யார் இந்த செங்கிஸ்கான்? உலகை ஆண்ட மிகப்பெரிய பேரரசன்!!!

Subscribe to Boldsky

செங்கிஸ் கான் மங்கோலியப் பேரரசைத் அமைத்த மங்கோலிய பேரரசர். 1206-ல் மங்கோலிய துர்கிய இனக்குழுக்களை இணைத்து மங்கோலியப் பேரரசை இவர் கட்டமைத்தார். இவர் சிறப்பாக ராணுவத்தை அணிவகுக்கச் செய்வதில் உலகளவில் மிகையாக பாராட்டப்பட்டவர்.

ஆயிரம் அலெக்சாண்டருக்கு சமமான இராஜேந்திர சோழனைப் பற்றிய அரியக் குறிப்புகள்!!!

உலக வரலாற்றின் மிகவும் குறிப்பிடத்தக்க இராணுவத் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார் செங்கிஸ்கான். உலகை ஆண்ட பெரும் சாம்ராஜ்யத்தில் செங்கிஸ்கானுடையதும் ஒன்று. எண்ணற்ற மனைவிகளும், மக்கள் செல்வமும் கொண்டவன் செங்கிஸ்கான்.

சோழ பேரரசின் வீழ்ச்சியை பற்றிய வரலாற்று தகவல்கள்!!

இனி, செங்கிஸ்கான் பிறப்பிலிருந்து, இறப்பு வரை மேற்கொண்ட வரலாற்று பயணத்தை பற்றி காண்போம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

பிறப்பு

செங்கிஸ்கான் டெல்லுங் போல்டாக் எனும் இடத்தில் 1162-ம் ஆண்டு பிறந்தவன். தனது 65வது வயதில் இவன் மரணமடைந்தான். பிறக்கும் போதே செங்கிஸ்கான்-க்கு இரத்த கட்டி இருந்ததாக கூறப்படுகிறது. உலகின் மாபெரும் சாம்ராஜ்யங்களில் செங்கிஸ்கானுடையதும் ஒன்றாகும்.

உடல் அமைப்பு

செங்கிஸ்கான் மிக உயரமானவன், நீளமான தாடி வைத்திருந்தான், சிவப்பு நிற முடியும், பச்சை கருவிழிகளும் கொண்டிருந்தான். ஐரோப்பிய மற்றும் ஆசியாவின் கலப்பு தோற்றம் கொண்டிருந்தான் செங்கிஸ்கான்.

மங்கோலிய பேரரசு

மத்திய ஆசிய இடமாக இருந்த சீன மற்றும் ரஷ்யா-விற்கு மத்தியில் இருந்த நிலப்பரப்பை அங்கிருந்த மலைவாழ் இனத்தினரின் உதவியோடு கைப்பற்றி. மங்கோலிய பேரரசை நிறுவினான் செங்கிஸ்கான்.

மாபெரும் பேரரசு

மங்கோலிய பேரரசு பசிபிக் கடலில் இருந்து கிழக்கு ஐரோப்பியா வரை கைப்பற்றி உலகின் மாபெரும் சாம்ராஜ்யமாக திகழ்ந்தது.

கைப்பற்றிய

செங்கிஸ்கான்-ன் ஆட்சியில் சீனா, கொரியா, பாகிஸ்தான், ஈரான், ஈராக், துருக்கி, ஆப்கானிஸ்தான், கஜகஸ்தான், ஆர்மேனியா, ஜியார்ஜியா, குவைத், உஸ்பெகிஸ்தான் போன்ற பல நாடுகளை ஆட்கொண்டிருந்தது.

குழந்தை செல்வம்

செங்கிஸ்கான் ஒரு ஆணின் வலிமை அவனது குழந்தைகள் பால் என்ற மனப்பான்மை கொண்டிருந்தான். இவனுக்கு ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட மனைவிகள் இருந்தனர். அவர்கள் அனைவருக்கும் பல குழந்தைகள் இருந்தனர்.

செங்கிஸ்கான் வழித்தோன்றல்கள்

ஆசியாவில் இருக்கும் 8% ஆண்கள் செங்கிஸ்கான்-ன் வழிதோன்றல்கள் என ஓர் புள்ளிவிவரம் கூறுகிறது.

