உண்மை #6

உண்மை #6

லியோனார்டோ டா வின்சி வரைந்த புகழ்பெற்ற மோனாலிசா படம், 83% மகிழ்ச்சியாகவும், 9% வெறுப்படைந்த நிலையிலும், 2% அச்சம் மற்றும் 2% கோபத்தை வெளிப்படுத்தும் நிலையில் இருக்கிறது என ஓர் மென்பொருள் உதவி கொண்டு அறியப்பட்டது.

உண்மை #7

உண்மை #7

லியோனார்டோ டா வின்சி வீட்டிலேயே படித்தவர். இவர் கிரீக் மற்றும் லத்தீன் மொழிகளில் போதியளவு அறிவுகூர்மை இல்லாதவர் ஆவார்.

உண்மை #8

உண்மை #8

கூண்டில் அடைக்கப்பட்ட விலங்குகளை வாங்கும் குணம் படைத்தவர் லியோனார்டோ டா வின்சி. இவர் இவற்றை வாங்கி விடுதலை அளித்து, சுதந்திரமாக உலாவ விடுவார்.

உண்மை #9

உண்மை #9

ஒருமுறை குதபுணர்ச்சி வைத்துக் கொண்ட வழக்கில் லியோனார்டோ டா வின்சி கைது செய்யப்பட்டார். ஆனால், போதிய ஆதாரம் இல்லையென வழக்கை டிஸ்மிஸ் செய்துவிட்டனர்.

உண்மை #10

உண்மை #10

லியோனார்டோ டா வின்சி வரைந்த மோனாலிசா புகைப்படம் அது 1911-ம் ஆண்டு திருடுபோன பிறகு தான் மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்தது என்ற கூற்றும் இருக்கிறது. மோனாலிசா படத்தில், அவரது வலது கண்ணில் தனது இனிஷியலை கையொப்பம் இட்டிருப்பார் லியோனார்டோ டா வின்சி.

உண்மை #11

உண்மை #11

உலக புகழ்பெற்ற ஓவியராக திகழும் லியோனார்டோ டா வின்சி வரைந்த படங்கள் என வெறும் 15 மட்டும் தான் இப்போது உலகில் நிலைபெற்று இருக்கின்றன. மற்றவை என்ன ஆயின என யாருக்கும் தெரியாது.

உண்மை #12

உண்மை #12

கடந்த 2003-ம் ஆண்டு லியோனார்டோ டா வின்சி எழுதி வைத்திருந்த சில மெஷின்கள் பற்றி ஆய்வுகள் செய்யப்பட்டன. அந்த ஆய்வில், சில மெஷின்கள் வெற்றிகரமாக இயங்கின என்றும், பலவன சாத்தியமற்றதாக இருந்தன என கூறப்பட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Facts about Leonardo Da Vinci

Lesser Known Facts about Leonardo Da Vinci, read here in tamil.
Desktop Bottom Promotion