படுகொலை

ஹிட்லரை விட பலமடங்கு மக்களை படுகொலை செய்திருக்கிறது செங்கிஸ்கானின் இராணுவம். ஒரு சில நாடுகளை கைப்பற்றும் போது ஒட்டுமொத்த மக்களையும் கொன்று குவித்துள்ளான் செங்கிஸ்கான். இவனது ஆட்சிக்கு கீழ் 40 மில்லியன் மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்.

செங்கிஸ்கான் கல்லறை

மங்கோலியாவில் குறிக்கப்படாத இடத்தில், எங்கிருக்கிறது என தெரியாமலேயே இருக்கிறது செங்கிஸ்கானின் கல்லறை. இவனது மரணம் எப்படி நேர்ந்தது என்றும் இன்றளவும் தெளிவான கருத்துக்கள் ஏதும் இல்லை.

நதி

செங்கிஸ்கானின் ஆசைக்கினங்க அவனது கல்லறை ஓர் நதியின் அடியில் இருக்கிறது என்றும், இதனால் யாரும் தொந்தரவு செய்யாத அளவு கல்லறை காக்கப்படும் எனவும் செங்கிஸ்கான் கருதியதாக ஒரு வரலாற்றி கூற்று நிலவி வருகிறது.

மத சகிப்புத்தன்மை

ஆச்சரியமாக செங்கிஸ்கானிடம் மத சகிப்புத்தன்மை இருந்தது எனவும். பல மதங்களின் மீது செங்கிஸ்கான் மதிப்பு வைத்திருந்தான் எனவும் கூறப்படுகிறது. இஸ்லாம், புத்த மதக் கொள்கை, கிறிஸ்துவம் என பல மதங்கள் பற்றி கற்று அறிந்திருந்தான் செங்கிஸ்கான்.

இன வேறுபாடு

இன வேறுபாடு கொள்கை கொண்டிருந்தான் செங்கிஸ்கான். தனது ஆட்சிக்கு கீழ்ப்பட்டு இருந்த நகரங்களை வேறு இனத்து ஆட்களையும் ஆட்சி செய்ய அனுமதித்தான்.

பெண்களுக்கு மரியாதை

செங்கிஸ்கானின் மங்கோலியா சாம்ராஜ்யத்தில் பெண்கள் மரியாதையுடன் நடத்தப்பட்டனர்.

சகோதரனை கொலை

தனது பத்து வயதில் தன் உடன் பிறந்த சகோதரனையே கொலை செய்தான் செங்கிஸ்கான்.

செங்கிஸ்கானின் பேரரசி

தனது 16வது வயதில் செங்கிஸ்கான் போர்டே (Borte) எனும் மங்கோலிய மலைவாழ் இன பெண்ணை திருமணம் செய்துக் கொண்டான். இதற்கு பிறகு எண்ணற்ற பெண்களை இவன் திருமணம் செய்து கொண்டாலும், போர்டே தான் இவன் ஆட்சியில் பேரரசியாக இருந்தாள்.

மேற்கித்ஸ்

மேற்கித்ஸ் என்பவர்கள் போர்டேவை கடத்தி சென்றனர். கேரீத் என்பவர்களது உதவியோடு போர்டேவை காப்பாற்றி வந்தான் செங்கிஸ்கான். இதன் பிறகு தான் செங்கிஸ்கானின் முதல் மகன் பிறந்தான்.

செங்கிஸ் பொருள்

செங்கிஸ்கானின் இயற்பெயர் தெமுஜின் (Temujin). செங்கிஸ் என்றால் சரி , உண்மை என்று பொருள், மேலும் இதற்கு கடல் என்ற பொருள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இறப்பு

பல போர்கள், வெற்றி என தொடர்ந்து சண்டையிட்டு வந்த செங்கிஸ்கான் 1227-ம் ஆண்டு மரணமடைந்தான். ஒருசில கூற்றுகள் இவன் குதிரையால் தூக்கியெறியப்பட்டு இறந்தான் என கூறினும், செங்கிஸ்கானின் மரணத்தை பற்றிய தெளிவான தகவல்கள் ஏதும் இல்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Facts About Genghis Khan

Do you know about the Facts About Genghis Khan? read here in tamil.
Story first published: Friday, February 26, 2016, 12:31 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter